மிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை ஆளும் கட்சியான தி.மு.க., அமைப்புரீதியாக 72 மாவட்டங்களாகப் பிரித்துவைத்து கட்சிப் பணிகளை செய்து வருகிறது. அதனை 112 மாவட்டங்களாக பிரிக்க தி.மு.க. இளைஞரணிச் செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திட்டமிடும் தகவல்கள் தி.மு.க. முன்னணி தலை வர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க் கட்சியாக இருந்தபோது அடக்கி வாசித்த மா.செ.க் கள், இப்போது அமைச்சர்களாக மாறிய பின் எம்.எல்.ஏ.க்களையே அடக்கிவைக்க முயல்கின்றனர். தங்களை மீறி யாரும் கட்சித் தலைமையையோ, உதயநிதியையோ சந்திக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதேபோல் அமைச்சர்கள், தங்களது மாவட் டத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஏதாவது ஒரு மா.செ. இருந்தால் அவர்களை அடக்குகின்றனர். தேர்தலில் அவர்கள் வெற்றிபெறக் கூடா தென உள்ளடி வேலைகளைச் செய் கின்றனர். இதுபற்றிய புகார்கள் தலைமைக்கு சென்றுகொண்டுதான் இருக்கின்றன.

ff

ஏற்கெனவே கலைஞர் தலைவ ராக இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்தார். கட்சியை இன்னும் வலிமைப்படுத்தவும், தற் போதைய மா.செ.க்களின் அதிகாரப் பரப்பளவை குறைக்கவும், இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. நியமிக்கலாம் என தலை மை ஆலோசித்து வரு கிறது. இந்த ஆலோசனை யை தேர்தல் முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைத்தனர். தேர்தல் முடிந்த நிலையில் அந்த ஆலோசனை இப் போது மீண்டும் எழக் காரணமே நாடாளுமன் றத் தேர்தல் களத்தில் உருவான கசப்பான அனு பவங்களே என்கிறார்கள்.

தேர்தல் களப் புலிகள் என வர்ணிக்கப் படும் அமைச்சர்கள் சிலர், தாங்கள் கைகாட்டிய தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் தரவில்லை, தங்களது வாரிசுகளுக்கு சீட் தரவில்லை, தலைமை அவங்க விருப்பத்துக்கு ஒருத்தரை நிறுத்தினால் நாங்க வேலை செய்ய வேண்டுமா? என தேர்தல் களத்தில் சுயநலமாக செயல் பட்டதை ஸ்டாலின், உதய நிதியின் கவனத்துக்கு கட்சி நிர்வாகிகள் ஆதாரத்துடன் கொண்டுசென்றனர். அதனை சபரீசனின் பென் அமைப்பும், உளவுத்துறையும் உறுதிசெய்தது. இதனால்தான் மாவட்டங்களைக் கூடுதலாகப் பிரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திவருவதாகக் கூறுகின்றனர்.

Advertisment

பெரம்பலூர், அரியலூர் போன்ற 3 மற்றும் 2 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மாவட்டங்களை விட்டுவிட்டு, 5 தொகுதிகள் கொண்ட சென்னை கிழக்கு, தெற்கு, செங்கல்பட்டு, வேலூர், 4 தொகுதிகள் உள்ள காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கடலூர் போன்ற மாவட்டங்களைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என நியமிக்கப்படும் போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள் இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகளாக இருக்கவேண்டும் என உதயநிதி விரும்புகிறார். இளைஞரணியில் மா.செ.வுக்கு தகுதியானவர்கள் யார் என்கிற பட்டிய லையும் தயாரித்து வரு கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.

dmk

இந்நேரத்தில் தி.மு.க.வில் உள்ள பட்டியலின சமூகத்தினர் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ராணிப்பேட்டையை சேர்ந்த பட்டிய லின சமூக தி.மு.க. நிர்வாகி ஒருவர், "72 மாவட்டங்கள் இருந்தாலும் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களில் விருத்தாச்சலம் அமைச்சர் சி.வி.கணேசன், தென்காசி வடக்கு எம்.எல்.ஏ. ராஜா இருவர் மட்டுமே மா.செ.வாக இருக்கிறார்கள். முதலியார், நாயுடு, வன்னியர், கள்ளர், மறவர், வெள்ளாளக் கவுண்டர், இஸ்லாமியர், கிருஸ்த்துவர், யாதவர், செட்டியார் கூட மா.செ.க்களாக இருக் கிறார்கள். பெரும்பான்மை சமூகமான பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருப்பது என்ன சமூக நீதி? நாங்கள் பதவி கேட்டால் "அதான் துணைச்செயலாளர் பதவி தருகிறோமே?' என சாதிப்பற்றுள்ள நிர்வாகிகள் கேட்கிறார்கள். எங்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி ஒரு மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாக அமைப்புகளில் மாவட்ட துணைச்செயலாளர்களில் ஒருவரை பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை நியமித்தே ஆக வேண்டும் என்பதாலேயே நியமிக்கப் பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் மா.செ. பதவி முக்கியமானது, அதில் நியமிக்கவேண்டும் என்றே கேட்கிறோம். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரிய பதவிகளில் இருந்தால் மற்ற சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளமாட் டார்கள் எனக் காரணம் சொல்கிறார்கள். பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த, சென்னை திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, எழும்பூர் பரந்தாமன் எம்.எல்.ஏ., பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.வான மு.பெ.கிரி., புதுப்பாளையம் ஒன்றியத்தில் பொதுப்பிரிவில் ஐந்து முறை ஒன்றி யக்குழு தலைவ ராகவுள்ள சுந்தர பாண்டியன் போன்ற வர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருப்ப தால்தானே தொ டர்ந்து வெற்றி பெறுகிறார்கள்? இவர்களுக்கோ அல் லது தலைமை விரும்பும் தகுதியுடையவர் களுக்கோ மா.செ. பொறுப்புகளைத் தரலாமே?

வன்னியர், முதலியார் அதிகமுள்ள பகுதிகளில் ஒரு நாயுடுவை, தேவர் சமூகத்தினர் பலமாகவுள்ள பகுதிகளில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களை மா.செ.வாக, ஒ.செ.வாக நியமிக்கும்போது அவர்களை ஏற்றுக்கொள்ளும் பிற சமூகத்தினர், பட்டிய லின சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்கும்போது எப்படி ஏற்காமல் போய்விடுவார்கள் என நினைக்கிறார்கள்?. சமூக நீதி பேசும், செயல் படும் எங்கள் கட்சி இந்த முறை நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மா.செ.க் களை நியமிக்கும்போது, பட்டியலின சமூகத்தை சேர்ந்த சிலரையாவது மா.செ.வாக நியமிக்க வேண்டும்'' என கூறினார்.

எழுப்பப்படும் உரிமைக் குரலுக்கு என்ன செய்யப்போகிறது தி.மு.க. தலைமை?

Advertisment