அன்னூரார், பொன்விழி அன்னூர்
"நான் ஸ்விஸ் வங்கியில் கணக்கு துவங்கலாம் என்றிருக்கிறேன். அதற்கான வழிமுறை என்ன?'
அது ஒன்றும் பெரிய வித்தையல்ல,… முதலில் ஸ்விஸ் வங்கியில் கணக்குத் துவங்கி இருப்பு வைக்குமளவுக்கு சம்பாதியுங்கள். இல்லையென்றால் அரசியல்வாதியாகிவிடுங்கள். ஸ்விஸ் வங்கியில் போடுமளவுக்கு வருமானம் வரத் தொடங்கிவிடும்.
வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்
"ஊழல் செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்கிறாரே, விஜய்?
பிறகென்ன, வரும்போதே எப்படியாவது இத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிப்பதுதான் லட்சியம் என்றா சொல்லிவிட்டு வரமுடியும்? விஜய் மக்கள் பணிக்காகவே வருவதாக இருக்கட்டும்! இப்போது அவரை வைத்து தயாரித்த தயாரிப்பாளருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டுமல்லவா? அதற்கே வாய்திறக்
அன்னூரார், பொன்விழி அன்னூர்
"நான் ஸ்விஸ் வங்கியில் கணக்கு துவங்கலாம் என்றிருக்கிறேன். அதற்கான வழிமுறை என்ன?'
அது ஒன்றும் பெரிய வித்தையல்ல,… முதலில் ஸ்விஸ் வங்கியில் கணக்குத் துவங்கி இருப்பு வைக்குமளவுக்கு சம்பாதியுங்கள். இல்லையென்றால் அரசியல்வாதியாகிவிடுங்கள். ஸ்விஸ் வங்கியில் போடுமளவுக்கு வருமானம் வரத் தொடங்கிவிடும்.
வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்
"ஊழல் செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்கிறாரே, விஜய்?
பிறகென்ன, வரும்போதே எப்படியாவது இத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிப்பதுதான் லட்சியம் என்றா சொல்லிவிட்டு வரமுடியும்? விஜய் மக்கள் பணிக்காகவே வருவதாக இருக்கட்டும்! இப்போது அவரை வைத்து தயாரித்த தயாரிப்பாளருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டுமல்லவா? அதற்கே வாய்திறக்காமல் ஊமையாய் இருக்கும் இவர், எப்படி மக்கள் பணிகளுக்கு வாய்திறப்பார் என நம்பமுடியும்.
க.அருச்சுனன், செங்கல்பட்டு
கூட்டணியில் சாதித்தது அ.தி.மு.க.வா, அ.ம.மு.க.வா?
சங்காத்தமே வேண்டாமென ஒதுங்கி யிருந்தும் டெல்லிக்கு இழுத்து, வியர்வையை ஒற்ற கர்சீஃபை எடுக்கவைத்து, கூட்டணிக்கு தலைமை நான்தான் என எடப்பாடி சொன்னபோதும், அனைத்தையும் பேசிமுடித்தார் பியூஷ்கோயல். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு தற்கொலை செய்துகொள்வேன் என்றார் தினகரன். அவரே, இப்போது எடப்பாடியை பங்காளி என்கிறார். மொத்தத்தில் சாதித்தது பா.ஜ.க.தான்.
சிவா, கல்லிடைக்குறிச்சி.
நானும் என் மனைவியும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சரத்குமார் பகிரங்கமாக அறிவித்திருக் கிறாரே?
எவ்வளவு நல்ல மனம் பார்த்தீர்களா! விருதுநகரில் வாங்கிய அடி அப்படி! பேசாமல் பிரச்சாரத்துக்கு பேமெண்ட் வாங்கிக்கொண்டு, ஒன்றோ இரண்டோ சீட் கிடைத்தால் ஆதரவாளர்களின் தலையில் கட்டிவிட்டு ஜாலியாக தேர்தல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டியதுதான் என்கிற யோசனை பிரமாதம்தான்.
க.சண்முகம், அம்பாசமுத்திரம்.
இனி கருத்துவேறுபாடில்லை என சசிதரூர் அளித்த உத்தரவாதம் நம்பகமானதுதானா?
அடுத்த பிரச்சனை வரும்வரை நம்பகமானதுதான். சிலர் நாய்வால் போல, நிமிர்த்தவே முடியாது. வேறிடத்தில் போய் வாலாட்டுவாயா என பேசாமல் அறுத்தெறிந்து விடலாம்.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக மாமல்லன் நீர்த்தேக்கமாமே?
எத்தனை நீர்த்தேக்கங்கள் இருக்கட்டுமே! அரசு, மக்களை மழைநீர் சேமிப்பு மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். சிறு துளி பெருவெள்ளம். வாய்ப்புள்ள ஒவ்வொரு வீட்டிலும் நீர் அறுவடை நடந்தால் நிலத்தடி நீரும் உயரும். தண்ணீர்ப் பற்றாக்குறையும் வராது. கடல்நீர் நிலத்தடி நீருடன் கலப்பதையும் முடிந்தவரை தடுக்கலாம்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
2025-26-ம் நிதியாண்டுக்கான பொருளா தார ஆய்வறிக்கையானது, இந்தியா பிரகாசமான ஒளியில் இருப்பதைக் காட்டுவதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளாரே?
பொருளாதார ஆலோசகர் பாஸிட்டிவாகத்தான் பேசுவார். டாலருக்கெதிராகச் சரியும் இந்திய ரூபாயின் மதிப்பைப் பார்த்தால், இந்தியப் பொருளாதாரம் கும்மிருட்டை நோக்கி விரைவதாகத் தெரிகிறது என்றுகூடத்தான் வேறுசில பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
தி.மு.க. தீய சக்தி, அ.தி.மு.க. ஊழல் சக்தி என்று கூறும் விஜய், பா.ஜ.க. என்ன சக்தி என்று சொல்வாரா?
பேசாமலே பேண்ட் கிழிந்துகொண்டிருக்கிறது. அவரை பேசவைத்து வதைக்க வேண்டுமென்பதுதான் உங்கள் எண்ணமா?
ஆர். பழனிக்குமார், உளுந்தூர்பேட்டை
எடப்பாடி பழனிசாமி திடீரென விழித்துக்கொண்டு, இறந்தவர்களின் உறவினர்களை பனையூருக்கு வரவழைத்து ஆறுதல் சொல்வதுதான் முறையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே?
திடீரென்றெல்லாம் இல்லை. இதுநாள்வரை, ஒரு வேளை த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டிவந்தால், நமது விமர்சனம் கூட்டணிக்கு இடைஞ்சலாகக்கூடாதே என்று நாவடக்கம் காட்டிவந்தார். இனி, த.வெ.க. நம் அணியில் இல்லையென நாக்கை சவுக்கென வீசுகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/mavali2-2026-02-02-16-28-28.jpg)
மோகன், வேளச்சேரி
கடந்த மாவலி கேள்வி-பதில்ல அமிதாப்பச்சன் வீட்டு தங்க டாய்லட் பத்தி செய்தி வெளியிட்டிருந்தீங்க, படத்த வெளியிடலையே?
உங்க விருப்பத்துக்கிணங்க மேலே படத்தை வெளியிட்டிருக்கோம், நல்லா பார்த்துக்கங்க.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us