மாவலி பதில்கள் 02.08.25

mavali

 

வாசுதேவன், பெங்களூரு

என் வீட்டுக்கே ரூ.12,000 மின்சார பில் என்று இ.பி.எஸ். கூறியுள்ளாரே?

வீட்டில் எத்தனை விளக்குகள், மின்விசிறிகள், ஏ.சி.கள், ரெப்ரிஜிரேட்டர்கள், தண்ணீர் ஏற்றும் மோட்டார்கள், மற்ற மின்சாதனங்கள் என்று பட்டியலிட்டுவிட்டு என் வீட்டுக்கு இவ்வளவு ஆகிறதென்றால், மக்கள் தோராயமாகக் கணக்குப் போட்டு இது நியாயம், அநியாயம் என முடி வெடுக்க முடியும். மொட்டையாக என் வீட்டுக்கு இத்தனை ஆகிறதென்று சொன்னால் எப்படிக் கணக்கிட முடியும்? தவிரவும் மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் இணைய கையெழுத்திட்டது  அ.தி.மு.க. தானே.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

எதிர்க்கட்சிகள் பார்லிமெண்டை முடக்குவது சரியா... தவறா?

பாராளுமன்றம் என்ன, எம்.பி.க்கள் கேண்டீ னில் போய் சிற்றுண்டி, உணவு சாப்பிடுவதற்காக நடத்தப்படுகிறதா என்ன? மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்காகத்தானே.

 

வாசுதேவன், பெங்களூரு

என் வீட்டுக்கே ரூ.12,000 மின்சார பில் என்று இ.பி.எஸ். கூறியுள்ளாரே?

வீட்டில் எத்தனை விளக்குகள், மின்விசிறிகள், ஏ.சி.கள், ரெப்ரிஜிரேட்டர்கள், தண்ணீர் ஏற்றும் மோட்டார்கள், மற்ற மின்சாதனங்கள் என்று பட்டியலிட்டுவிட்டு என் வீட்டுக்கு இவ்வளவு ஆகிறதென்றால், மக்கள் தோராயமாகக் கணக்குப் போட்டு இது நியாயம், அநியாயம் என முடி வெடுக்க முடியும். மொட்டையாக என் வீட்டுக்கு இத்தனை ஆகிறதென்று சொன்னால் எப்படிக் கணக்கிட முடியும்? தவிரவும் மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் இணைய கையெழுத்திட்டது  அ.தி.மு.க. தானே.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

எதிர்க்கட்சிகள் பார்லிமெண்டை முடக்குவது சரியா... தவறா?

பாராளுமன்றம் என்ன, எம்.பி.க்கள் கேண்டீ னில் போய் சிற்றுண்டி, உணவு சாப்பிடுவதற்காக நடத்தப்படுகிறதா என்ன? மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்காகத்தானே. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உரிய பதில்சொல்வதை நிறுத்தியே நாளாகிவிட்டது. பல தலைப்புகள் விவாதத்துக்கே எடுக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சி கள் ஜனநாயகம் முடக்கப் படுவதாகச் சொல்கின்றன! நீங்கள் எதை நம்புகிறீர் கள்!

என். இளங்கோவன், மயிலாடுதுறை. 

கீழடி அகழாய்வு முடிவுகளைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வேதனை தெரிவித்துள்ளாரே?

ராஜராஜ சோழனுக்கு சிலை வேண்டுமா இன்னும் ரெண்டு கட்டித் தருவார்கள். அதைவிட்டு வரலாற்றில் தமிழரின் தொன்மையைப் பதிவுசெய்வது என்றால் கொஞ்சம் சிரமம்தான். ஆரியரைவிட காலத்திலும் அறிவிலும் மூத்தவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்வார்கள்?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

ஆபாசப் படங்களை ஸ்ட்ரீம் செய்த 25 ஓ.டி.டி. தளங்களை இந்தியாவில் தடை செய்துள்ளதே ஒன்றிய அரசு..?

