தாமதமாக கிடைத்தாலும் நீதியை நிலைநாட்டியிருக்கிறது அந்த தீர்ப்பு.
விருத்தாசலம் மாவட்டம் புதுக்கூரைப் பேட்டையைச் சேர்ந்த காதல் ஜோடி முருகேசன்- கண்ணகியை ஆணவக் கொலை செய்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், முக்கிய குற்றவாளியும் கண்ணகியின் அண்ணனுமான மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனையும் விதித்துள்ளது.
தீர்ப்பின் விவரங்களைப் பார்க்கும் முன், அந்த காதல் ஜோடிக்கு என்ன நடந்ததென பார்ப்போம்.
புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசன். அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் துரைசாமி மகள் கண்ணகி. இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களை காதல் இணைத்து வைத்தது. சமூகத்தின் எதிர்ப்பு இருக்கும் எனத் தெரிந்த இந்த ஜோடி, 2003 ஆம் ஆண்டு, ஜூலை 3-ஆம் தேதி ஊரைவிட்டே ஓடி கடலூர் சார்பதிவாளர் அலு வலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டது.
இவர்களது பதிவுத் திருமணம் பற்றி ஊருக்குத் தெரியவந்த நிலையில் முருகேசன், கண்ணகியை அழைத்துச்சென்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டியிலுள்ள தனது உறவினர் வீட்டில் மறைத்துவிட்டார். அவரும் திருப்பூரில் போய் மறைவாக இருந்துவந்தார். எனினும் கண்ணகியின் உறவினர்கள், முருகேசனின் தந்தையை உருட்டி மிரட்டி அவரது இருப் பிடத்தை அறிந்து அவரைத் தூக்கிவந்திருக் கின்றனர்.
முருகேசனை அடித்துமிரட்டி கேட்ட நிலையிலும் கண்ணகியின் இடத்தைத் தெரிவிக்க வில்லை. பின் அவரது காலைக் கட்டி கிணற்றில் தலைகீழாக இறக்கி சித்ரவதை செய்தநிலை யில் முருகேசன் கண்ணகி யின் இருப்பிடத்தைத் தெரிவித்திருக்கிறார். கண்ணகியும் அழைத்துவரப்பட்ட நிலையில், சாதி தாண்டி யாரும் காதல் செய்ய துணிவு வராம லிருக்க இருவருக்கும் தரும் தண்டனை ஒரு எச்சரிக்கையாக அமையவேண்டுமென கண்ணகி யின் சமூகத்தினர் முடிவுசெய்திருக்கின்றனர்.
இருவரையும் முந்திரி மரக்காட்டுக்குக் கொண்டுசென்று கையில் விஷம் தந்து குடிக்க வலியுறுத்தியிருக்கின்றனர். கண்ணகி, விஷத்தைக் குடித்துவிட்டார். விஷத்தைக் குடிக்க மறுத்த முருகேசனை, படுக்கவைத்து அவரது காதிலும் மூக்கிலும் விஷத்தை வலுக்கட்டாயமாகப் புகட்டி அவரைச் சாகடித்திருக்கின்றனர். பின் இருவரையும் அங்கேயே வைத்து எரித்துவிட்டு, சாதி தாண்டி காதலித்து திருமணம் செய்த பயத்தில் தற்கொலை செய்துவிட்டதாக விஷயத்தை முடிக்கப் பார்த்திருக்கின்றனர்.
இதனை விருத்தாசலம் காவல்துறையினர் மூட

இதனை விருத்தாசலம் காவல்துறையினர் மூடிமறைத்த நிலையில், நக்கீரன், 18-7-2003 தேதியிட்ட இதழின் முன்பக்கத்தில் "விஷம் தந்து காதலர்கள் எரிப்பு! தமிழக பயங்கரம்!' என்ற தலைப்பில் வெளியுலகிற்கு கொண்டுவந்தது. (நமது செய்தியாளர் எஸ்.பி.சேகர், இதனை விரிவாகப் புலனாய்வு செய்து எழுதியிருந்தார்). அதையடுத்து சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகள் கொலைசெய்து எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியெடுத்தது.
பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கண்ணகி, முருகேசனை கொலை செய்தவர்கள் மீது குற்ற எண் 356/2003-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2004-ல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பின்னர் கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், (வழக்கு எண் 3/2019) எஸ்.சி- எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா, 24-09-2021 அன்று இவ் வழக்கில் அதிரடி தீர்ப்பு கூறினார். அதில் “கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனை அறிவித்ததுடன், ரூபாய் 4.65 லட்சம் அபராதமும் செலுத்தவேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும், சம்பவத்தின்போது இன்ஸ்பெக்டராக இருந்து, பின்னர் டி.எஸ்.பி. யாகி ஓய்வுபெற்றுள்ள செல்லமுத்து, சப்- இன்ஸ்பெக்டராக இருந்து, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று லஞ்ச வழக்கில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்மாறன் இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், முருகேசனின் பெற்றோருக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீடாகவும் வழங்கவேண்டும் எனவும், கண்ணகி அப்பா துரைசாமி, மற்றொரு சகோதரர் ரங்கசாமி மற்றும் கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை ஆகியோருக்கு தனித்தனியே 3 ஆயுள் தண்டனைகள் விதிக்கப் பட்டு, ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என வும், மேலும் அவர்கள் தலா 4.15 லட்சம் அபரா தம் செலுத்தவேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கி னார். அதேசமயம், முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி, உறவினர் குணசேகரன் இருவரும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பினை வழங்கிய நீதிபதி உத்தமராசா, “"ஜாதி கவுரவத் துக்காக மனித சமூகத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளன. கண்ணகிதான் ஊரை எரிக்கவேண்டுமே தவிர, கண்ணகியை எரித்துக்கொல்லக்கூடாது. தமிழ் மண்ணில் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி எரித்துக் கொல்லப்பட்டதே கடைசியாக இருக்கவேண்டும்'' என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரட்டைக் கொலைகள் பற்றியும், தீர்ப்பு குறித்தும் வழக்கின் தொடக்கத்திலிருந்து போராடிவரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.சுகுமாறன் நம்மிடம், “"கண்ணகியும், முருகேசனும் காதலித்து 5-5-2003-ல் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இவர் களை ஊரார் பிடித்துவந்து மூக்கிலும், காதிலும் விஷம் ஊற்றிக் கொன்று, இரு உடல்களையும் தனித்தனியே எரித்துவிட்டனர். மூடி மறைக்கப் பட்ட இச்சம்பவம் நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரையால் வெளியுலகிற்குத் தெரியவந்தது.
விருத்தாசலம் காவல்துறையினர் கண்ணகி யின் அப்பா துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி யன் உள்ளிட்ட நால்வர்... கண்ணகிக்கும், முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி உள்ளிட்ட நால்வர், முருகேசனுக்கும் விஷம் கொடுத்துக் கொன்று எரித்துவிட்டதாக வழக்குப் பதிவு செய்து 8 பேரையும் கைதுசெய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
நக்கீரன் செய்தியைப் படித்த உடனேயே வழக்கறிஞர் பொ.இரத்தினம், நான் மற்றும் நண்பர்கள் நேரில்சென்று பாதிக்கப்பட்டவர்களி டம் விசாரித்தோம். பின்னர், வழக்கறிஞர் இரத்தினம், முருகேசனின் அப்பா சாமிக் கண்ணுவை மனுதாரராக கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.அசோக்குமார், 2004-ல் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், கண்ணகியின் அப்பா துரைசாமியின் பிணையை ரத்து செய்தும் உத்தரவிட்டார். சி.பி.ஐ. 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கின் 81 சாட்சிகளில், குற்றவாளிகள் மிரட்டியதால் 36 பேர் பிறழ்சாட்சியம் அளித் தனர். குற்றவாளிகளின் மிரட்டலால் 1-9-2017 அன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவேண் டிய அருந்ததிய சமூகத்தை சேர்ந்த செல்வராஜ் 31-08-2017 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரிலும் சந்தேக மரணம் (ஈழ்.ட.ஈ. நங்ஸ்ரீற்ண்ர்ய் 174) என முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்த விருத்தாசலம் காவல் துறையினர் அதற்கு மேல் சிறிதும் நகரவில்லை.
