என். இளங்கோவன், மயிலாடுதுறை
பேசுவது மேட் இன் இந்தியா, பயன்படுத்துவது பி.எம்.டபிள்யூ., மெர்சிடெஸ் கார்கள் மற்றும் வெளிநாட்டு பேனாக்கள், கடிகாரங்களா என பிரதமர் மோடியைக் கலாய்த்துள்ளதே காங்கிரஸ்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavali_441.jpg)
ஏற்றுமதி அதிகமாகவும், இறக்குமதி குறைவாக வும் செய்யும் சில நாடுகள் சீனா, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி. இந்தியா ஏற்றுமதியைவிட இறக்குமதியே அதிகம் செய்கிறது. அதனால் உள்ளூர் பொருட்களையே பயன்படுத்தச் சொல்லியிருப்பார் பிரதமர். அதற்கு உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும். பிற நாடுகளைவிட குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து தரவேண்டும். அதன்பிறகு மக்களிடம் சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்த கோரிக்கை வைக்கவேண்டும். அதற்கும் முன்பாக, காங்கிரஸ் சொல்வதுபோல முன்னுதாரண மாக சுதேசிப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி விட்டு, மக்களுக்கும் அந்த கோரிக் கையை விடவேண்டும் பிரதமர்.
எஸ். எமிலிஜோலா, பட்டிவீரன்பட்டி
ஒரு கட்சி வெற்றி பெற்ற வுடன், "இது மக் கள் வெற்றி' என்று சொல்வதன் பொருள் என்ன?
வேறொன்றுமில்லை. தன்னடக்கமாக இருக் கிறோம். வெற்றியை தலைக்கு தூக்கிவைத்து ஆடவில்லை என்று காட்டுவதற்காக சொல் லப்படுவதுதான். எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் மக்கள் வெற்றி என்கிறார் கள். ஆனால் ஜனநாயகத் தில் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. அப் படியென்றால் அது மக்கள் வெற்றியா... அரசியல்வாதிகளின் வெற்றியா எனப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது பற்றி?
உண்மைதான். இந்தியாவின் ஜி.டி.பி. 4.187 ட்ரில்லியன் டாலர்கள். ஜப்பானின் ஜி.டி.பி. 4.186 ட்ரில்லியன் டாலர்கள். வெறும் .001 ட்ரில்லியன் வித்தியாசம்தான். ஆனால் ஜப்பானின் மக்கள் தொகை வெறும் 12 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. கிட்டத்தட்ட ஒரே தொகை யை 12 கோடி பேர் பங்கிட்டுக் கொள்வதற்கும், 140 கோடி பேர் பங்கிட்டுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா! அங்கே ஜப்பான் நம்மை விஞ்சிவிடும். ஒரு சராசரி இந்தியனின் வருவாய் 20,000 ரூபாய். ஒரு ஜப்பானியரின் சராசரி வருவாய் 31 லட்சம் ஜப்பானிய யென்.
ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு
எல்லாவற்றிலும் முதலிடம் என்னும் தமிழகம் கடனிலும் முதலிடம்தானே?
உண்மைதான். பொருளாதார வளர்ச்சி யிலும் முதலிடம். கடன் அதிகம் பெற்றதிலும் முத லிடம். இந்தியாவிலேயே தமிழகத்தின் கடன்தொகைதான் அதிகம். 8.3 லட்சம் கோடி. உ.பி., மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் அடுத் தடுத்த இடங்களில் வருகின்றன. பொருளாதார வளர்ச்சியில் முன்னணியிலிருக்கும் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளும் அதிக கடன் வாங்கிய நாடுகள்தான். வாங்கிய கடன் ஆக்கப்பூர்வமாய் செலவிடப்பட்டால் சரிதான்!
வாசுதேவன், பெங்களூரு
நமது நாட்டில் வரிசையில் நிற்பதற்கும், அயல்நாட்டில் வரிசையில் நிற்பதற்கும் வித்தியாசம்?
நமது நாட்டில் வரிசையில் நிற்கும்போதே முறையின்றி முந்திச்செல்ல முயல்வார்கள். யாரோ ஒருவரைக் காட்டி, அவரிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தேன் என இடையில் நுழைவார்கள். எவர் முந்தி வந்தார்களோ, அதன்படி செல் வதற்காகத்தான் வரிசை ஏற்படுத்தப்படுகிறது. அதை எப்படியெல்லாம் குலைக்கமுடியுமோ, அப்படியெல்லாம் குலைப்பார்கள். காவலர்கள் நின்று சீர்படுத்தும்போதுகூட இந்த இடைநுழைதல் நடக்கும். பிற நாடுகளில் இது குறைவு.
சிவா, கல்லிடைக்குறிச்சி
விஜய் பச்சா என்றால் உதயநிதி சோட்டா பச்சா என விஜய் கட்சி செயலாளர் கூறியிருக்கிறாரே?
ஒருவர் 50-ஐ நெருங்குபவர். மற்றவர் 50-ஐ தொட்டுவிட்டவர். இருவரில் எவருமே குழந்தைப் பிள்ளை இல்லை. ஆனால் வயதுக்கேற்ற முதிர்ச்சியில்லாமல் பேசும் எவரும் சிறியவர்தான்! தேர்தல் வருகிற தல்லவா? யார் சிறியவராக, யார் பெரியமனிதத் தன்மை யோடு நடந்துகொள் கிறார்களென பார்ப்போம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/mavali-t.jpg)