எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண் டும் என்று டோக்கியோ மேயர் உத்தரவிட்டுள் ளாரே?
அது டோக்கியோ அல்ல டோயேக்கே. ஜப்பா னின் சிறிய நகரங்களில் ஒன்று. விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராத மோ, சிறைத்தண்டனையோ கிடையாது. ஆகவே, மேயரின் உத்தரவு அக்கறையின் பேரிலான ஆலோசனை மட்டுமே.
சிவா, கல்லிடைக்குறிச்சி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை அலுவலகத்தில் புகுந்து திருடிவிட்டார்கள் என புவனகிரி தாசில்தார் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பது குறித்து?
கொடுக்கப்பட்ட புகார் மனுக்களில் உள்ள குறைகளை எல்லாம் தி.மு.க.வினர் தீர்த்துவைத்து ஸ்டாலின் நல்ல பெயர் எடுத்துவிடுவார் என்ற அச்சத் தில் எதிர்க
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண் டும் என்று டோக்கியோ மேயர் உத்தரவிட்டுள் ளாரே?
அது டோக்கியோ அல்ல டோயேக்கே. ஜப்பா னின் சிறிய நகரங்களில் ஒன்று. விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராத மோ, சிறைத்தண்டனையோ கிடையாது. ஆகவே, மேயரின் உத்தரவு அக்கறையின் பேரிலான ஆலோசனை மட்டுமே.
சிவா, கல்லிடைக்குறிச்சி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை அலுவலகத்தில் புகுந்து திருடிவிட்டார்கள் என புவனகிரி தாசில்தார் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பது குறித்து?
கொடுக்கப்பட்ட புகார் மனுக்களில் உள்ள குறைகளை எல்லாம் தி.மு.க.வினர் தீர்த்துவைத்து ஸ்டாலின் நல்ல பெயர் எடுத்துவிடுவார் என்ற அச்சத் தில் எதிர்க்கட்சியினர் இந்த வேலையில் இறங்கி யிருப்பார்களோ!? இல்லை, கொடுத்த மனுக்களை குப்பைத் தொட்டியில் கடாசிவிட்டு குட்டு அம்பலப்பட்டுவிடும் என காவல் நிலையம் போனார்களா?
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி
பூரி ஜெகநாதர் கோவில் ரதத்தின் 3 சக்கரங்கள் பார்லிமெண்டில் நிறுவப்பபட உள்ளது குறித்து?
இந்திய தேசியக் கொடியில் இருக்கிற அசோகச் சக்கரம் எனும் தர்மச் சக்கரத்தினை சரிவர ஓட்டினாலே போதும். தர்மம் நொண்டியடிக்கும் போதுதான் இதர சக்கரங்களை நாடாளுமன்றத்துக் குக் கொண்டுவந்து விளம்பரம் தேடவேண்டிய அவசியம் எழுகிறது.
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது பற்றி?
நல்ல தீர்ப்புதான். ஆனால் ட்ரம்ப் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். அதில் தீர்ப்பு வர ஆறேழு மாதங்கள் ஆகும். அங்கும் இதே தீர்ப்புவந்தால், அதன் பிறகுதான் இந்தத் தீர்ப்பின் பயன் இந்தியர்களுக்குக் கிடைக்கும்.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
தான் ஆட்சிக்கு வந்தால் மரங்களை யாராவது வெட்டினால், அவர்களை கொலைவழக்கில் சிறையில் அடைப்பேன் என்று மரங்கள் மாநாட்டில் பேசியுள்ளாரே சீமான்..?
மாடு போய் மரம் வந்திருக்கிறது. சீமான் தன் நெஞ்சில் கைவைத்து, தன் வீட்டில் மரத்தாலான வீட்டு உபயோகப் பொருட்களே இல்லையென்று சொல்லமுடியுமா? புதிதாக மரக்கன்று வைக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போய் மேய்வது ஆடாகவோ, மாடாகவோதான் இருக்கும். அந்த இக்கட்டான நேரத்தில் சீமான் மாட்டின் பக்கம் நிற்பாரா... இல்லை மரத்தின் பக்கம் நிற்பாரா?
வாசுதேவன், பெங்களூரு
சிறப்பாகச் செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு இடமில்லை என்று அன்புமணி கூறியுள்ளாரே?
அவர் பட்டியல், அவரது தரவரிசை. நாமென்ன சொல்லமுடியும்! ஆனால் அடுத்த கேள்வியை அன்புமணிக்கு அனுப்பி, யோகிக்கு அவர் எந்த இடம் கொடுக்கிறார் எனக் கேட்டு பதில்பெற்றால் அன்புமணியின் தர அளவீடுகளை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
சிறந்த மாநில முதல்வர் பட்டியலில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் வகிப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறுகிறதே?
இந்தியா டுடே, முதல்வர் யோகியின் எந்தக் குணங்களைப் பார்த்து முதலிடம் தந்ததென நமக்குத் தெரியவில்லை. சிறுபான்மையினரை துன்புறுத்து வதும், கட்சிக்கு வேண்டாதவர்கள், எதிர்க்கட்சி யினர் வீட்டை இடித்து நிரவுவதும், புல்டோசர் அரசியல் செய்வதும்தான் பட்டியலில் முதலிடத்துக்கு வருவதற்கான வழியோ... என்னவோ?
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
கலவரம் நடந்து முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மோடி மணிப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளதே?
இப்பவும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக மணிப்பூர் செல்லவில்லை மோடி. அங்கே இரு முக்கிய ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கூடவே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கருணாகரனாகக் காட்டிக்கொள்வார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக முகாம்களிலே வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான பேருக்கு சொல்வதற்கான பதிலெதுவும் மோடியிடம் இருக்கிறதா!