இதனால் குற்றவாளிகள் மருதுபாண்டியன், கந்தவேல், ஜோதி, ராமதாஸ் ஆகிய நால்வரின் பிணையை ரத்துசெய்ய, சாட்சிகளான முருகேச னின் தங்கை தமிழரசி, அவரது கணவர் மாயவேல், உறவினர் பட்டுசாமி ஆகியோர் மூலம் கடலூர் விசாரணை நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான முருகேசனின் சின்னம்மா சின்னப் பிள்ளையிடம் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் முன்பு வாக்குமூலம் (நற்ஹற்ங்ம்ங்ய்ற் ன்ய்க்ங்ழ் நங்ஸ்ரீற்ண்ர்ய் 164 ஈழ்.ட.ஈ) பெற்றபோதும், அவரை இவ்வழக்கில் சாட்சியாக சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் சேர்க்கவில்லை. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்ய போராடிய பிறகே நீதிபதிகள் எஸ்.வைத் தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் அடங் கிய அமர்வு உரிய உத்தரவைப் பிறப்பித்தனர்.
வழக்கின் தொடக்கத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள், புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் என பலரும் தடுமாறினர். காவல்துறை அதிகாரிகள் கொலையாளிகளுக்கு துணைபோயினர். பாதிக்கப்பட்டவர்களுக்கும், வழக்கை நடத்தியவர்களுக்கும் மிரட்டல்கள், பேரங்கள் நடைபெற்றன. அதையும் தாண்டி பாதிக் கப்பட்டவர்கள் உறுதியாக வும், மனித உரிமை ஆர்வலர் கள் அவர்களுக்கு ஆதரவாக வும் இருந்ததன் காரணமாக இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது''’என்றார்.
இந்த தீர்ப்பு குறித்து, கொல்லப் பட்ட முருகேசனின் பெற்றோர் சாமிக்கண்ணு - சின்னப்பிள்ளை இரு வரும் நம்மிடம், “எங்களுக்கு 4 பசங்க, 3 பொம்பள பசங்க. மூத்தவன்தான் முருகேசன். எங்களோட நிலம், நீச்சு, நகை நட்டுல்லாம் வித்து அவன படிக்க வச்சோம். எங்களுக்கு இந்த (குப்பநத் தம்) ஊர்ல பிரச்சினை, எனக்கு ஆபத்துன்னு பெரசன்டு (கண்ணகியின் தந்தை துரைசாமி) கூரப்பேட்டைல தங்க வச்சாரு. அதனாலதான் அங்க போய்த் தங்கினோம்.
