Advertisment

சதிகளை முறியடித்து உள்ளாட்சி மல்யுத்தத்தில் வென்ற மார்க்சிஸ்ட்! - ஊடுருவும் பா.ஜ.க.!

cs

திர்ப்புகள்-குற்றச் சாட்டுகள்-விமர்சனங்கள்- அவதூறுகள்-நான்கரை ஆண்டுகால ஆட்சி எதிர்கொண்ட பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடந்து கேரள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன். 5 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 108 ஒன்றியங்கள், 514 கிராம பஞ்சாயத்துக்கள் என கைப்பற்றியிருப்பதால், தமிழ்நாட்டுடன் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களுக்குத் தயாராகிவிட்டனர் காம்ரேடுகள்.

Advertisment

kerala-communist

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா சுரேஷின் தங்க கடத்தல் விவகாரம்கூட கேரள உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா என அரசியல் நோக்கர் நெய்யாற்றின்கரை ஸ்ரீஜாவிடம் கேட்டோம். ""கடந்த ஜூன் 5-ம் தேதி ஸ்வப்னாவின் தங்க கடத்தல் விவகாரம் வெளியே வந்ததிலிருந்து, தேர்தல்வரை

திர்ப்புகள்-குற்றச் சாட்டுகள்-விமர்சனங்கள்- அவதூறுகள்-நான்கரை ஆண்டுகால ஆட்சி எதிர்கொண்ட பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடந்து கேரள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன். 5 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 108 ஒன்றியங்கள், 514 கிராம பஞ்சாயத்துக்கள் என கைப்பற்றியிருப்பதால், தமிழ்நாட்டுடன் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களுக்குத் தயாராகிவிட்டனர் காம்ரேடுகள்.

Advertisment

kerala-communist

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா சுரேஷின் தங்க கடத்தல் விவகாரம்கூட கேரள உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா என அரசியல் நோக்கர் நெய்யாற்றின்கரை ஸ்ரீஜாவிடம் கேட்டோம். ""கடந்த ஜூன் 5-ம் தேதி ஸ்வப்னாவின் தங்க கடத்தல் விவகாரம் வெளியே வந்ததிலிருந்து, தேர்தல்வரை காங்கிரசும் பாஜகவும் இது ஒன்றையே பேசி வந்தனர். மீடியாக்களிலும் இதே விவாதம்தான். ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் மீதும் ஆட்சி மீதும் பேச எவ்வளவோ இருந்தும் அதை எதிர்க்கட்சிகள் கண்டுகொள்ளாமல் இதையே பேசியதால் மக்களே சலிப்படைந்து விட்டனர். மத்திய அரசு திட்டமிட்டு முதல்வரை யும் மார்க்சிஸ்ட் அரசையும் கார்னர் செய்கிறது என மக்கள் நினைத்தனர். ஒக்கி புயல் முதல், கொரோனா பேரிடர் வரை பினராய் விஜயன் அரசு சமாளித்ததையும், நிதி உதவியில் மத்திய அரசு அலட்சியமாக இருந்ததையும் மக்கள் மறக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் + மீடியாக்களின் விமர் சனங்களைப் பற்றி கவலைப்படாமல் வீடு வீடாக சென்று கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சாரம் செய்தனர். கட்சியின் தகவல் தொழிட்நுட்ப பிரிவும் சமூக வலைத்தளத்தை சரியாக பயன்படுத்தியது. நடுநிலை வாக்காளர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது'' என்றார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருவனந்தபுரம் மா.செ. நாகப்பன், ""கடந்த முறை காங்கிரஸ் உம்மன்சாண்டியின் ஆட்சியின் கடைசி நேரத்தில் 4 மாதங்களாக முதியோர் பென்சன் வழங்க வில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்ததும் முதல் மாதத்தில் இருந்தே முழுமையாக வழங்கப் பட்டதுடன், 750 ரூபாயில் இருந்து 1400 ஆக உயர்த்தி, தபால் அலுவலகம் மூலம் நேரிடையாக அவர்களின் வீட்டுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. ஓணம் முதல் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 வகை உணவுப் பொருட்கள் கொண்ட இலவச பார்சல், லைஃப் மிஷன் திட்டத்தில் 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடு என திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. வடக்கன்சேரியில் வீடு கட்டப்பட்டபோது, இது சொப்னாவின் தங்ககடத்தல் பணம் என புகார் கிளப்பி, அமலாக்கத்துறையை விசாரணைக்கு அனுப்பியது மோடி அரசு. அமலாக்கத்துறையினரை துரத்தி அடித்த மக்கள்தான் எங்களுக்கு வெற்றியைத் தந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலிலும் இது தொடரும்'' என்றார்.

kerala-communist

அதிகளவில் வெற்றி பெற முடியாத பா.ஜ.க. பல இடங்களிலும் ஊடுருவியுள்ளது. பாஜக மாநில செயலாளர் சுரேஷ் நம்மிடம், ""நாங்கள் இந்த தேர்தலில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். கடந்த முறை காங் கிரசிடம் இருந்த கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, மாநகராட்சி எல்லாவற்றை யும் அவர்கள் இழந்திருக்கிறார்கள். இந்த ffதேர்தலில் பா.ஜ.க.வை தோற் கடிக்க கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் மறைமுகமாக கூட்டணி வைத்திருந்தனர். திருவனந்தபுரம் மாவட்ட பஞ் சாயத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்டும் சேர்ந்துதான் வெறும் 1000 ஓட்டில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து கம்யூ னிஸ்ட் கூட்டணியான எல்.ஜே.டி.யை ஜெயிக்க வைத்தனர். இதையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்''’என்றார். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். இம்முறை காங்கிரசுக்கு சான்ஸ் என எதிர்பார்த்த நிலையில், உள்ளாட்சியிலேயே மண்ணைக் கவ்வியுள்ளது. இது பற்றி கேரளா காங்கிரசாரிடம் நாம் கேட்ட போது, உம்மன்சாண்டி, எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா, காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் மூன்று பேரும் மூன்று விதமாக செயல்படுகிறார்கள். வார்டு கவுன்சிலருக்கு பா.ஜ.க இறக்கிய பெண் வேட்பாளர்களைப் போல, அனுபவமே இல்லாத பெண்களை காங்கிரசும் களமிறக்கியது. இப்படி பல வியூகங்களும் தோல்விதான்.

மத்திய கேரளத்தில் செல்வாக்கு மிக்க கேரளா காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ்கோ மாணியை கூட்டணியில் சேர்க்காமல் விட்டனர். அதுபோல் ஜமாத் இஸ்லாம் அமைப்பின் வெல்ஃபர் பார்ட்டியை காங்கிரசுடன் சேர்க்கக்கூடாது என்று எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி சேர்த்தனர். வெல்ஃபர் பார்ட்டி ஜெயித்தது. காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை. இப்படி பல கணக்கும் தப்பாகிவிட்டது என்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி இடதுசாரிகளுக்கு பெரும் பலத்தை தந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பும் இப்போதே தெரிகிறது.

-மணிகண்டன்

nkn231220
இதையும் படியுங்கள்
Subscribe