த்மநாபபுரம் தொகுதியில் தொடர்ந்து இரண்டுமுறை வென்று, பால்வளத்துறை மந்திரியாக இருக்கும் மனோ தங்கராஜுக்கு, சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பும், கூட்டணிக் கட்சியினரின் வெறுப்பும் அவரை மீண்டும் கரை சேர்க்குமா? என்கிற கேள்வியை தொகுதியில் பலமாக எழுப்பியுள்ளது.

Advertisment

தி.மு.க. குமரி மேற்கு மா.செ.யும் மந்திரியுமான மனோ தங்கராஜ், 2021-ல்  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. ஜான்தங்கத்தை தோற்கடித்து, குமரி மாவட்டத்தின் ஒரேயொரு தி.மு.க. எம்.எல்.ஏ. வாக ஆனதால், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக்கப்பட்டார். பின்னர் இரண்டாண்டுகளில் மந்திரி பதவி பறிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 13 மாதங்களுக்கு பிறகு பால்வளத்துறை மந்திரியானார்.

Advertisment

இந்நிலையில், மனோ தங்கராஜால் ஒ.செ. ஆக்கப்பட்ட ஐந்து ஒ.செ.க்கள், இரண்டு ந.செ.க்கள் இப்போது அவருக்கெதிராக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க. கட்சிகளும் அவரை வெறுப்புடன் பார்க்கின்றன. உ.பி.க்கள் சிலரிடம் பேசும்போது, "குமரி மேற்கு மாவட்டத்தில் மாஜி சுரேஷ்ராஜனின் ஆதரவு நிர்வாகிகள் தான் அதிகம். இதனால் ஆரம்பத்தில் அந்த நிர்வாகிகளை களையெடுத்த மனோ தங்கராஜ், இப்போது சுரேஷ்ராஜனுடன் நெருக்கமாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் இவரை விரோதியாகவே பார்க்கிறார்கள். இந்த நிலையில்தான் மனோ தங்கராஜ் களையெடுத்த எக்ஸ் மா.து.செ. ஜான் கிறிஸ்டோபர், மனோ தங்கராஜுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தேர்தல்களாக பத்மனாபபுரம் தொகுதிக்கு சீட் கேட்டுவரும் நிலையில், இந்த முறை அந்த வாய்ப்பு உங்களுக்குத்தான் என்று தி.மு.க.வில் உயர் பதவியில் உள்ள இருவர் உறுதியளித்ததாகக் கூறும் அவரின் ஆதரவாளர்கள், தொகுதி முழுக்க ஜான் கிறிஸ்டோருக்காக சுவர் விளம்பரங்களில் இறங்கிவிட்டனர். 

அதேபோல், மனோ தங்கராஜ் பக்கமிருந்த முக்கிய நிர்வாகிகளை தனது பக்கம் அரவணைத்துக் கொண்டு, திண்ணை கூட்டங்களை நடத்திவரும் திருவட்டார் யூனியன் சேர்மன் ஜெகநாதனுக்குத் தான் இந்தமுறை சீட் என்கிறார்கள். இவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோருடன் நல்ல நட்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.

Advertisment

இதேபோல் பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவரான அருள்சோபன், ஜாதி மதம் பாராமல் பழகுவதாலும், தனது சொந்த நிதியால் பணிகளை செய்துதருவதாலும் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார். கலைஞர் காலத்தில், குமரி மாவட்டத்திலுள்ள சில தொகுதிகளுக்கு வேட்பாளரை முடிவுசெய்யுமளவுக்கு அருள் சோபனின் தந்தை ஞானதேவராஜ் இருந்திருக் கிறார். அதே நேரத்தில், 2006-ல் பத்மநாபபுரத்தில் போட்டியிட ஞானதேவராஜிடம் கலைஞர் கேட் டுக்கொண்டும், அந்த வாய்ப்பை ரெஜினால்டுக்கு கொடுத்து எம்.எல்.ஏ.வாக்கினார் ஞானதேவராஜ்.

