முந்தும் காங்கிரஸ்! முட்டுக்கட்டையிடும் பா.ஜ.க.! -காஷ்மீர் தேர்தல் நிலவரம்!

ss

ம்மு -காஷ்மீருக்கான முதல் கட்டத் தேர்தல் செப்டம்பர் 18-ல் நடக்கவிருக்கும் நிலையில் முதல் கட்டத் தேர்தலுக்கான தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

ஜம்மு- காஷ்மீர் காங்கிரஸ் தலைவரான தாரிக் ஹமீது கரா, "ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் கதையைப் பொறுத்தவரை அது முடிந்துபோன ஒன்று. குலாம் நபி ஆசாத் கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை. மக்கள் ஜனநாயகக் கட்சியும் எங்கள் கூட்டணியின் வெற்றிவாய்ப்பைப் பறித்துவிட முடியாது. ஜம்மு- காஷ்மீரின் ஆளுநருக்கான அதிகாரத்தை அதிகரிப்பதில் பா.ஜ.க. காட்டும் அதீத ஆர்வத்திலேயே இந்தத் தேர்தலில் தாங்கள் வெல்லப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. வெற்றி பெற்றுவரும் கட்சிக்கு இடைஞ்சல் தரவே இந்த வேலையைச் செய்கிறார்கள்.

பா.ஜ.க. காஷ்மீரில் அமைதி நிலவுவதாக திரும்பத் திரும்ப கத்துவதால் அது உண்மையாகி விட முடியாது. சமீப காலங்களாக இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்''’என்கிறார்.

h

காங்கிரஸ் -தேசிய மாநாட்டுக் கட்சியின் வெற்ற

காங்கிரஸ் -தேசிய மாநாட்டுக் கட்சியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகக் கூறும் அவர், வெற்றிபெற்று வந்ததும் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருப்பதாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

வெளிப்படையாகவே, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை என அறிவித்து பா.ஜ.க. தேர்தலை எதிர்கொள்கிறது. நிச்சயம் இந்த அறிவிப்பு பா.ஜ.க.வுக்கு பின்னடைவைத் தரும். அதை எதிர்கொள்ள காங்கிரஸையும், தேசிய மாநாட்டுக் கட்சியையும் தீவிரவாதக் கட்சிகள் என மூர்க்கமாக அமித்ஷா உள்ளிட்ட பிரபலங்கள் விமர்சிக்கின்றனர்.

25 வாக்குறுதிகளை தனது தேர்தல் பத்திரத்தில் அறிவித்திருக் கிறது பா.ஜ.க. இளைஞர், பெண்கள் முன்னேற்றம், பண்டிட்டுகள் மறு குடியமர்த்தல் போன்றவை அவற்றில் முக்கியமானவை. பணம் பத்தும் செய்யும் என்பதால் ஜம்மு- காஷ்மீரின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் தருவோம் என்ற வாக்குறுதியை பிரதானமாக பிரச்சாரம் செய்கிறது.

இது போதாதென, காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளை சிதறச் செய்ய, தலித்துகள், காஷ்மீரின் ஆடு மேய்க்கும் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் ரத்துசெய்யும் என்று அச்சுறுத்தி வாக்கு அறுவடை செய்ய முயல்கிறது. இந்தப் பொய்ப் பிரச்சாரம் எந்த அளவுக்குக் கைகொடுக்குமெனத் தெரியவில்லை.

காஷ்மீரிலுள்ள 47 தொகுதிகளில் வெறும் 24 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. போட்டியிடுகிறது. கடந்த 2014 தேர்தலில் காஷ்மீரில் 30 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க. ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களாக இருந்த மூவருக்கும் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. நிர்மல்சிங்கும், கவிந்தர் குப்தாவும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஜம்மு -காஷ்மீரில் பண்டிட்டுகள் சற்று அதிகமாகக் காணப்படும் ஜம்முவை நம்பியே பா.ஜ.க. களமிறங்குகிறது. இதற்காகவே 37 தொகுதிகளாக இருந்த ஜம்மு, தற்போது 43 தொகுதிகளாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஜம்முவை முழுதாக பா.ஜ.க. கைப்பற்றினாலும் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டிக்கு 3 இடங்கள் குறைவு என்பதால் பா.ஜ.க.வின் வெற்றிவாய்ப்பு மிகப் பலவீனமாகவே இருக்கிறது.

இந்நிலையில், பணமோசடி செய்த தாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா மீது உயர்நீதிமன்றத் தில் அமலாக்கத்துறை செய்த மனுவை நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் வலுவைக் குறைக்கும் நோக்கத்தில் காஷ்மீர் கிரிக்கெட் கிளப் முறைகேடு தொடர்பாக புதிய வழக்குப் பதிய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது.

ஜம்முவில் தனது பிடியை வலுப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு ஜம்முவில் அதிகளவிலான வேட்பாளர் களைக் களமிறக்கியிருக்கிறது பா.ஜ.க. தவிரவும், காஷ்மீர் முதற்கட்ட தேர்த லுக்கு 91 சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாதது. மக்களிடம் செல்வாக்குமிக்க, தனி காஷ்மீர் கோரும் சுயேட்சை வேட்பாளர்களை திட்டமிட்டே களம்காணச் செய்து, காங்கிரஸ் கூட்டணியை பின்னடையச் செய்யும் பா.ஜ.க. வின் யுக்தி இது என்கிறார்கள் காங்கிரசார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி, 2014-ல் பா.ஜ.க. வுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்ததை இப்போதுவரை அங்குள்ள காஷ்மீர் மக்கள் பலரும் ஏற்கவில்லை. அது அக்கட்சியின் ஆதரவு வாக்காளர்களைக் குறைத்தது. தவிரவும், கட்சியி லிருந்து நிறைய பேர் வெளியேறுவதும் கட்சி யின் பலத்தைக் குறைத்துவருகிறது. பெரிய கூட் டணி எதுவும் அமையாத நிலையில் மெஹ்பூபா தனித்துப் போராடவேண்டிய சூழல் வேறு.

கட்சியின் தெரிந்த முகங்களும், முஸாபர் ஹூசைன் போன்ற அடுத்தகட்டத் தலைவர்களு மான சிலர் இறந்திருப்பதும், பா.ஜ.க.வுடன் முப்திக்கு மறைமுகக் கூட்டணி தொடர்கிறது என்ற குற்றச்சாட்டும் கட்சியின் பலவீனங்கள். அஜாஸ் அகமது மிர் போன்ற பிரபலமான தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி என்ஜினியர் ரஷீத்தின் கட்சிக்குத் தாவியிருக்கிறார்கள். அதையெல்லாம் தாண்டி வெற்றியை நோக்கி கட்சியை நடத்தவேண்டிய சுமை மெஹ்பூபா முப்திக்கு.

குலாம் நபி ஆசாத்தின் தாக்கம் இந்த தேர்தல் நடந்தால் மட்டுமே தெரியவரும்.

சுயேட்சைகள், மாநிலக் கட்சிகள் என பலவும் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க. இடையேதான் போட்டி. அதிலும் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணியின் கையே சற்று ஓங்கியுள்ளது.

nkn180924
இதையும் படியுங்கள்
Subscribe