"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழகத்தின் அரசியல் களம் உட்பட பல்வேறு தளத்திலும் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.''”

"ஆமாம்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்காக தமிழ்நாட்டுக் கோயிலில் சிறப்பு யாகம் கூட நடத்தப்பட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்காக திருச்சியை அடுத்துள்ள புகழ்பெற்ற திருப்புத்தூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஜூலை 4ஆம் தேதி, சிறப்பு யாகம் மற்றும் ஹோமம் நடத்தப்பட்டி ருக்கிறது. ராகுகால வேளையில் கால பைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சனை களைச் சொல்லி வணங்குவதற்காக, அங்கே  அவரது வலது காது வித்தியாசமாக உள்ளது என்பது, பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பின்னணி யில்தான் இங்கே ராகுலின் அரசியல் எதிர்காலத் திற்காக  பைரவ பிரீத்தி ஹோமம் மற்றும் நவக்கிரக பூஜைகள் உள்ளிட்டவை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு, மறுநாள் பகல் 1.30 மணிவரை நடத்தப் பட்டிருக்கிறது. சோனியாகாந்தி குடும்பத்துக்கு நெருக்கமான கேரள முன்னாள் அமைச்சரான  புள்ளி ராமச்சந்தி ரன் மகனிடம் இதற்கான பொறுப்பு அளிக்கப்பட, அவர் தமிழ்நாடு காங்கிரஸிலுள்ள நண்பர்களிடம் பேசி, இந்த பூஜைகளை நடத்தியிருக்கிறார். டெல்லியி-ருந்து வந்த நான்குபேர், இந்த  நிகழ்ச்சியில் பக்திப் பரவசத்தோடு கலந்துகொண்டு, ராகுலுக்கு பிரசாதத்தை பெற்றுச் சென்றிருக் கிறார்கள். அன்று தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, எள்ளு சாதம்  என ஐந்து வகை பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப்பட்டு கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கும் வழங்கப் பட்டதாம்.''”

Advertisment

"அதுசரி, மாறன் சகோதரர்களின் சொத்து தொடர்பான யுத்தம் சமாதானம் ஆகிவிட்டதே?''”

"ஆமாங்க தலைவரே, சன் குழுமத் தலைவரும் தன் சகோதரருமான கலாநிதி மாறன், சன் டி.வி.யின் 12 லட்சம் பங்குகளை ஒரேநாள் இரவில் முறைகேடாகத் தன் பெயருக்கு மாற்றி, நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார் என்று கூறி, அவருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸை கடந்த மாதம் அனுப்பியிருந்தார் தயாநிதி மாறன் எம்.பி. இது அரசியல் வட்டாரத்திலும் ,தொழில்துறை வட்டாரத்திலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய நிலையில்... இந்த விவகாரத் தில் சிக்கலை உண்டாக்கும் நோக்கத்தில், இது தொடர்பான தகவல்களை உளவுத்துறை மூலம் திரட்டத் தொடங்கியது டெல்லி. சகோதரர்களின் உரசலை வைத்து, பா.ஜ.க. குளிர்காய நினைத்தது. நிலைமை திசைமாறிப் போக ஆரம்பித்ததை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், மாறன் சகோதரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு இடையே சமாதானக் கொடியைப் பறக்க வைத்துவிட்டார்.''”

"கட்சிக்குப் புதிய உறுப்பினர்களை தி.மு.க. மளமளவென்று சேர்க்கிறதே?''”   

Advertisment

"ஓரணியில் தமிழ்நாடு எனும் திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி தொடங்கிவைத்தார் ஸ்டாலின். இதனையடுத்து மாவட்டம், நகரம், ஒன்றிய அளவில் இதனைக் கொண்டுசென்று உறுப்பினர்களைச் சேர்த்துவருகின்றனர் தி.மு.க.வினர். 9ஆம் தேதிவரை சுமார் 33 லட்சம் உறுப்பினர்கள் தி.மு.க.வில் புதிதாக இணைந் திருக்கிறார்கள். இதுகுறித்த புள்ளிவிபரங்கள் தினந்தோறும் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக மக்களை அணுகும் தி.மு.க.வினர், மக்கள் கேட்கும் கேள்விகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், உணர்வுகள், எதிர்கொள்ளும் சிக்கல்கள் என அனைத்து விபரங்களையும் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறார்களாம்.  அதனை கவனிக்கும் அவர், அது குறித்து தேவையான அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு அவ்வப்போது கொடுத்துவருகிறார்.''” 

"அ.தி.மு.க. தரப்பை திருமாவளவன் உற்சாகப்படுத்தியிருக்கிறாரே?''”