தற்போது அவருடைய மகன் அருள் சோபனுக்கு போட்டியிடும் ஆசை வந்திருப்பதால், இளைஞரணி ஜோயல் மற்றும் சீனியர் அமைச்சர் மூலமாக காய் நகர்த்திவருகிறார். இதேபோல் மாவட்ட பிரதிநிதியான ஜான்பிரைட்டோடு தொடக்கத்தில் நெருக்கமாகயிருந்த மனோ தங்கராஜ், பின்னர், தனக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பிலிருந்ததால் ஓரங்கட்டத் தொடங்கினார். அதேபோல், மறைந்த டாக்டர் ஆல்பனின் மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் புஷ்பலீலா ஆல்பனுக்கும் மனோ தங்கராஜுக்கும் ஒத்துப்போகாது. இந்நிலையில் தனக்கு இல்லை யென்றால், தனது மகனான மருத்துவரணியை சேர்ந்த டாக்டர் பிஸ்வந்த் ஆல்பனுக்கு சீட் கேட்டுவருகிறார்.

அதேபோல், கிள்ளியூர், மேல்புறம், முன்      சிறை, தக்கலை, திருவட்டார் ஆகிய செ.க்களும், குழித்துறை, கொல்லங்கோடு ந.செ.க்களும் நேரடியாகவே அவரிடம் மல்லுக்கட்டுகிறார்கள். கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், மா.கம்யூனிஸ்ட் மா.செ. செல்லச்சாமி ஆகியோரும், தங்களை மனோ தங்கராஜ் மதிக்காததால் கோபத்தி லிருக்கிறார்கள். தக்கலை பேருந்து நிலையப் பணிகள் மந்தமாக நடந்துவருவதும், திருவட்டார் பேருந்து நிலையம் புதிதாக திறக்கப்பட்டபோதி லும், பெயர் வைப்பதில் சர்ச்சையாகியிருப்பதும் நெகடிவாக பார்க்கப்படுகிறது. கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச்செல்லும் டாரஸ் வாகனங் களால் ஏற்படும் விபத்துக்கள், உயிர்ப்பலிகளுக்கு தீர்வு காணாததும் அவருக்கு எதிராக இருக்கிறது.

இப்படியான சூழலில் மனோ தங்கராஜின் ஆதரவாளர்களிடம் பேசினோம். "மனோ தங்கராஜால் அடிமட்ட தொண்டர்கள் பலரும் பலனடைந்திருக்கிறார்கள். ஒரு சில நிர்வாகிகள், முறைகேடான காரியங் களுக்கு மனோ தங்கராஜை அணுகும்போது அதை எதிர்ப்பதால் அவர்கள் மனோ தங்கராஜுக்கு எதிரான பொய் பிம்பத்தை உருவாக்குகிறார்கள். மூன்றா வது முறையாக மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட் டது. தக்கலை பேருந்து நிலையப் பணி அடுத்த மாதம் முடிவடைந்துவிடும். டாரஸ் வண்டிகளுக்கு நேரக்கட்டுப்பாடு நட வடிக்கை எடுத்துள்ளதால் விபத்துகள் குறைந்துள்ளன'' என்கிறார்கள்.

"தி.மு.க. அரசு கொண்டுவந்த பயனுள்ள திட்டங்களையும், அடிப் படை வசதிகளையும் அனு பவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மனோ தங்க ராஜ் மந்திரியாக இல்லாத அந்த 13 மாதங்களும் மக்களை சந்தித்துக்கொண்டு தான் இருந்தார். எங்கள் ஓட்டு என்பது தி.மு.க. அரசு கொண்டுவந்த மெகா மக்கள் திட்டங்களுக்குத் தான். அது, தி.மு.க.வில் யார் நின்றாலும் போடப் போகிறோம்'' என மக்கள் கூறினாலும், கட்சிக்குள் மனோ தங்கராஜுக்கு எதிராக எழுந்திருக்கும் சுனாமி போன்ற பேரலையில் மனோ தங்கராஜ் நீந்தி கரை சேருவது என்பது கேள்விக்குறியே?