மாவலி பதில்கள் 06.08.25

mavali

 


குடந்தை பரிபூரணன், கும்பகோணம்

பதிவு அஞ்சலுக்கு மூடுவிழா வாமே?

mavali1

தந்தியின் சோலியை முடித் தார்கள். இப்போது பதிவு அஞ்சல்,         பின் விரைவு அஞ்சல் என அஞ்சல் துறையை கருணைக்  கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி செய்தியை மொத்தமாகச் சொன்னால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று தவணை முறையில் தயார்படுத்து கிறார்கள்.

கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி

ஒரு நிமிடத்தில் 1,50,000 பேர் முன்பதிவு செய்யும் வசதி வரப்போகிறதாமே?

வசதியிருக்கட்டும். இத்தகைய வசதிகள் வந்தால் ரயில்களில் கொஞ்சநஞ்சம் தனிநபர்கள் பதிவுசெய்யும் இருக்கைகளையும் தனியார் நிறுவனங்கள் வளைத்துக்கொள்ளும். நீங்களும் நானும் ட்ராவல் ஏஜென்சிக்கான கமிஷன் கட்டணத்தையும் சேர்த்துக் கட்டி ரயிலில் பயணிக்கவேண்டியதுதான். 

த.சத்தியநாராயணன், அயன்ப

 


குடந்தை பரிபூரணன், கும்பகோணம்

பதிவு அஞ்சலுக்கு மூடுவிழா வாமே?

mavali1

தந்தியின் சோலியை முடித் தார்கள். இப்போது பதிவு அஞ்சல்,         பின் விரைவு அஞ்சல் என அஞ்சல் துறையை கருணைக்  கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி செய்தியை மொத்தமாகச் சொன்னால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று தவணை முறையில் தயார்படுத்து கிறார்கள்.

கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி

ஒரு நிமிடத்தில் 1,50,000 பேர் முன்பதிவு செய்யும் வசதி வரப்போகிறதாமே?

வசதியிருக்கட்டும். இத்தகைய வசதிகள் வந்தால் ரயில்களில் கொஞ்சநஞ்சம் தனிநபர்கள் பதிவுசெய்யும் இருக்கைகளையும் தனியார் நிறுவனங்கள் வளைத்துக்கொள்ளும். நீங்களும் நானும் ட்ராவல் ஏஜென்சிக்கான கமிஷன் கட்டணத்தையும் சேர்த்துக் கட்டி ரயிலில் பயணிக்கவேண்டியதுதான். 

த.சத்தியநாராயணன், அயன்புரம்

நீதி, நேர்மை, நியாயம் இவை மூன்றும் எப்போது பயந்து ஒளிந்துகொள்கின்றன? 

நமது பேராசை, வக்கிரம், பழியுணர்வு போன்ற குணங்கள் விழித்தெழும்போதுதான்.


மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

அண்ணா பெயரைச் சொல் லும் தகுதியை தி.மு.க. இழந்து விட்டது என்கிறாரே அன்புமணி?

அதிருக்கட்டும்,… ராமதாஸ் எனும் பெயரை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று அன்புமணியின் தந்தை சொல்கிறாரே. அதைப் பற்றி என்ன நினைக்கிறாராம் அன்புமணி?


வண்ணை கணேசன், கொளத்தூர்

பீகாரில் ஆம்புலன்ஸில் செல்லும்போதே பாலியல் கொடூரம் நடந்துள்ளதே?

குழந்தை முதல் கிழவி வரை பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்து கிறார்கள். கருவறையும் கல்லறையும் மட்டும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம்போல. இதில் அடுத்தகட்டமாக உடல்நலமில்லாமல் மருத்துவமனைக்குச் செல்லும் பெண்களையும் விடுவதில்லை என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள் காமுகர்கள். சமயங்களில் சட்டத்தைத் தூக்கி தூர வைத்துவிட்டு, இதுபோன்ற முற்றிய காமுகர்களுக்கு அரபு நாடுகளில் தருவது போன்று உடனடி மரண தண்டனை தந்துவிடலாம் என்று எண்ணவைக்கிறார்கள்.


நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி 

குஷ்புவுக்கு பா.ஜ.க. துணைத் தலைவர் பதவி வழங்கி விஜயதாரணியை பழிவாங்கி யிருப்பதன் அர்த்தம் என்ன?

அது பழிவாங்கல் என யார் சொன்னது? குஷ்பு 2020-ல் பா.ஜ.க.வுக்கு வந்தார். விஜயதாரணி 2024-ல். இருவருக்கும் 4 வருட கால வித்தியாசம் இருக்கிறதல்லவா! இதற்கு கோபித்துக்கொண்டு இன்னொரு கட்சி போனால், இன்னும் பெயர் கெடும்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என வேலையைப் பார்க்கவேண்டியதுதான். என்ன, கன்னியாகுமரி காங்கிரஸ் பிரமுகர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். அதைப் பார்த்தும் பார்க்காமல் நகர்ந்துவிடவேண்டும்.


மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிவு என்பது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்கிறார் கடம்பூர் ராஜு,… வரலாற்றுப் புரட்சி என்கிறார் ஓ.பி.எஸ்...?

அப்படியெனில் கடம்பூர் ராஜுவை, பா.ஜ.க.வின் ஆக்டோபஸ் கரங்கள் வளைக்கின்றன என்று அர்த்தம். இ.பி.எஸ். உஷாராக இருக்கவேண்டியதுதான். கோமாவிலிருந்து எழுந்தவர், இடையில் நினைவில்லாமல் இருந்த வருடங்களை மறந்து கேள்வி கேட்பதுபோல், கல்வி நிதி தராத பா.ஜ.க.வுக்கு எதிராக இப்போதுதான் புரட்சி மோடுக்கு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ்.. இப்போது ஜெயலலிதாவின் வரலாற்றுப் புரட்சி தீர்க்கதரிசனத்தையும் கண்டுகொண்டிருக்கிறார்.

ஆர். சங்கர், தென்காசி

பொய் பேசுவதில் என்ன கெடுதல்?

அது அம்பலமாகிவிடும் என்பதுதான். சமீபத்தில் ஆஜ் தக் சேனலில் ஒரு நேர்காணல். நேர்காணல் செய்தவரிடம் தனது கிரிக்கெட் ஆர்வம் குறித்து வெளிப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, ரவிசாஸ்திரி 1985 ரஞ்சி ட்ராபி போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்ததை, தனது பக்கத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததாக வும், ஆறாவது சிக்சர் அடித்ததும் அதைக் கொண் டாடியதாகவும் அடித்துவிட்டார். நேர்காணல் கண்டவர் கூடவே சேர்ந்து பிரமாதம் மேடம். எக்ஸலண்ட் மேடம் என்றபடி கடந்துவிட்டார். ஆனால் சமூக ஊடகங்களில் அந்த ரஞ்சி ட்ராபி மேட்ச் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாக வில்லை. பொய்களை அடித்துவிடுவது பா.ஜ.க.வின ரின் ரத்தத்திலேயே ஊறிய விஷயம் போலிருக்கிறது என ட்ரோல் செய்து வறுத்தெடுத்துவிட்டார்கள்!

nkn060825
இதையும் படியுங்கள்
Subscribe