என்னதான் தடை செய்யட்டுமே, நீலப்பட வக்கிரர்கள் ஒரு தளம் இல்லாவிட்டால்           மற்றொரு தளத்தைத் தேடிக் கண்டுகொள்வர். அதற்காகவெல்லாம் நீங்கள் வருந்தத் தேவையில்லை. சொல்லப்போனால், ஆபாசத் தளங்களுக்கு இன்னும் அதிக கெடுபிடி இருந்தால், இளைய தலைமுறை மீதான பாதிப்பு சற்று குறையும்.

mavali1

சி. கார்த்திகேயன், சாத்தூர்

பிரதமர் மோடியிடம் ஒரு விஷயமும் இல்லை என்கிறாரே ராகுல்காந்தி?

அது ராகுல்காந்தியின் பார்வை. பிரதமர் மோடியிடம் எது இருக்கிறதோ... இல்லையோ... இன்னும் நான்காண்டு பிரதமர் பதவிக்கான உத்தரவாதம் இருக்கிறது. இடையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை காலை வாரினாலொழிய இதில் மாற்றம் எதுவும் இல்லை. அந்தப் பிரதமர் பதவி,  அலாவுதீன் விளக்கின் பூதம் மாதிரி. மோடி கேட்டதையெல்லாம் கொண்டுவந்து தரும். பிறகென்ன கவலை. இன்னும் போகாத நாடுகள் பாக்கியிருந்தால், திட்டம்போட்டு சுற்றுலா கிளம்பவேண்டியதுதான்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி 

வங்கதேசமும் பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்திருப்பது பற்றி?

வங்கதேசத்தின் அண்டை நாடுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை. இந்தியாவிலும்கூட ஆட்சியிலிருப்பது இந்துவத்   தில் ஆர்வமுள்ள கட்சியே. இந்தச் சூழல், வங்கதேசத்திலும் தாக்கம் ஏற்படுத்தும். கூடவே, நிலையான தலைமையில்லாத தேசத்தில், ஆளாளுக்கு நாட்டாமை செய் வார்கள். அதன் எதிரொலிதான் புதிய கட்டுப்பாடுகள். அடுத்து பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது, ஜிம்முக் குப் போகக்கூடாது, லிப்ஸ்டிக் போடக்கூடாது என புதிய கட்டுப்பாடு கள் வராமலிருந்தால் சரி!

கார்த்திகேயன்

ஆபரேஷன் சிந்தூர் பாடப் புத்தகத்தில் இடம்பெறப் போகிறதாமே?

மகிழ்ச்சி! அப்படியே போரை நான்தான் நிறுத்தினேன்! ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன போன்ற ட்ரம்பின் முத்தான கருத்துகளும் பாடப்புத்தகத்தில் இடம்பெறுமா என்பதையும் தெளிவுபடுத்தினால் சிறப்பு!

எச்.மோகன், மன்னார்குடி

சுதந்திரம் பெற்றதன் முழுப் பலனையும் நாம் அனுபவித்துவிட்டோமா?

ஆங்கிலேயர்கள், நமது பொருளாதாரத்தை அவர்களின் இங்கிலாந்துக்கு சுரண்டிக் கொண்டு சென்றார்கள். நம்மை அடிமையாக வைத் திருந்தார்கள். அதற்கெதிராகப் போராடியே சுதந்திரம் பெற்றோம். உங்கள் உள்ளூர் ஆட்சியாளர்களையோ, மாநில ஆட்சியாளர் களையோ, மத்தியில் இருப்பவர்களையோ நீங்கள் தைரியமாக விமர்சித்துவிடமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நமது வரிப்பணம், முழுமையாக நமக்கே வந்து சேருகிறதா...… இல்லை இடையில் பாதியோ, கால்வாசியோ அரசியல் வாதிகளின் பாக்கெட்டுகளில் தஞ்சம்புகுந்து விடுகிறதா? மேற்சொன்ன இரண்டுக்கும் முழு திருப்தியுடன் ஆம் சொல்ல முடியவில்லையெனில், சுதந்திரத்தின் முழுப்பலனையும் நாம் அடையவில்லை என்றே பொருள்.

nkn020825
இதையும் படியுங்கள்
Subscribe