Advertisment

மாவலி பதில்கள் 04.03.26

mavali


தே. மாதவராஜ், கோயமுத்தூர்-45

முதல்வர் ஸ்டாலின் எந்த நம்பிக்கையில் மீண்டும் ஆட்சியமைப்போம் என்கிறார்?

Advertisment

ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என அ.தி.மு.க. கட்சியிலிருந்த பலரையும் பிற கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட்டு அலட்சியமாக இருக்கும் எடப்பாடியின் டோன்ட் கேர் மனோபாவம், உரிமைத் தொகை முதல் பல திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றியாகிவிட்டது, இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி முகவர் மாநாடு என போடவேண்டிய மாநாடுகளையெல்லாம் போட்டாகி விட்டது. இனிவருவது வெற்றியாகத்தானே இருக்கும் என்ற தன்னம்பிக்கையால்தான்! 

Advertisment

கே.வல்லவன், பேரணாம்பட்டு

மகளிர் உரிமைத் தொகை குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், “"சக்களத்தியைக் கூப்பிட்டுப் போய் ஜாலியாக இருங்கள்'’என்று பேசியிருப்


தே. மாதவராஜ், கோயமுத்தூர்-45

முதல்வர் ஸ்டாலின் எந்த நம்பிக்கையில் மீண்டும் ஆட்சியமைப்போம் என்கிறார்?

Advertisment

ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என அ.தி.மு.க. கட்சியிலிருந்த பலரையும் பிற கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட்டு அலட்சியமாக இருக்கும் எடப்பாடியின் டோன்ட் கேர் மனோபாவம், உரிமைத் தொகை முதல் பல திட்டங்களை கச்சிதமாக நிறைவேற்றியாகிவிட்டது, இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி முகவர் மாநாடு என போடவேண்டிய மாநாடுகளையெல்லாம் போட்டாகி விட்டது. இனிவருவது வெற்றியாகத்தானே இருக்கும் என்ற தன்னம்பிக்கையால்தான்! 

Advertisment

கே.வல்லவன், பேரணாம்பட்டு

மகளிர் உரிமைத் தொகை குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், “"சக்களத்தியைக் கூப்பிட்டுப் போய் ஜாலியாக இருங்கள்'’என்று பேசியிருப்பது சரியா?

அவர் கையில் காசுவந்தால் என்ன செய்வாரோ, அதை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்போல! 


மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

உக்ரைன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமா என்கிறாரே விளாடிமிர் ஸெலன்ஸ்கி?

ஒரு பக்கம் ரஷ்யா, இன்னொரு பக்கம் அமெரிக்கா... நடுவில் உக்ரைன் என்ன செய்யமுடியும்? இதுவரையிலான போரிலே உக்ரைனின் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகிவிட்டன. ஏதோ ஒருபக்கம் விட்டுத்தந்து, சமாதானம் வருமென்றால் அதுதானே உக்ரைன் மக்களுக்கு அதன் அதிபர் தரும் நற்செய்தியாக இருக்கமுடியும்.

ஆ.ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்கள் என அறிவித்து களத்தில், கூட்டணியில்லாமல் முந்திநிற்கிறாரே சீமான்?

பாதிக்குப் பாதி இடங்கள் பெண்களுக்கு என அறிவிப்பதெல்லாம் நல்ல யோசனைதான். மற்றபடி கூட்டணியில்லாமல் சீமான் என்ன சாதித்தார்? வருடா வருடம் தன் கட்சிக்காரர்களின் டெபாஸிட் பணத்தையும், பிரச்சாரத்துக்குச் செலவிடும் பணத்தையும் வீணடித்ததன்றி வேறென்ன மாற்றம்வந்தது? சீமானின் கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சிக்குவர முப்பது வருடமாகுமா? அதுவரை தொண்டர்களின் நிலையை எண்ணிப் பார்த்தாரா?

த.சத்தியநாராயணன், அயன்புரம்

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஆதவ் அர்ஜுனா சொல்ல, பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என நாஞ்சில் சம்பத் கூறுகிறார். இரண்டில் எது நடக்கும்?

யாருக்குத் தெரியும்? மதுரை த.வெ.க. கூட்டத்தில் சொன்னதுபோல் எல்லா தொகுதிகளிலும் நான் நிற்பதாக நினைத்து வாக்களியுங்கள். ஆனால் நான் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல், பனையூர் வீட்டுக்குள்ளே பத்திரமாக உட்கார்ந்துகொள்வேன் என்றுகூட சொல்லிவிடலாம்.


எஸ்.இளையவன், சென்னை 

காதலர் தினத்தன்று ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 1,042 சாக்லேட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி வெளியிட்ட அறிக்கை கூறுகிறதே? 

இந்தியாவை சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்வதில் தப்பேயில்லை. காதலியிடம் "நீயே ஐம்பது கிலோ சாக்லேட். தனியா உனக்கு சாக்லேட் வேணுமா?' என்று உருட்டி, காதலைச் சொல்லி அவளுக்கும், உங்களுக்கும் சர்க்கரை நோய் வராமல் காப்பாற்றுகிற வழியைப் பாருங்கள்!

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

இந்தியா முழுவதும் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைக்காக காத்திருந்து இறந்தவர் களின் எண்ணிக்கை 82,285 பேர் என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறதே...?

என்ன செய்ய முடியும்? ரத்தத்தைத் தானம் தரலாம். கண் போன்ற பல உறுப்புகளை உயிருடன் இருப்பவர்கள் தானம் தரமுடியாதல்லவா! மனித உறுப்புகளை தொழிற்சாலையில் தயாரித்துவிட முடியும் என்கிற அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் வரும்போதுதான் இத்தகைய மரணங்களைத் தடுக்கமுடியும்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

இந்தியாவின் ஏ.ஐ. சாதனைகளைப் பார்த்து உலக தலைவர்கள் பிரமிப்பு என்று மோடி கூறியது நிஜமா?

இந்தியாவின் மானம் ஏ.ஐ. இம்பேக்ட் மாநாட்டில் ஏலம்போனது மட்டும்தான் நிஜம். மத்ததெல்லாம் பிரதமரின் உடான்ஸ். ஏ.ஐ.யில் இந்தியாவில் 3 செயலிகள் பரிசோதனையில் உள்ளதாகக் கூறப்பட்டது. அவை சந்தைக்குவந்து அமெரிக்க, சீன, மற்ற நாடுகளின் செயலியோடு போட்டியிட்டு குறிப்பிட்ட மார்க்கெட்டைப் பிடித்தால்தான் ஆச்சு. அதுவரைக்கும் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய அவமானம் மட்டும்தான் இந்தியாவின் ஏ.ஐ. மாநாட்டின் கணக்கில் வரவுவைக்கப்படும்.

nkn040326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe