லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் உடலை மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே கோவை அரசு மருத்துவர்கள் செய்த போஸ்ட் மார்ட்டத்தில் பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டிருப்பது வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது.
மார்ட்டின் குழும அலுவலகங்களில் நடந்த அதிரடி ஐ.டி. ரெய்டை தொடர்ந்து அவரது உதவியாளர் பழனிச்சாமியிடம் விசாரணை செய்யப்பட்ட மறுநாள் (மே 3-ந்தேதி) ஒரு தண்ணீர்க் குட்டையில் மூழ்கியபடி கண்டெடுக்கப்பட்டது பழனிச்சாமியின் உடல்.
""வருமான வரித்துறை அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லிவிடக்கூடாது என்பதால் மார்ட்டின் அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள்தான் பழனிச்சாமியை படுகொலை செய்துவிட்டார்கள்'' என்று மனைவி சாந்தாமணியும் மகன் ரோஹின் குமாரும் குற்றஞ்சாட்
லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் உடலை மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே கோவை அரசு மருத்துவர்கள் செய்த போஸ்ட் மார்ட்டத்தில் பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டிருப்பது வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது.
மார்ட்டின் குழும அலுவலகங்களில் நடந்த அதிரடி ஐ.டி. ரெய்டை தொடர்ந்து அவரது உதவியாளர் பழனிச்சாமியிடம் விசாரணை செய்யப்பட்ட மறுநாள் (மே 3-ந்தேதி) ஒரு தண்ணீர்க் குட்டையில் மூழ்கியபடி கண்டெடுக்கப்பட்டது பழனிச்சாமியின் உடல்.
""வருமான வரித்துறை அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லிவிடக்கூடாது என்பதால் மார்ட்டின் அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள்தான் பழனிச்சாமியை படுகொலை செய்துவிட்டார்கள்'' என்று மனைவி சாந்தாமணியும் மகன் ரோஹின் குமாரும் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், பழனிச்சாமியின் உடலை போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை) செய்த கோவை அரசு மருத்துவமனை தடயவியல்துறை பேராசிரியர் டாக்டர் ஜெய்சிங் தலைமையிலான டாக்டர்கள் பல்வேறு தடயங்களை மறைத்திருப்பது வீடியோ ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் ராஜேஷ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் கோகுல், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் கொண்ட குழுவை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதுகுறித்து, மூவரில் ஒருவரான எஸ்.ஆர்.எம். கல்லூரி தடயவியல்துறை பேராசிரியரும், இந்தியன் மெடிக்கோ லீகல் அண்ட் எதிக்ஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மெடிக்கோ லீகல் சொஸைட்டியின் தலைவருமான டாக்டர் பி.சம்பத்குமாரிடம் நாம் பேசியபோது, ""பழனிச்சாமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கால் பகுதியின் தோல் சுருங்கியுள்ளது. இரத்தம் கலந்த நீர் வாயிலிருந்து வெளியாகியுள்ளது. இடது கை மணிக்கட்டில் வெட்டுக்காயம் உள்ளது என்றும் வலது கால் முட்டியில் சின்ன காயம் உள்ளது என்றும் டாக்டர் ஜெய்சிங் தலைமையிலான டாக்டர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், பழனிச்சாமியின் உடம்பிலுள்ள பல்வேறு காயங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவே சந்தேகிக்கிறேன்.
இதுபோன்ற சென்சிட்டிவ் கேஸ்களில் இரண்டு மருத்துவக்கல்லூரி தடயவியல் பேராசிரியர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்யவேண்டும். ஆனால், இவ்வளவு பெரிய கேஸில் டாக்டர் ஜெய்சிங் மற்றும் அதே கல்லூரியைச் சேர்ந்த அவருக்கு கீழ் உள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்திருக்கிறார்கள். ஏற்கனவே, இதே டாக்டர் ஜெய்சிங்தான் சின்னசாமி என்பவரின் பிரேத பரிசோதனையை முறையாக செய்யாததால் நீதிமன்றம் தலையிட்டு பிறகு நான், மருத்துவக்கல்வி இயக்குநராக உள்ள டாக்டர் எட்வின் ஜோ உள்ளிட்ட மூன்று தடயவியல்துறை பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்து மறைக்கப்பட்ட பல்வேறு காயங்களையும் தடயங்களையும் கண்டறிந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். இப்போது, இந்த வழக்கிலும் மீண்டும் பரிசோதனை செய்யும்போது பல்வேறு தடயங்கள் தெரியவரும்'' என்றார்.
இந்நிலையில், பழனிச்சாமி உடலின் கழுத்து மையப்பகுதி மற்றும் இரண்டு கால் முட்டியிலும் சிராய்ப்புக்காயங்கள் இருந்தன. மேலும், கை ஆம்ஸ் பகுதியில் இரத்தக்கட்டுகள் காணப்பட்டன. இதெல்லாம் பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோகாட்சியில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடவில்லை. இன்னும் வீடியோவில் சரியாகத் தெரியாத காயங்கள், தடயங்கள் எவையெவை விடுபட்டிருக்கின்றன, என்ன காரணம் என்ற சந்தேகம் எழுகிறது.
இதுகுறித்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜெய்சிங்கை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""உடல் அழுகிப்போனதும் தோல் உரிய ஆரம்பிக்கும். அதைப்பார்த்துவிட்டு அப்படிச் சொல்கிறார்கள்'' என்றவரிடம், "நீங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யும்போதே அந்த வீடியோவில் பல காயங்கள் உள்ளனவே?' என்று நாம் கேட்டபோது, ""இன்னும் சொல்லப்போனால் முதன்முதலில் கைப்பற்றப்பட்ட உடலை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் காயங்கள் எதுவுமே இல்லாமல் நார்மலாகத்தான் இருந்தது. அதெல்லாம், சிராய்ப்புகள் இல்லை. டயட்டம் பரிசோதனையில் தாவரத்தன்மையே இல்லை''’’என்றார்.
மருத்துவத்துறையினர் மறைக்கிறார்கள் என்றால், யாருடைய நிர்பந்தத்திற்காக?
-மனோசௌந்தர்