மாவலி பதில்கள் 02.07.25

mavali

 

ப.சுகுமார், நாகப்பட்டினம்

பீகார் தேர்தலில் மொபைல் போன் மூலம் வாக்களிக்கும் வசதி வரு கிறதாமே?

மாற்றுத் திறனாளிகள், தீவிரமாக நோய்வாய்ப் பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள், இடம்பெயர் தொழிலாளர்கள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் மூலமே வாக்களிக்கலாம் என்கிறார் கள். முக அங்கீகாரம், பிளாக்செயின் தொழில் நுட்பம் இதில் பயன்படுத் தப்படும் என்று சொல்லப்படு கிறது. இதில் பிளாக்செயின் தொழில்நுட்பம் பிட்காயின் போன்றவற்றில் பயன் படுத்தப்படுவது. ஆனால் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும்போதே, அதில் முறைகேடு நிகழ்வதாகவும், வாக்குச்சாவடியில் பதிவான வீடியோவைக் கேட்டால் அதைத் தேர்தல் ஆணையம் தரமறுத்து பிரச்சனையெழு கிறது என்றும் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். வீட்டில் வைத்தே, மொபைல் போனில் வாக்களிப்பு என்பதில் எத்தனை பிரச்சனை எழுமோ?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

பசுக்களைக் கடத்தியதாகக் கூறி, தலித் இளைஞர்களை மொட்டையடித்து.. சாலையில் ஊர்ந்து செல்லவைத்த கொடூர சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளதே?

அங்கே பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறதல்லவா! வேறென்ன நடக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள்! மாட்டுக்கறி ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியாதான் இருக்கிறது. பா.ஜ.க.வின் நோக்கம் பசுவின் மீதல்ல... பா.ஜ.க.வின் குண்டர்களை எதிர்த்துப் பேசமுடியாத பயத்தை இந்திய அளவில் உருவாக்குவதும், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றவர்களை எப்போதுமே பீதியில் வைத்திருப்பதும்தான். சுருங்கச் சொன்னால், இந்தியாவை உத்திரப்பிரதேசமாக மாற்றுவதுதான் பா.ஜ.க.வின் கனவு.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

சமீபத்தில் ஐந்து இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றிபெற்றது குறித்து..?

வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரல்லவா எனக்கு பேஸ்மேண்ட் வீக், பாடி ஸ்ட்ராங் என. அதுபோல பா.ஜ.க. இடைத் தேர்தலில் வீக். பிரதான தேர்தல்களில் எப்படியோ வெற்றியை எட்டிப்பிடித்துவிடும். எதிர்க்கட்சிகள், மெயின் தேர்தல்களில் பா.ஜ.க. ஜெயிக்கும் ரகசியத்தைக் கண்டறிந்து செக் வைக்காவிட்டால், காலத்துக்கும் எதிர்க்கட்சியாகவே இருக்கவேண்டி யதுதான்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம் 

சாதி, மத அடையாளங்கள் மாணவர் களுக்குத் தேவையில்லை என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்...?

ஆமாம், பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர் களுக்கு எதற்கு சாதியை அடையாளம் காட்டும் கயிறு, மதத்தை வெளிக்காட்டும் திருநீறு, நாமம் போன்ற அடையாளங்கள் எல்லாம். மாணவர்களுக்கு தேர்வுகளில் எப்படி வெற்றிபெறுவது, எப்படி திட்டமிட்டு படிப்பது போன்ற டிப்ஸ் கொடுப்பதை விட்டுவிட்டு, ஒரு ஐ.பி.எஸ்., எப்படி மத அடையாளத்தைக் காட்டியபடி பள்ளிக்குச் செல்வது என யோசனை தெரிவிப்பது முறையா? அதனால் அதற்கு மாற்றான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.

ஆர். ஹரிகோபி, புதுடெல்லி

நீதிமன்றங்களின் நேரத்தை விரயம்செய்யும் வழக்குகளைத் தொடுத்தவர்மீது தீவிரமான நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற செயல்கள் குறையுமல்லவா?

ஏற்கெனவே நீதிபதிகள் இத்தகைய வழக்கைத் தொடுத்தவர்களுக்கு எச்சரிக்கையளித்தோ, அபராதம் விதித்தோ தங்கள் ஆட்சேபத்தை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக வழக்குத் தொடுத்தவர்களைச் சிறையில் அடைப்பதோ, இன்னும் கடுமையாகத் தண்டிப்பதோ தவறான முன்னுதாரணமாக அமையும். பொதுநல வழக்குத் தொடுப்பவர்கள், தங்கள் ஆர்வத்தையும் தைரியத்தையும் இழப்பதில் போய் முடியும்.

அ.யாழினிபர்வதம், சென்னை-78.

இந்திய மாணவர்கள் விசா கோரி விண்ணப் பித்தால் அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளை ஆய்வுசெய்த பின்னரே விசா வழங்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு..?

தவறான அணுகுமுறை. மாணவப் பருவம்தான் அரசியல் குறித்த கருத்துகளையும் சமூக நிகழ்வுகள் குறித்த மனப்பதிவுகளையும் உருவாக்கிக்கொள்ளும் பருவம். அதுபோன்ற நிகழ்வுகள் குறித்த தீவிர கருத்துத் தெரிவிப்பவர்களை ஃபில்டர் செய்துதான் நாட்டில் அனுமதிப்பேன் என்பது அமெரிக்கா போன்ற ஜனநாயக நாட்டுக்கு அழகல்ல. வலதுசாரி அரசியலும், முதலாளித்துவத்துடனான அரசியல் கூட்டும் (குரோனி கேபிடலிசம்) உலகை ஆளும் காலம் இது.

mavali answers nkn020725
இதையும் படியுங்கள்
Subscribe