"விடுதலைச்சிறுத்தைகள் திருமாவளவனின் பேச்சுக்களால் தி.மு.க. கூட்டணியில் அடிக்கடி சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  அந்த வரிசையில்,  எடப்பாடிக்கு திருமா சொன்ன வாழ்த்தும் சேர்ந்திருக்கிறது. அதாவது, ’"மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்'’என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி. இந்த நேரத்தில் திருமாவோ, ’"எடப்பாடி தொடங்கியிருக்கும் இந்தப் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!'’ என்று தெரிவித்திருக்கிறார். இதுதான் ஒட்டு  மொத்த தி.மு.க. தரப்பையும் மீண்டும் அதிர வைத்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசிய தி.மு.க. சீனியர்கள், "எடப்பாடிக்கு, திருமா வாழ்த்து சொல்கிறார் என்றால், அதற்குள் தி.மு.க. தோற்க வேண்டும் என்கிற கருத்து தொக்கி நிற்கிறது. இதன்மூலம் தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை திருமா எடுத்துள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது’ என்று சொல்லியிருக் கிறார்கள். இதன் பொருளை உணர்ந்த ஸ்டா லினும், வருத்தமடைந்திருக்கிறார். இதையறிந்த திருமா, உடனே ஸ்டாலினிடம் அப்பாயிண்ட் மெண்ட் வாங்கிக்கொண்டு போய் அவரை சந்தித்தார். அதன்பின் வெளியே வந்தவர், "தமிழகத்தில் ரெண்டே கூட்டணி இருந்தாலும், தி.மு.க. கூட்டணிதான் வெல்லும்'’என்று கூறியிருக்கிறார். அதேநேரம் எடப்பாடிக்கு திருமா சொன்ன வாழ்த்து, அ.தி.மு.க. தரப்புக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.''”

"தமிழ்த் திரைப்பட நடிகைகள் நான்குபேர் பெரும் நெருக்கடியிலும் கலக்கத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”

rang2

"போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் சிக்கியது கோலிவுட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. அவர்கள் இருவருக்கும் தற்போது நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், இந்த போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல திரைப் பட நடிகைகள் நான்குபேர் தவிக்கிறார்களாம். அதில் பிரதானமாக இருப்பவர் ’மூன்றுஷா’ நடி கையாம். இவர் த.வெ.க. தலைவருக்கு தோஸ்த்தாம். இவரோடு காங்கிரஸ் பெண் தலைவர் பெயரிலான நடிகையும், வாள மீனுக்கும்’ பாடல் நடிகையும், ’மச்சான்’ நடிகையும் வில்லங்கமான அந்த போதை நெட்வொர்க்கில் இருப்பதால், அடுத்து கைது நடவடிக்கை தங்கள் மீது பாயுமோ என்கிற பதட்டத்தில் ரொம்பவே கதிகலங்கிப் போயிருக்கிறார்களாம்.''”

"திருப்புவனம் அஜித் குமார் மரண விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா பற்றி பல்வேறு தகவல்கள் உலவுகின்றதே?''”

"திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல் பேராசிரியர் நிகிதாவுக்கு, அரசுக் கல்லூரியில் வேலை வாங்கிக்கொடுத்தவர் அ.தி.மு.க. மாஜி மந்திரியான திண்டுக்கல் சீனிவாசனாம். இதற்குக் காரணம் சாதி பாசமாம். இந்தத் தகவல் திண்டுக்கல் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. விவகாரத்தில் சிக்கிய நிகிதா, கல்லூரி மாணவிகள் கேள்விகளால் குடைந்ததால் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டாராம். அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட வி.ஐ.பி.க்களிடம் நட்பு வளர்த்துக்கொண்டிருக்கும் அவர், கொஞ்சகாலமாகவே பா.ஜ. க.வுக்கும் அதன்  மாஜி மாநிலத் தலைவருக்கும் விசுவாசமானவராகவே காட்டிக்கொண்டாராம். இவர் 40-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி களிடம் நட்பை உருவாக் கிக்கொண்டதோடு ஒரு பவர் சென்டராகவே திண்டுக்கல் பகுதியில் வலம்வந்திருக்கிறார். இவ்வழக்கின் முக்கிய சூத்திரதாரியான நிகிதாவிடம், நகைத் திருட்டு குறித்த விவரங்களையும், அவர் யாரிடம் புகாரளித்தார், எதனால் இந்தஅளவுக்கு கடுமையாக விசாரணை நடந்தது, அவரின் பின்புலம் என்னவென்று இதுவரை விசாரிக்காதது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது என்கிறார்கள்.''”

"அதுசரிப்பா, திருப்புவனம் அஜித்குமார் குடும்பம் அரசு உதவியில் அதிருப்தி தெரிவித்திருக் கிறதே?''”

rang1

"திருப்புவனம் அருகேயுள்ள மடப் புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் லாக்கப் மரணத்தை தற்போது சி.பி.ஐ. விசாரித்துவருகிறது. ’விசாரணையை உடனடியாகத் தொடங்கி, ஆகஸ்ட் 20க்குள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின், எம்.எஸ். சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் அஜித்குமாரின் தம்பி நவீனோ, இழப்பீடாக அரசால் வழங்கப்பட்டிருக்கும் அரசுப்பணி, நிலம் குறித்து தன் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார். தனக்கு அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா காட்டுப் பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதுபோல்... தனக்கு வழங்கப்பட்ட வேலை, தான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள காரைக்குடி ஆவினில் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவித்திருக் கிறார். இது சமூக வலைத் தளங் களில் சர்ச்சையாகியிருக்கிறது.''

