ஆர்.அஜிதா, கம்பம்
அமெரிக்க அதிபர் நான்கு முறை போனில் அழைத்தும் பிரதமர் மோடி அந்த அழைப்புகளைப் புறக்கணித்துவிட்டாராமே?
இந்த விஷயம் ட்ரம்புக்குத் தெரிந்தால், போனை எடுக்காததற்காக 15 சதவிகிதம் டேரிஃப் போட்டுவிடப்போகிறார்.
அ.யாழினிபர்வதம், சென்னை.
முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்ப தாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?
ஏற்கெனவே வாக்குத் திருட்டு விவகாரம், குஜராத்தில் பெயர்தெரியாத லெட்டர் பேட் கட்சி களுக்கு 4,300 கோடி தேர்தல் நிதி, நட்டா மகனின் எத்தனால் நிறுவனம் ஒரேயாண் டில் 17 கோடியிலிருந்து 514 கோடி கன்னா பின்னா லாபம் பார்த்தது என எதிர்க் கட்சிகள் சிலம்பு சுற்றிக்கொண்டிருக் கின்றன. பதவியை ராஜினாமா செய்த கையோடு, தன்கரும் நாலைந்து உண்மை களை உடைத்தால் என்ன செய்வதென்ற பயத்தில் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி யிருப்பார்கள்.
சின்னஞ்சிறுகோபு, சிகாகோ
"ஏற்கனவே திரு மணமான ஆணுடன் ஒரு பெண் விரும்பி னால் வாழலாம். அதை சட்டத்தால் தடுக்க முடியாது' என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி?
அந்த ஜோடி திருமணம் செய்தால் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்ததற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். திருமணம் செய்யாமல், இணைந்து வாழ்ந்தால் என்ன செய்யமுடியும்?
வி.எம்.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்.
அ.தி.மு.க.வைப்போல் ஆளும் தி.மு.க. ஏன் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை?
ஆட்சியிலிருக்கிற கட்சிக்கு நிர்வாகப் பொறுப்புகள் இருக்கும். கூடவே எதிர்க்கட்சி குடைச்சல்கள். எதிர்க்கட்சிக்கு இதெல்லாம் இல்லையென்பதால் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்பிவிட்டது. இருந்தும் "ஓரணியில் தமிழகம்' என தேர்தல் ஆயத்தப் பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. உரிய நேரத்தில் தி.மு.க.வும் பிரச்சாரத்துக்குக் கிளம்பிவிடும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
எதிர்காலப் போர்கள் 5 ஆண்டுகள் நடக்க வாய்ப்பிருப்ப தாக அமைச்சர் ராஜ்நாத்சிங் கூற்று?
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வல்லரசாகப் பார்க்கப் படும் ரஷ்யா, உக்ரைனுடன் போரைத் தொடங்கிவிட்டு திக்குமுக்காடி திண்டாடி வருகிறது. போர்வீரர் களுக்குக்கூட சரியாக சம்பளம் போடமுடியாமல் திணறியதாக எல்லாம் செய்திகள் வந்தன. அவர்களுக்கே அந்த நிலையென்றால், இந்தியா ஐந்தாண்டு போர் செய்தால் நமக்குக் குடிக்க நீரும் கஞ்சியும்கூட இருக்காது. அதெல்லாம் ராஜ்நாத்சிங்குக்கும் தெரியும். ஏதோ ஒரு விஷயத்திலிருந்து நம் கவனம் திரும்புவதற்காக இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை நக்சலைட்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தவர் என்கிறாரே அமித்ஷா?
போட்டி, தேர்தல் என்று வந்துவிட்டாலே சாணியடிப்புகள், அவமானப்படுத்தல், இகழ்தல் என்று வந்துவிடும்போல. அதற்கு உள்துறை அமைச்சரும் விதிவிலக்கல்ல. சல்வாஜுடும் என்ற பெயரில் போராளிகள், நக்சலைட்களைக் காட்டிக்கொடுக்க, அவர்களை அழிக்க ஒரு அமைப்பு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய சட்டவிரோத அமைப்பும் அதன் செயல்பாடும் சட்ட வரம்புக்கு அப்பாற் பட்டது. அதைத் தடைசெய்யவேண்டும் என்பதுதான் சுதர்சன ரெட்டியின் தீர்ப்பு. நல்லவேளை, சுதர்சன ரெட்டியையே நக்சலைட் என்று விமர்சிக்கவில்லையல்லவா! அவர் அதிர்ஷ்டசாலிதான்.
ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்
முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் காங்கிரஸ் -ஆர்.ஜே.டி. இடையேயுள்ள வேறுபாடு, பி.ஜே.பி.க்கு சாதகமாகிவிடாதா?
அதைப் பற்றி நீங்களும் நானும் கவலைப்பட்டு என்னாகப் போகிறது? ராகுலும் தேஜஸ்வி யாதவும் அல்லவா கவலைப்படவேண்டும்.
எச்.மோகன், மன்னார்குடி.
ஜனநாயகப் படுகொலை என்றால் என்ன?
தங்களை ஆளும் ஆட்சியாளர்களைத் தேர்வுசெய்யும் சுதந்திரம், அரசின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகம். ஆட்சியாளர்களுக்கான தேர்வில் மக்களுக்கான பங்களிப்பை ஓரங்கட்டுவது, இல்லாமல் செய்வது, ஒரு கட்சியோ, குழுவோ அதிகாரத்தை முழுமையாக தன்கீழ் கொண்டு வந்து ஜனநாயகத்தின் பிற தூண்களைப் பலவீனப்படுத்துவதுதான் ஜனநாயகப் படுகொலை. ராகுல் சொல்வதுபோல ஒரு கட்சி, ஒருபக்கம் போலியான வாக்காளர்களை உருவாக்கி, மறுபக்கம் தகுதியான வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கினால் அதுவும் ஒருவகை ஜனநாயகப் படுகொலைதான்.