Advertisment

மசாஜ் அழகி கொலை! போலீசின் ஆடு-புலி ஆட்டம்!

mm

சாஜ் அழகி படு கொலை விவகாரத்தில் மூன்று எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப் பட... அதன் தொடர்ச்சி யாக உளவுப் பிரிவு உதவி கமிஷனர் மற்றும் இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டி ருக்கிறார்கள். இது சேலம் பகுதியையே பரபரப்பில் ஆழ்த்திவருகிறது.

Advertisment

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். அ.தி.மு.க. பிரமுகர். இவருக்குச் சொந்தமான அபார்ட் மெண்டில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண்.

Advertisment

mm

அவர், அங்குள்ள சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் தேஜாஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்களை நடத்தி வந்தார். ஒரு வீட்டில் தேஜ் மண்டல் தங்கியிருக்க, இன்னொரு வீட்டில் அவரிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய மூன்று பெண்களும் லப்லு என்ற ஆண் ஊழியரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஐந்து பேருமே வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதியன்று தேஜ் மண்டலிடம் வேலை செய்து வந்த பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே உள் அறையில் மேல் அலமாரியில் ஒரு சூட்கேஸுக்குள் உட

சாஜ் அழகி படு கொலை விவகாரத்தில் மூன்று எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப் பட... அதன் தொடர்ச்சி யாக உளவுப் பிரிவு உதவி கமிஷனர் மற்றும் இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டி ருக்கிறார்கள். இது சேலம் பகுதியையே பரபரப்பில் ஆழ்த்திவருகிறது.

Advertisment

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். அ.தி.மு.க. பிரமுகர். இவருக்குச் சொந்தமான அபார்ட் மெண்டில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண்.

Advertisment

mm

அவர், அங்குள்ள சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் தேஜாஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர்களை நடத்தி வந்தார். ஒரு வீட்டில் தேஜ் மண்டல் தங்கியிருக்க, இன்னொரு வீட்டில் அவரிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய மூன்று பெண்களும் லப்லு என்ற ஆண் ஊழியரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஐந்து பேருமே வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதியன்று தேஜ் மண்டலிடம் வேலை செய்து வந்த பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே உள் அறையில் மேல் அலமாரியில் ஒரு சூட்கேஸுக்குள் உடல் திணித்து வைக்கப்பட்ட நிலையில் இருந்தார் தேஜ்.

தேஜ் மண்டலிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா, லப்லு ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தேஜ் மண்டலை அக். 7-ஆம் தேதியே கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, தலைமறைவானது தெரிய வந்தது.

இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் மாடசாமி நேரடி விசாரணையில் இறங்கினார். தேஜ்மண்டல், அவர் காதலர் பிரதாப் ஆகியோரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தபோது, சைபர் கிரைம் பிரிவு எஸ்.ஐ. ஆனந்த்குமார், இரும்பாலை எஸ்.எஸ்.ஐ. கலைசெல்வன், பள்ளப்பட்டி நுண்ணறிவுப் பிரிவு எஸ்.எஸ்.ஐ. சேகர், அஸ்தம்பட்டி காவலர் மணிகண்டன் ஆகிய நான்குபேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவர, அவர்கள் நால்வரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் கமிஷனர் நஜ்மல் ஹோடா.

நம்முடைய கள விசாரணையில், ஸ்பெஷல் டீம் போலீசாரின் ஆடுபுலி ஆட்டம் வெளிச்சத்திற்கு வந்தன.

பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் கருணாநிதி, ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட டீம்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சேலம் மாநகரில் 35க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தினர். மேலும், ஓட்டல்கள், வீடுகளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவோரையும் கைது செய்திருக்கிறது இந்த டீம்.

கடந்த செப். 6ம் தேதி, சேலம் சங்கர் நகர் மற்றும் பள்ளப்பட்டியில் தேஜ் மண்டலுக்குச் சொந்தமான மசாஜ் சென்டர்களில் ஸ்பெஷல் டீம் திடீர் ரெய்டு நடத்தியது. சங்கர் நகரில் உள்ள மசாஜ் சென்டரில் இன்ஸ்பெக்டர் கற்பகம் வருவதற்கு முன்பே எஸ்.ஐ. கருணாநிதியும் காவலரும் ரெய்டு செய்துள்ளனர். ரெய்டுக்குச் சென்ற உடனேயே அங்கிருந்த சி.சி.டி.வி. டி.வி.ஆர். பதிவுகளை நிறுத்திவிட்டதாகவும், கஸ்டமர் பதிவேடு புத்தகத்தை எஸ்.ஐ. கருணாநிதி எடுத்துக்கொண்ட தாகவும் சொல்கின்றனர்.

mm

ஸ்பெஷல் டீமிற்கு ரெய்டு நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் சங்கர் நகர் ரெய்டு நடந்து கொண்டிருந்த போதே அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறது ஸ்பெஷல் டீம்.

