வி.எம்.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்.

ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திவருகிறதே?

Advertisment

வருகிற செய்திகள் அனைத்தும் வரட்டும். தேர் தல் தேதி அறிவித்ததும் ஓ.பி.எஸ். கூட்டணியிலா, தனித்தா, தேர்தல் புறக்கணிப்பா என்பது தெளிவாகி விடும். என்ன முடிவெடுப்பதென ஓ.பி.எஸ். டென்ஷ னானால் நியாயமிருக்கிறது. நாம் டென்ஷனாகி என்ன பலன்?   

Advertisment

சிவா, கல்லிடைக்குறிச்சி. 

இந்தியாவில், சட்டம் ஒழுங்குக்கு நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என உ.பி. முதல்வர் யோகி கூறி யிருப்பது உண்மையா?

நீங்களே சந்தேக மாகத்தானே கேட்கிறீர் கள். இதை மட்டும் புதிய கோயிலில் அமர்ந்திருக்கும் ராமனும் சீதையும் கேட்டால் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்கள். கொஞ் சம் மரியாதையாக இருக்கட்டுமென, இருவ ரிடமிருந்தும் ஒதுங்கிவந்து தனியே சிரிப்பார் அனுமன். ஆட்சிக்கு எதிராகப் பேசினால், எங்கே தங்கள் கோயிலை புல்டோசரால் இடித்துவிடு வார்களோ என அவர்களே கொஞ்சம் பம்மிப்போய் தான் இருப்பார்கள். 

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

தி.மு.க. ஆட்சியை கண்டிப்பாக அகற்றியே ஆகவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு வீதி வீதியாகத் திரிகிறார்களே எதிர்க்கட்சியினர்?

ஆட்சி நாற்காலியில் அமர்ந்தவர்கள் கெட்டி யாகப் பிடித்துக்கொள்வதும், நிற்பவர்கள் எப்படி யாவது பிடுங்க முயற்சிப்பதும்தானே அரசியல் விளை யாட்டு. அதனால் எதிர்க்கட்சியினர் தங்கள் நோக் கத்தில் சரியாகத்தான் இருக்கின்றனர். தி.மு.க.வின ரும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் சரியாகத்தான் செயல்படுகின்ற னர். தேர்தல் வரும்போது, சரியாகச் சிந்தித்து ஓட்டுப்போட வேண்டிய உங்கள் கடமையைச் சரியா கச் செய்துவிடுங்கள்.

mavali1

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

பீகார் மாநிலத்தில் ஐந்து நாட்களில் பயன் பாட்டுக்கு வரவிருந்த ரோப்கார், சோதனையின் போது தூண்களுடன் சரிந்து விழுந்துள்ளதே..?

பீகார் பொதுமக்களுக்கு அதிர்ஷ்டம் கெட்டி... தப்பித்துவிட்டார்கள். ரோப் கார் வேலையை கான்ட் ராக்ட் எடுத்தவனுக்கும் ஓரளவு அதிர்ஷ்டம்தான். ஐந்து நாட்கள் தள்ளி இந்தச் சம்பவம் நடந்திருந்தால் முதல் வேலையாக அவனை ஜாமீன் கூட தராத பிரிவுகளில் வழக்கில் உள்ளே தள்ளியிருப்பார்கள். இப்போது பொருள் நஷ்டத்தோடு போய்விட்டது. பீகாரில் மட்டும் பாலங்கள், ரோப் காருக்கான தூண்கள் ஏன் அடிக்கடி சரி கின்றன என மக்கள் யோசிக்க வேண்டும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

சைக்கிள், டூவீலரில் இடியாப்பம் விற்போர் உரிமம் பெறவேண்டும்.. என்ற தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் அறிவிப்பு?

உணவுப் பாதுகாப்பு, சுகா தார விஷயங்களில் கெடுபிடியாக இருப்பது நல்லதுதான். அதற்காக வீட்டோடு இட்லி கடை போடுபவர்கள், இடியாப்பம் விற்பவர்கள், கேன்களில் தேநீர் விற்பவர்களிடம் தேவைக்கு அதிகமான கெடுபிடி காட்டி, பிழைப்பில் மண்ணள் ளிப் போடும் வேலையை மாநில அரசு செய்யக்கூடாது.

தே மாதவராஜ், கோயம்புத்தூர்-45 

தமிழக சினிமா நடிகர்கள், நடிகைகள் யாரும் விஜய் கட்சியில் சேராததற்கு காரணம் என்ன?

யார் கண்டது, நமக்கே முதல்வர் வாய்ப்பு இருக்கலாம். வீணாக, நாம் ஒருவருக்கு வாய்ப் பளித்து நமது வாய்ப்பை ஏன் வீணாக்க வேண்டும் என யோசிக்கிறார்களோ என்னவோ! தவிரவும் சினிமாவிலிருந்து ஒருவர் கட்சி தொடங்கினால் நடிக -நடிகையர் அந்தக் கட்சியில் சேர்ந்தே ஆக வேண்டுமென அவசியமா என்ன? எம்.ஜி.ஆர். கட்சி யில் அன்றைய நட்சத்திரங்கள் எல்லோருமே உறுப்பினராகச் சேர்ந் தார்களா? என யோசித் துப் பார்த்துக்கொள் ளுங்கள்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

விவசாயிகளுக்கு காங் கிரஸ் கட்சி எதுவும் செய்ய வில்லையென பிரதமர் குற்றம் சாட்டுகிறாரே?

நிஜம்தானே! ஓராண்டுக்கும் மேலே சாலையிலே கொண்டு வந்து விவசாயிகளை உட்கார வைத்ததா காங்கிரஸ்? போராட் டத்துக்கு வந்ததற்காக, அமைச்ச ரின் மகனைவிட்டு காரைக் கொண்டு ஏற்றியதா? ஹரியானாவில் ஒரு அதிகாரி, விவசாயிகளை நோக்கி அவர்களின் தலைகளை நசுக்குங்கள் என ஆத்திரத்தில் உத்தரவிட்டார் -ஐந்தாண்டுத் திட்டங்களைத் தவிர, காங்கிரஸ் இப்படி ஏதாவது புதுமையாக செய்திருக்கிறதா என்ன?


ராமதாஸ் -அன்புமணி பஞ்சாயத்துக்கு ஏதாவது ஒரு தீர்ப்புச் சொல்லுங்களேன்?

வெறும் மாம்பழப் பிரச்சனையென்றால், ஆளுக்கு இரண்டு கிலோ இமாம் பசந்த் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்திவிடலாம். கட்சிப் பிரச்சனை, நடுவில் தலையைக் கொடுத்தால் இரண்டு பேருமே நம்மை மாங்கொட்டையால் அடிப்பார்கள். பிரச்சனையை அவர்களே பேசித்தீர்க் கட்டும் என ஒதுங்கிக்கொள்வதுதான் புத்திசாலி நாட்டாமைக்கு அடையாளம்.