சிவா, கல்லிடைக்குறிச்சி

நிதீஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என பா.ஜ.க. பகிரங்கமாக அறிவித் திருப்பது பற்றி?

Advertisment

அதே பா.ஜ.க.வின் அமித்ஷாதான் தேர்தல் முடிந்தபிறகு பீகார் முதல்வரை முடிவுசெய்வோம் என்றார். இப்போது மாற்றிப் பேச மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, முதல்வர் வேட்பாளரில் கருத்தொருமை இல்லாமல் தேர்தலைச் சந்தித்து தோல்வி யடைந்துவிடக்கூடாதென்ற பயம். இரண்டாவ தாக, நிதிஷ்குமாரின் தயவால்தான் ஆட்சியி லிருக்கிறது ஒன்றிய அரசு. நிதிஷ்குமார் பெயரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயக்கம்காட்டி, அவர் கட்சித் தொண்டர்கள், பா.ஜ.க. நிற்கும் தொகுதிகளில் வேலையைக் காட்டிவிட்டால் என்னாகும் என்ற பயம். 

Advertisment

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் 

விஜய்க்கு அ.தி.மு.க.வினர்தான் பயிற்சியாளர்கள் என்கிறாரே ராஜேந்திர பாலாஜி..?

எந்தப் பயிற்சியைச் சொல்கிறார்? கேரவனுக்குள் அமர்ந்து விளக்கைப் போட்டுப் போட்டு அணைக்கும் பயிற்சியா? தொண்டர்கள் மரணத்துக்குக் கூட நேரில் அஞ்சலி செலுத்தப்போகாமல் வீட்டுக்கு அழைத்து ஆறுதல்கூறிய பயிற்சியையா? இல்லை எதிர்காலத்தில் அமித்ஷா அழைத்து மிரட்டும்போது, எப்படி வளைந்து நெளிந்து சமாளிக்கவேண்டும் என்ற பயிற்சியா?

Advertisment

mavali1

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

அதானி குழுமத்தில், 33,000 கோடி ரூபாய் எல்.ஐ.சி. முதலீடு சர்ச்சையாகியிருக்கிறதே...? 

முதலில் ஒன்றிய அரசு, அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருக் கிறதா என்பதையே தெளிவாகச் சொல்ல மறுக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள், அதானி நிறுவனத்தின் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளுக்கு 2.5 கோடி அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்து வளைத்தனர் (முக்கியமாக ஆந்திராவில்). இந்நிறுவனத்துக்காக அமெரிக்க முதலீட்டாளர் களிடம் இருந்து முதலீடு வாங்கியிருந்தார் அதானி. இந்தத் தகவலை மறைத்ததற்காக அமெரிக்காவில் இனி அதானி கடன் வாங்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் பிற நாடுகளிலும் அதானிக்கு கடன் கிடைக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அதானி துறைமுக விரிவாக்கத்துக்காக கடன்வாங்க வேண்டிய சூழல் வர, அதானியின் கைக்காசு புழக்கத்துக்காக 33,000 கோடி மதிப்பிலான அதானியின் கடன் பத்திரங்களை எல்.ஐ.சி. வாங்க நிர்பந்திக்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. இதையும் வெளிநாட்டு ஊடகங்கள்தான் சொல்லவேண்டியிருக்கிறது. இந்திய ஊடகங்கள் பலவும் சைலண்ட் மோடில் இருக்கின்றன.

க.அருச்சுனன், செங்கல்பட்டு 

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் புற்று வர காரணம்?

உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று வரை கலப்படம், மாசு, வேதிமயமாக இருக்கிறது. இதில் புகைக்கவில்லை, குடிக்கவில்லை என்பதனால் மட்டும் புற்று வராமல் போய்விடுமா?

சி. கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் விஜய்யை அர சியல்ரீதியாக இயக்கு பவர்கள் சரியில்லை தானே?

விஜய் வேண்டுமானால் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லியை வைத்து, அரசியல் இயக்கத்தையும் முயற்சிசெய்து பார்க்கலாம்! எப்படியோ ஹிட் கிடைத்தால் சரி என்ற மனநிலையில்தானே இருக்கிறார்.

ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு

நிறைய படித்தவர்களும் அறிவுக் குறைபாடு உடையவர் களாக இருக்கிறார்களே?

ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பது அறிந்த பழமொழிதானே. தேர்வுக்கு வேண்டுமானால், படித்த                    விஷயங்கள் உதவிக்கு வரலாம். வாழ்க்கைக்கு அனுபவக் கல்விதான் உதவியாக இருக்கும். மனப்பாடம் செய்து வாழ்வில் நூற்றுக்கு நூறு வாங்க முடியாது. அவ்வப்போதைய நிகழ்வுகளைக் கவனித்து அதற் கேற்பத்தான் செயலாற்றியாக வேண்டும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

சீமான் அதிகம் பேசு கிறார், விஜய் பேசுவதே இல்லை -வரவேற்புக் குரியது எது?

நாம் முடிவுசெய்வதை விட மக்கள் முடிவுசெய்யட்   டும். இருவரில் யார்க்கு அதிக வாக்கு விழுகிறதோ, அதைவைத்து மக்களுக்கு பேசுகிற அரசியல்வாதி பிடிக்கிறதா,… பேசாத அர சியல்வாதி பிடிக்கிறதா… என முடிவுசெய்யலாம்.

எஸ்.இளையவன், சென்னை

சீனாவில் ஆண்களை வாடகைக்கு எடுக்கும் கென்ஸ் முறை ட்ரெண் டாகி வருகிறதே?

வசதியான பெண்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரிகிறது. எப்படி என்றாலும், தாம் ஊதியத்துக்கு வேலை செய்கிறோம் என்ற உணர்வு இருக்கும் வரை, அந்த ஆணால் நடிக்கத்தான் முடியுமே தவிர உண்மையாக இருக்கமுடியாது. சரி, ஆண்களேதான் கீப் வைத்துக்கொள்ள வேண் டுமா என்ன? பெண்களும் தான் முயன்று பார்க்        கட்டுமே!