எங்க பையன் படிப்பெல்லாம் முடிச்சுட்டு பெங்களூர்க்கு வேலை வந்துருக்கு போறம்பான் னுட்டு போனான். மறுநாளு பெரசன்டு (பிரசி டெண்ட் துரைசாமி) பையன் மருதுபாண்டி அருவாள எடுத்துகிட்டு வந்து, ‘என் தங்கச்சிய காணம், உம் பையந்தான் இழுத்துக்கிட்டு போய்ட்டான்... உம் பையன் வரலன்னா உன்ன வெட்டு வேன்னான்.’ நான் என் பையனை பல இடங்கள்ல தேடினேன். நான் மன்னார்குடிக்கு தேட போய்ட்டு மறுநாள் விடியக்காலை ஊருக்கு வந்தேன். விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டுல என் சொந்தக்காரர் ஒருத்தரு ‘இங்கே என்ன பண்றேன் னாரு, பையன காணம் தேடிட்டு வர்றேன்னேன். அப்பதான் அவரு ‘உம் பையன் கத முடிஞ்சுடிச்சி. கொன்னு விடிகாலை 4 மணிக்கே எரிச்சுட்டாங்கனாரு (அழுகிறார்). அதுக்கு பெறகு என்ன மிரட்டி எழுதி வாங்கினாங்க. போலீஸ் காரங்க லட்சக்கணக்குல பணத்தை வாங்கிக்கிட்டு நானும் சேர்ந்து எம் பையனுக்கு விஷம் கொடுத்து கொன்னதா, அவங்க தரப்புல நாலு பேர் மேலயும், எங்க தரப்புல நாலு பேர் மேலயும் கேஸ் போட்டு ஒரு மாசம் ஜெயில்ல இருந்தன்.
அதுக்கு பிறகு நக்கீரன் புக்ல செய்தி போட்ட பிறகுதான் கட்சிக்காரங்க, வக்கீல் ரத்தினம் ஆளுங்க வந்து விசாரிச்சாங்க, சி.பி.ஐ.காரங்க மாறு வேசத்துலல்லாம் ஒரு வருசத்துக்கு மேல விசாரிச்சு மெட்ராஸ்ல மீட்டிங் போட்டு வாக்குமூலம் வாங்கு னாங்க. 18 வருசம் கழிச்சி எங்களுக்கு நீதி கிடைச் சுருக்கு. அந்த நீதிபதி நல்லாருக்கணும்''’என்றார்.
தொடர்ந்து தாயார் சின்னப்பிள்ளை, “"அந்த ஏழாம் தேதி ராத்திரி 2 பேரையும் அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கேள்விப்பட்டு ஓடினோம். ஊரே கூடிநிக்குது. நாங்க நாலு பேரு என்ன பண்ணு வோம். 10 பேருக்கு மேல அடிச்சானுவ, உதைச் சானுவ. புள்ளய விடுங்கன்னு கதறினோம். காதுலயும், மூக்குலயும் வெசத்த ஊத்தி, சாகடிச்சு, எரிச்சுட்டானுவ. போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா, அவங்களும் என்ன அடிச்சாங்க. பின்னால எங்க ஊட்டுக்காரரு மேலயே கேசு போட்டு ஜெயில்ல போட்டானுங்க. அவங்க எல்லாத்துக்குமே தூக்குத்தண்டனை கொடுத்தாலும் பரவாயில்ல'' என 18 ஆண்டு வேதனையில் வெடிக்கிறார்.
சாதி ஆணவக் கொலைக்கு நீதி கிடைத்ததாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் மானுடத்தின் மீது அக்கறையுடையோர்.
-----------------------------------
துணைவேந்தர் விளக்கம்
"லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திறந்தவெளி பல்கலைக்கழகம்' என்ற தலைப்பில் நக்கீரன் 8-10 செப்டம்பர் 2021 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து கிடைத்தால் வெளியிடத் தயாராக இருப்பதைக் குறிப்பிட்டிருந்தோம். துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி அனுப்பியுள்ள விளக்க கடிதத்தில், பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பேற்ற 3-6-2019க்கு முன்பாக நடந்த முறைகேடுகளுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், பதவி ஏற்றதிலிருந்து, ஆசிரியர் பணி நியமனம் எதுவும் நடைபெறவில்லை என்றும், 5 ஆண்டுகளாக யு.ஜி.சி. நிதி வரவில்லை என்றும், முந்தைய ஆண்டுகளின் சேர்க்கையைவிட தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இவை தொடர்பாக, செய்திக் கட்டுரையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என விளக்கம் அளித்துள்ளார்.
-(ஆர்)