தி.மு.க.வின் வாக்குச்சாவடி முகவர்கள் பி.எல்.ஏ-2 பயிற்சிப் பாசறைக்கூட்டம் மண்டலவாரி யாக நடைபெற்றுவருகிறது. டெல்டா, தெற்கு, மேற்கு மண்டலம் முடிந்த நிலையில், வடக்கு மண்டலக் கூட்டம் அக்டோபர் 22-ஆம் தேதி திருவண்ணா மலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி என தி.மு.க.வின் 13 மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த சுமார் 13,000 வாக்குச்சாவடி முகவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
150 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கூட்ட அரங்கம் தனி, உணவுக் கூடங்கள் தனியாக அமைக்கப்பட்டன. சாப்பிடும் இடத்தில் தள்ளுமுள்ளு வந்துவிடக்கூடாது என, முகவர்களுக்கு 3 பகுதியாகவும், நிர்வாகிகளுக்கு தனியாக ஒன்றென 4 உணவு பரிமாறும் கூடங்கள் அமைக்கப்பட்டன. மதியம் மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மீன்வறுவல், எலும்புக் குழம்பு, முட்டை என 15 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வடக்கு மா.செ. தரணி வேந்தன், தெற்கு மாவட்ட துணைச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான மு.பெ. கிரி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம்.பி. அண்ணாதுரை, செய்யார் எம்.எல்.ஏ. ஜோதி உட்பட ஒவ்வொருவருக்கும் கூட்ட அரங்கம், உணவு அரங்கம், உணவு, பிற மாவட்ட கட்சி நிர்வாகிகளை ஒழுங்குபடுத்தி அரங்கத்தில் அமரவைப்பது என பணிகள் ஒதுக்கித் தரப்பட்டி ருந்தன. சலசலப்போ, விமர்சனமோ வந்துவிடக் கூடாதென வேலை செய்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk_135.jpg)
அக்டோபர் 21-ஆம் தேதியே திருவண்ணா மலைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரமாண்டமாக வரவேற்பளித்தனர். செங்கம், புதுப் பாளையம், கலசப்பாக்கம் பகுதிகளில் வரவேற்புக்கு பெண்களை கட்சி கிளைக்கழக நிர்வாகிகள் அழைத்தபோது, சில கிராமங்களில் சில பெண்கள், "மாதம் ஆயிரம் ரூபாய் தரும் முதலமைச்சரை வரவேற்க பணமெல்லாம் வேணாம் நாங்க வர்றோம்'' எனச் சொல்லி அவர்களாகவே குட்டி யானை வேன்களில் ஏறிவந்து முதலமைச்சரை பூ தூவி வரவேற்றார்கள் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் சம் பந்தப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என, ஒவ்வொருவருக்கும் அடை யாள அட்டை வழங்கப்பட்டு, கட்சியின் மற்ற நிர்வாகிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்டவர் களுக்கு மஞ்சப்பையில் குறிப்பேடு, பேனா, வாட்டர்பாட்டில் போன்றவை வழங்கப்பட் டன. வரும் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானது. இந்தமுறை பூத்தில் எப்படி செயல்படவேண்டும், வாக்காளர் பட்டியல் ஆய்வு, வாக்காளர் சந்திப்பு குறித்தெல்லாம் கட்சியின் மாநில நிர்வாகிகள் வகுப்புகள் எடுத்தனர். மாலை 4 மணிக்கு கழகத் தலை வரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கூட் டத்தில் உரையாற்றினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/dmk-t.jpg)