தேஜ் மண்டலின் மசாஜ் சென்டரின் மேலாளர் முத்தம்மாள் என்கிற பிரியா, தேஜ் மண்டலின் காதலன் பிரதாப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது அஸ்தம்பட்டி போலீஸ். ஷீலாவை மீட்டு, அரசு காப்பகத்தில் வைத்தனர். அங்கிருந்து அக். 5-ம் தேதி வெளியே வந்த ஷீலா, நேராக தேஜ் மண்டலை சந்தித்து, "உனக்காக காப்பகத்திற்குப் போன என்னை வெளியே கொண்டு வராதது ஏன்?' என்று கேட்டுள்ளார். மேலும், இத்தனை நாள் வேலை செய்ததற்கு 2 லட்சம் ரூபாயும் கேட்டுள்ளார். அப்போது உடன் இருந்த ரிஷி, நிஷி, லப்லு ஆகியோரும் ஷீலாவுக்கு ஆதரவாக பேசியிருக் கிறார்கள். இதில் ஏற்பட்ட தகராறில்தான் தேஜ் மண்டலை அவர்கள் நால் வரும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அவரிடம் இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நுண்ணறிவுப் பிரிவு தேஜ் விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறது. ஏனெனில் தேஜ் மண்டலும், அவரைக் கொன்றவர்களும் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த தாகச் சொல்லப்படுகிறது.

சூதாட்டம், லாட்டரி கும்பலுடன் உதவி கமிஷனர் ஒருவர் நெருக்கமாக இருந்த தாகவும், ஆனந்த்குமாரின் ரெய்டுகளால் அவருக்கு கட்டிங் பாதிக்கப்பட்டதால், அவரை எப்படியாவது சஸ்பெண்ட் செய்தாக வேண்டும் என்று நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் பூபதிராஜன் மூலமாக கமிஷனரின் கவனத்துக்குக் கொண்டுசென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உதவி கமிஷனர் பூபதிராஜனிடம் கேட்டபோது, ''என்னுடைய பணிக் காலத்தில் குற்றவாளி களுக்கோ, குற்றங்களுக்கோ எப்போதும் துணை போனதில்லை''’என்றார் அழுத்தமாக. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியும் தன் மீதான புகாரை மறுக்க...

டி.ஒய்.எப்.ஐ. மாநில நிர்வாகி பிரவீன்குமாரோ, "சேலம் மாநகரம் மற்றும் புறநகரில் தனியார் தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள், வீடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கடந்த நான்கு மாதங்களில் 300 கல்லூரி மாணவிகள் உள்பட 894 பேர் பிடிபட்டுள்ளனர். பாலியல் தொழிலின் பின்னணியில் அரசியல் பிரமுகர்களும், காவல்துறையினரும் இருக்கின்றனர். ரெய்டுக்குச் சென்ற இடங்களில் காவல்துறையினர் கைப்பற்றிய செல்போன்கள், பணம், நகைகளை என்ன செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை'' என்கிறார்.

துணை கமிஷனர் மாடசாமியிடம் கேட்ட போது, "தேஜ் மண்டலிடம் பணம் வாங்கிக்கொண்டு எப்.ஐ.ஆர். போடாத புகாரில்தான் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

சஸ்பெண்ட் செய்யப் பட்ட எஸ்.ஐ. ஆனந்த்குமார், எஸ்.எஸ்.ஐ. கலைச்செல்வன் ஆகியோரை தொடர்பு கொண்டபோது, "சஸ்பெண்ட் செய்யப்பட்டதில் இருந்து வெளியே தலைகாட்டவே அவமானமாக இருக்கிறது. வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறோம். இதற்குமேல் எங்களிடம் கேட்க வேண்டாம் ப்ளீஸ்...'' என மேற்கொண்டு பேச முடியாமல் உடைந்து அழுதனர். எஸ்.எஸ்.ஐ. சேகர், காவலர் மணிகண்டன் ஆகிய இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

"இந்த வழக்கின் சந்தேகங்களைக் களைந்து, உண்மையான குற்றவாளிகளை போலீஸ் மடக்க வேண்டும்' என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகவும் இருக்கிறது.

nkn111221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe