mavali

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

கேரளாவிலும் மதுபானக் கொள்கை மோசடி அரங்கேறியுள்ளதே?

வெளியாகியிருப்பது ஒரு ஆடியோ கிளிப் மட்டும்தான். கேரள ஓட்டல்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அனிமோனின் குர-ல் வெளியாகியுள்ள ஒரு ஆடியோ கிளிப், பார் உரிமையாளர்கள் தலா 2.5 லட்சம் தந்தால், தேர்தலுக்குப் பின் மதுபானக் கொள்கை அவர்களுக்கு சாதகமாக வெளிவரும் என்றரீதியில் பேசுகிறது. ஆனால் வெறும் ஆடியோ க்ளிப்பை மட்டும் வைத்து இறுதியான முடிவுக்கு வந்துவிடமுடியாது. இப்பிரச்சனைக்குப் பின் அனிமோன், கேரள ஓட்டல்கள் கூட்டமைப்பி-ருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மதுபானம் தொடர்பான விவகாரங்களில் எந்த அரசும் ஆதாயம்பெறாமல் செயல்படுகிறது என்று ஒருவர் நம்பவேண்டுமானால் அவர் அரசியல் அரிச்சுவடி தெரியாதவராய் இருக்கவேண்டும். ஆனால், இதை மட்டும் வைத்து கேரள அரசின் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தமுடியாது.

Advertisment

என். இளங்கோவன், மயிலாடுதுறை

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம், ஒடிசாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஸ்மிரிதி இரானி கூறுகிறாரே?

பிரதமர், உள்துறை அமைச்சர் வரிசையில், சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் பிரச்சாரத்தில் வதந்தி பரப்பியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி என்பதை வதந்தி பரப்பும் கட்சி என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.

வாசுதேவன், பெங்களூரு

முடிந்த ஐ.பி.எல். போட்டி கற்றுக்கொடுத்த பாடம்?

அது ஆளுக்கொரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு டீமுக்கும் ஒரு பாடம், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு பாடம், யூகப் போட்டி என்ற பெயரில் ரசிகர்களின் பாக்கெட்டுகளைச் சுரண்டிய செய- சூதாட்டக் கும்பல்களுக்கு ஒரு பாடம். ரசிகர்களாகிய நாம் என்ன பாடம் கற்றோம் என்பதுதான் முக்கியமானது.

ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

கடவுளை யாராவது கொல்ல முடியுமா?

தன்னைக் கடவுளின் தூதன் என்று சொல்லிக்கொள்பவர்களைப் பிடிக்காத மன்னன் ஒருவன் இருந்தான். அவனது சித்ரவதைக்கூடத்தில் ஒருவனை சவுக்கால் வெளுத்துக்கொண்டிருந்தார்கள். அவனோ கதறுவதற்குப் பதில் சிரித்துக்கொண்டிருந்தான். கடுப்பில், ஒரு காவலாளி, “"இப்போது எதற்கு இளிக்கிறாய்?'’எனக் கேட்க, “"என் தூதன் என்று சொல்-க்கொண்டால் உனக்கு எத்தனையோ வேதனை வரும் என்று கடவுள் சொன்னார். இப்போது அது மெய்யாகிவிட்டதை நினைத்துச் சிரித்தேன்ஸ’’ என்றான் அடிபட்டவன். அவனுக்கு அப்பால், "இனி அடித்தால் செத்துவிடுவான்' என்ற ரீதியில் விழுந்துகிடந்தவன் சிரித்தான். இப்போது காவலன் அவன் பக்கம் திரும்பி, “"நீ எதற்கு இளிக்கிறாய்?'’’ என்றான். “"தூதன் என்று யாரையும் நான் அனுப்பவில்லை, அவனை நம்பாதீர்கள்'’என்றான். நீங்கள் கேட்பது இந்த மாதிரி கடவுளை என்றால், தாராளமாகக் கொன்று குவிக்கலாம். ஆனால் பிள்ளைப்பூச்சிகளை நசுக்கி என்ன பிரயோசனம்?

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

சிவகாசியில் ஆண்டுதோறும் பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் வெடிவிபத்தை தவிர்க்க அரசிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா?

கடந்த இரு வருடங்களில் தொடரும் வெடி விபத்துகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், எந்தத் திட்டமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஜெ.மணிகண்டன், வேலூர்

நாம் ஏமாந்தது போதும். இன்னும் எத்தனை காலம் இன்னொரு கட்சியிடம் தொகுதிகளுக்காகக் கையேந்திநிற்பது என்று காங்கிரஸ்தலைவர் செல்வப் பெருந்தகை பேசியிருக்கிறாரே..?

சரி, வரும் சட்டமன்றத் தேர்த-ல் விழிப்பாக இருந்து, தனியாகப் போட்டியிட்டு, வெற்றிபெற்று போதிய சட்டமன்ற உறுப்பினர்களைச் சம்பாதித்து சட்டமன்றத்துக்கு செல்வப் பெருந்தகை அனுப்பட்டுமே.

ப.வினோத், நாமக்கல்

டெல்- குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த விபத்தில் 7 குழந்தைகள் ப-யாகியுள்ளனரே?

டெல்-யின் விவேக்விகார் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து நடந்துள்ளது. முதல்கட்டத் தகவல்படி அங்கு சட்டவிரோதமாக ஆக்ஸிஜனை சி-ண்டரில் நிரப்பும்போதுதான் விபத்து நடைபெற்றுள்ளது. 7 பிஞ்சு உயிர்கள் போய்விட்டன. இந்த விபத்துக்குக் காரணமானவர்களைப் பிடித்து தூக்கில் போடவேண்டியதில்லை…. நியாயமாக, அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையை அரசுத் தரப்பில் வாங்கித் தந்தாலே போதும். அதெல்லாம் இந்தியாவில் நடக்குமா?

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

ஜூன் 4-க்கு பிறகு தமிழகத்தில் தாமரை படர்ந்திருக்கும் காட்சியை எல்லோரும் பார்க்கத்தான் போகிறார்கள் என்கிறாரே, தமிழக பா.ஜ.க. தலைவர்?

படர் தாமரை என்றால் அர்த்தம் வேறு. அதற்கு நல்ல சரும நிபுணரைப் பார்த்து சிகிச்சையெடுக்கவேண்டும். தமிழர்களைப் பற்றி அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்!