"பொள்ளாச்சி நகராட்சி  கவுன்சிலர்களுக்கு எதிராக அங்குள்ள ஊழியர்களே கொந்தளித் திருக்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, அங்குள்ள நகராட்சி ஆணையர் கணேசனை ஆவேசத்தோடு சந்தித்த நகராட்சி ஊழியர்கள், "நகராட்சி விதிப்படி, பணம் கட்டி னால்தான் குடி நீர் இணைப்பு வழங்க முடியும். அதுபோல் தான் கட்டிட அப்ரூவலும். ஆனால் இதுபற்றி எல்லாம் கவலைப் படாமல் சம்பந்தப்பட்ட கவுன் சிலர்களோ அல்லது அவர்களது கணவர்களோ எங்களுக்கு போன் செய்து,  பணத்தை பிறகு வாங்கிக்கலாம். கனெக்ஷனை இப்பவே கொடுன்னு வற்புறுத்த றாங்க. நிலைமையைச் சொன்னால், ஏகவசனத்தில் திட்டறாங்க. வரி வசூல் செய்யப்போனாலும் மிரட்டுகிறார்கள். இதற்கெல் லாம் ஒரு தீர்வு வேண்டும்'’என்று கொதித்திருக்கிறார்கள். இதையெல்லாம் அமைதியாகக் கேட்ட ஆணையரோ, "ஏற்கனவே நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், ஊழி யர்கள் யாரையும் மரியாதை குறைவாகப் பேச வேண்டாம் எனத் தெரிவித்துள்ளோம். அதிகாரிகளும் கவுன்சிலர்களும் இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்கான பணியை திறம்பட செய்யமுடியும். எனவே கவலைப்படாதீர்கள். விரைவில் தீர்வு காணப்படும்' ’என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்.''”

"ஜூலை 8-ஆம் தேதி தமிழகத்தை மீட்போம் பிரச்சாரப் பயணத்தில் எடப்பாடி பேசிய கருத்து சர்ச்சையாயிருக்கே?''…”

"ஆமாங்க தலைவரே, கோவை வடவள்ளிப் பகுதியில பேசும்போது, "தி.மு.க. அரசுக்கு கோயிலைக் கண்டா லே கண்ணை உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை யெல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஏன் அரசாங்கப் பணத்தில் கல்லூரி கட்டினால் வேண்டாம் என்போமா?' எனப் பேசியிருக்கிறார். இதற்கெதிராக சமூக ஊடகங்களில் கல்வியாளர்களும், நடுநிலையாளர்களும் வெளுத்துவாங்கியதோடு பக்தவச்சலம், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலே அற நிலையத்துறையால் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் பட்டியலை வைரலாக்கினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், “பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாகக் கட்டடத்தை அறநிலையத் துறையின் பணத்தைச் செலவிட்டுக் கட்டியதோடு, அதை அன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியே திறந்து வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி "பா.ஜ.க.வின் அறநிலையத்துறைக்கு எதிரான கொள்கைக்கு அ.தி.மு.க. உடன்படுகிறதா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். பல்வேறு மாணவர் அமைப்புகள் எடப்பாடியின் பேச்சுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித் துள்ளன. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், "சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடையவேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பேசுகிறார்'” என்றதோடு, கேரளா, ஆந்திராவில் கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் எண் ணிக்கையையும் குறிப்பிட்டு எடப்பாடியின் மூக்கை உடைத்திருக்கிறார்.”

rang3

"அதுமட்டுமில்லைப்பா, அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ், எடப்பாடியின் இந்தக் குரலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையும் அடையா ளம் கண்டிருக்கிறார். "1963-ல் பக்தவச்சலம் தீர்மானம் கொண்டுவந்து சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு தமிழகத்தில் அறநிலையத்துறை உதவியின் மூலம் பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இது முதல்வராக இருந்தவருக்கு எப்படித் தெரியாமல் போனது? பா.ஜ.க.வின் குரலாக எடப்பாடி ஒலிக்கத் தொடங்கியிருப்பதன் முதல் அடையாளம் இது. ஆர்.எஸ்.எஸ்.ஸே சொல்லத் தயங்கக்கூடிய விஷயத்தை எடப்பாடி பேசுகிறார் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர் களாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது' என விமர்சனமும் செய்திருக்கிறார்”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந் துக்கறேன். சென்னை வடக்கு மாவட்டத்தில் கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. வடக்கு மாவட்ட மா.செ. ஆர்.டி.சேகர், அவர்களை அழைத்து கண்டித்தும் அவர்கள் திருந்தவில்லை. மதுரை பாணியில் முதல்வர் ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றுவாரா என தி.மு.க. உடன் பிறப்புக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்களாம்.''’