Advertisment

உயரதிகாரிகள் பலரும் நிர்மலாவுக்கு நெருக்கம்! -சரண்டர் கருப்பசாமி பேட்டி!

karuppasamy

ராஜ்பவன் ராணி நிர்மலாதேவியை விவகாரத்தில் முக்கிய துருப்புச்சீட்டு கருப்பசாமி. கருப்பசாமியின் மனைவி கனகமணியை போலீசார் விசாரணைக்கு அழைத்து மிரட்சியை ஏற்படுத்தியதும் மதுரை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண்டராக வந்தார் கருப்பசாமி.

Advertisment

karuppasamy

நாமும் அங்கு விரைந்தோம்...

""சரண்டர் ஆவதற்கு முன்னால போலீஸ் அரெஸ்ட் பண்ணிடக்கூடாதுங்கிறதுக்காக கருப்பசாமியை வக்கீல் டிரெஸ்ல, அவரோட வக்கீல் நிப்பாட்டி வச்சிருக்காரு''’என நமக்கு அடையாளம் காட்டினார் வக்கீல் நண்பர் ஒருவர்.

Advertisment

அவரை நெருங்கி

ராஜ்பவன் ராணி நிர்மலாதேவியை விவகாரத்தில் முக்கிய துருப்புச்சீட்டு கருப்பசாமி. கருப்பசாமியின் மனைவி கனகமணியை போலீசார் விசாரணைக்கு அழைத்து மிரட்சியை ஏற்படுத்தியதும் மதுரை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண்டராக வந்தார் கருப்பசாமி.

Advertisment

karuppasamy

நாமும் அங்கு விரைந்தோம்...

""சரண்டர் ஆவதற்கு முன்னால போலீஸ் அரெஸ்ட் பண்ணிடக்கூடாதுங்கிறதுக்காக கருப்பசாமியை வக்கீல் டிரெஸ்ல, அவரோட வக்கீல் நிப்பாட்டி வச்சிருக்காரு''’என நமக்கு அடையாளம் காட்டினார் வக்கீல் நண்பர் ஒருவர்.

Advertisment

அவரை நெருங்கியதும், மெதுவாக பேசினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

நிர்மலாதேவியை எங்கே எப்போது பார்த்தீர்கள்?

கடந்த மார்ச் 09-ஆம் தேதி அன்னைக்குத்தான். அதுவும் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில புத்தாக்கப் பயிற்சிக்கு வந்தப்பதான் முதன்முதலா பார்த்தேன். "நாலுநாள் நிர்மலாதேவி இங்க இருப்பாங்க, அவுங்களுக்கு வேண்டிய உதவிகளை செஞ்சு கொடுங்க'ன்னு என்னிடமும் முருகனிடமும் இயக்குநர் கலைச்செல்வன்தான் அறிமுகப் படுத்தி வச்சாரு. எனக்கு திருச்சுழி, நிர்மலாதேவிக்கு அருப்புக் கோட்டைங்கிறதால, ஊர்ப்பாசத்துல ஹெல்ப் பண்ணுனேன். ரெண்டு தடவை அவருடன் காரில் போயிருக்கேன், அவ்வளவுதான். பயிற்சி யெல்லாம் முடிஞ்சப்புறம் "ஊருக்கு வரலையா?'ன்னு நிர்மலா தேவி யிடம் கேட்டதுக்கு, "நீங்க போங்க நான் இங்கே கெஸ்ட்ஹவுஸ்ல தங்கிக்கிறேன்'னு சொல்லிட்டாங்க. யுனிவர்சிட்டியில அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து, "சரி, பெரிய இடத்து சமாச்சாரம்'னு நானும் ஒதுங்கிட்டேன்.

சரி, கவர்னர் வந்த அன்று யுனிவர்சிட்டியில நிர்மலாதேவி இருந்தாரா?

ஆமாங்க அங்கதான் இருந்தாங்க. நிகழ்ச்சி நடக்கும்போது, பேரா சிரியர்களுக்கும் வி.ஐ.பி.களுக்கும் கூல்டிரிங்ஸ் கொடுத்தது நிர்மலாதேவிதாங்க.

நிர்மலாதேவி விவகாரத்தில் உங்க பேரும் உதவிப் பேராசிரியர் முருகன் பேரும் அடிபடக் காரணம் என்ன?

நாங்க ரெண்டு பேரும் அப்பாவிகள். யுனிவர்சிட்டி உயர் அதிகாரிகள் பலரும் நிர்மலாதேவிக்கு ரொம்ப நெருக்கம். அவர்களின் கட்டளைப்படி நாங்க செயல்பட்டோம். அந்த உயர் அதிகாரி களிடமிருந்து விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். நாங்க மட்டும்தான் குற்றவாளிகளா? நிர்மலாதேவியின் ஆடியோ பேச்சைக் கேட்டு ஆடிப்போயிட்டேன். இவ்வளவு மோசமா இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாது சார்’என்பதோடு முடித்துக்கொண்டு, சரணடைய கோர்ட்டுக்குள் சென்றுவிட்டார்.

கருப்பசாமியின் வக்கீல் பாஸ்கரை நாம் சந்தித்தபோது, ""கருப்ப சாமி சாதாரண ஸ்டூடண்ட் தான். இவருக்கு என்ன அதிகாரம் இருந்துவிடப் போகிறது? அதிகாரத்தில் இருப்பவர்களின் முழு ஆசியோடுதான் நிர்மலாதேவி இந்த ஆட்டம் போட்டிருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, சி.பி.ஐ. விசாரணைதான் வேண்டும்''’என்றார்.

-சந்திப்பு: அண்ணல்

Nirmala Devi Nirmaladevi karuppasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe