"ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வை உடைப்பதன் மூலம் தமிழக அரசியலில் சில அதிரடிக் காட்சிகளை உருவாக்க பா.ஜ.க. களமிறங்கி இருக்கிறது.''”

"அதற்காகத்தான் ஈஷா மையத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதா?''”

"சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, கடந்த வாரம் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, கோவை ஈஷா மையத்திற்கு வந்தி ருக்கிறார். அவரை ஈஷா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ், மிக உற்சாகமாக வரவேற்றிருக்கிறார். இதன்பின் அங்கு ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அதற்கு அ.தி.மு.க. மாஜி மந்திரியான வேலுமணி மட்டும் அழைக்கப்பட்டி ருக்கிறார். இவர்கள் மூவரும் கலந்துரையாடிய போது, வேலுமணியிடம் நட்டா, "இன்னும் எதற்கு மௌனமாக இருக்கிறீர்கள்? எடப்பாடியுடன் பேசி, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை உடனடியாக உரு வாக்குங்கள். அதற்கு அவர் ஒத்துவரா விட்டால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 40 பேரையாவது உங்களோடு அழைத்து, தனி அணியை உருவாக்குங்கள். அதைப் பெரிய அமைப்பாக உருவாக்கி, அதில் சசிகலா, ஓ.பி.எஸ். என எல்லோருமாக இணைந்து, ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்குங் கள். அதன் மூலம்தான், நந்தியாக நிற்கும் எடப் பாடியை ஓரம்கட்டுவ தோடு, வரும் சட்டமன் றத் தேர்தலில் தி.மு.க.வை முறியடிக்க முடியும். இந்த முயற்சிக்கு டெல்லியின் ஒத்துழைப்பு எல்லா வகையிலும் உங்களுக்கு இருக்கும்' என்றாராம்.''”

"அதற்கு வேலுமணி என்ன சொன்னாராம்?''”

Advertisment

rr"நட்டா சொன்னதை ஜக்கியும் நம்பிக்கை தரும் வகையில் வழிமொழிந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து வேலுமணி, "நானும் அந்த முயற்சியில் தான் இருக்கிறேன். இது தொடர்பாக சிலரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்' என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். இது குறித்த திட்டங்களில் ஜக்கி இருந்த நிலையில்தான், பேராசிரியர் காமராஜ் என்பவர் தங்கள் மகள்களை ஈஷா மையம் வசியப் படுத்தி வைத்திருப்பதாகக் கொடுத்த புகாரின் பேரில் அதிரடியாக ஈஷாவுக்குள் நுழைந்திருக்கிறது காவல்துறை. ஈஷாவிலுள்ள குழந்தைகள், இளம்பெண்கள் என ஒவ்வொருவரிடமும் போலீஸ், தனித்தனியாக வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. அதில் அங்கே பகீரூட்டும் வகையில் பல மனித உரிமை மீறல்கள் இருப்பது வெளிப்பட்டிருக்கிற தாம். அதேபோல் அங்கே தங்கியிருக்கும் வெளி நாட்டினர் பலருக்கும் பாஸ்போர்ட், விசா போன் றவை சரியாக இல்லை என்பதும் தெரிய வந்திருக் கிறதாம். இந்த ரிப்போர்ட் நீதிமன்றத்தின் கையில் கொடுக்கப்பட்டவுடன், இந்த விவகாரம் ஜக்கிக்கு எதிராக பெரிய அளவில் விசுவரூபம் எடுக்கும் என்கிறார்கள்.''”

"அதே சூட்டோடு அ.தி.மு.க. தலை மையைக் குறிவைத்து இன்னொரு ரக சியக் கூட்டமும் நடந்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரனின் நீலாங்கரை வீட்டில், கடந்த வாரம் ஒரு ரக சியக்கூட்டம் நடந்திருக் கிறது. இதில் அ.தி. மு.க.வைச் சேர்ந்த சில சீனியர்கள் உட்பட ஏறத்தாழ 25 முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டார்களாம். மாஜி மந்திரி வைத்தி லிங்கத்தின் முயற்சியில் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. மாஜி மந்திரிகளான வேலுமணி, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரும், எடப்பாடி கட்சியை வளர்ச்சிப்பாதையில் நகர்த்தவில்லை. அவர் தலைமைக்குத் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். கூட்டத்தின் முடிவில், எல்லோரும் அணிதிரண்டு சென்று எடப் பாடியுடன் மோதவும் முடிவெடுத்திருக்கிறார் களாம். எனினும், சசிகலாவிடம் இருந்து ஒரு பெரிய தொகைக்காக இவர்கள் காத்திருக்கிறார் களாம். அது வந்ததும், அ.தி.மு.க.வில் உள்ள மா.செ.க்களை ஓரணியில் திரட்டி, எடப்பாடிக்கு எதிரான பகிரங்க யுத்தத்தை நடத்தவிருக்கிறார் களாம்.''”

Advertisment

"உதயநிதி, கட்சி ரீதியாக தி.மு.க.வில் சில அதிரடி மாற்றங் களை உருவாக்கவிருக்கிறார் என்கிறார்களே?''”

"உதயநிதியின் ஆர்வத்தால், ஆளும்கட்சியான தி.மு.க., இன்னும் சில அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இப்போதிருக் கும் தி.மு.க.வின் மாவட்ட அமைப்புகளை மாற்றத்திற்கு உட்படுத்தி, இரண்டு சட்டமன்றத்திற்கு ஒரு மா.செ. என உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி. பெரும்பாலும் அவற்றை இளைஞரணியினரைக் கொண்டு நிரப் பவும் அவர் விரும்புகிறாராம். இதற்கான வேலை கள் அடுத்த வாரம் தொடங்கும் என்கிறார்கள்''”

"துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் நியமனம் பற்றி விறுவிறுப்பான தகவல்கள் வருகிறதே?''”

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்து தனி ஸ்டோரி, நம் நக்கீரன் இதழில் வருகிறது. என்ற போதும், ஒரு சில செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். துணை முதல்வர் உதயநிதியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதீப் யாதவ் பற்றி, பல செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருக்கிறது. பல்வேறு புகார்களில் அடிபட்ட இவர், உத்தரப்பிரதேசத்திலுள்ள தன் சொந்த ஊரில் நட்சத்திர ஓட்டல் கட்டியிருக்கிறார் என்றும், அப்படிப்பட்டவர் துணை முதல்வருக்கு செயலாளராக எப்படி வந்தார் என்கிற கேள்வி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்திருக் கிறது. இவரைப்போலவே அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் உதயநிதியுடன் இருக்கக் காரணம், வட இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்த லாபி என்றும் சொல்கிறார்கள். மின்துறையில் இருக்கும் ராஜேஷ் லக்கானி, மாற்றப்பட்டிருக் கிறார். மத்திய அரசுப் பணிக்குச் செல்லவிருக்கும் இவர், வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு நியமிக் கப்பட்டிருக்கிறார். இவர் இருந்த மின்துறை, அமலாக்கத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், அவரது பதவியில் அமர, ஐ.ஏ.எஸ். அதி காரிகள் மத்தியில் தயக்கம் காட்டியதாகவும் கூறு கிறார்கள். கடைசியில் பள்ளிக்கல்வித்துறையில் இருந்த நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.ஸை அங்கு நியமித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு இணக்கமான இவர், மின்வாரியத்திற்கு வந்திருப்பது, கோட்டை வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.''”

"அமைச்சராக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வில்லங்க வேலைகளைச் செய்துவருகிறது என்கிறார்களே?''”

"அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக் கப்பட்டதை ஒன்றிய அரசும், அமலாக்கத்துறையும் ரசிக்கவில்லையாம். அதனால், விடாது கறுப்பு என்பது போல, அவருக்கு எதிரான வழக்கை விரைந்து முடித்து, அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் முயற்சியில் அமலாக்கத்துறை களமிறக்கி விடப்பட்டிருக்கிறது. செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவரது தம்பி அசோக் கும் குற்றவாளியாக இருந்து வருகிறார். அமலாக் கத்துறையின் சம்மனை ஏற்று ஆஜராகாத அவர், கடந்த 1 வருடமாக தலைமறைவாக இருக்கிறார். அவர் இருக்கும் இடம் அமலாக்கத்துறைக்கும், சி.பி.ஐ.க்கும் தெரியும் என்கிறார்கள். இந்த நிலையில், அவருக்குப் புதிதாக சம்மன் அனுப்பி, கடும் நெருக்கடி கொடுக்க ஆலோசனை நடத்தி யிருக்கிறது. இதற்காக, நீதிமன்றத்தில் அனுமதி கோரவும் அமலாக்கத்துறை திட்ட மிட்டிருக்கிறதாம். இப்படி பல வகை யிலும் செந்தில்பாலாஜிக்கு குழிபறிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறதாம் அமலாக்கத் துறை.''”

"அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோதங்கராஜ், கடைசி நேரத்திலும் தன் ஜெகஜ்ஜால வித்தையைக் காட்டியிருக்கிறாரே?''”

ff

"ஆமாங்க தலைவரே, கன்னியாகுமரி -பார்வதிபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 49 ஏக்கர் நிலத்தை, ஒரு கும்பல் அபகரித்திருப்பதை நாம் தொடர்ந்து பேசிவந்தோம். இதன் பின்னணியில் மனோதங்கராஜ் இருந்ததை கடந்த இதழ் நக்கீரன் அட்டைப்படக் கட்டுரை அம்பலப்படுத்தியது. கேபினெட்டில் இருந்து தன்னைத் தூக்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட மனோதங்கராஜ், கடந்த 27ஆம் தேதி, கன்னியாகுமரி மாநகராட்சி கமிஷனருக்கு அழுத்தம் கொடுத்து, சம்மந்தப்பட்ட 49 ஏக்கர் நிலத்தில் 2.5 ஏக்கர் நிலத்துக்கு அப்ரூவல் கொடுக்கும் தீர்மானத்தை மாநகராட்சி கவுன்சிலில் அவசரம் அவசரமாக நிறைவேற்றச் செய்திருக்கிறார். மாநகராட்சியில் மொத்தம் 51 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் 12 பேர் உள்ளனர். மற்றவர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இந்த அப்ரூவல் தீர்மானத்தை எதிர்க்காமல் இருக்க தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயையும், பா.ஜ.க. கவுன்சிலர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இதனால் அந்தத் தீர்மானத்தை யாரும் எதிர்க்கவில்லை. இதற்காக மனோதங்கராஜ் தரப்பு செய்துள்ள செலவு மொத்தம் 1 கோடி ரூபாய் என்கிறார்கள். இந்த நிலையில், பா.ஜ.க. கவுன்சிலர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது தெரிந்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் டென்சனாகி, தற்போது மனோவிடம் பிரச்சினை செய்துவருகிறார்களாம்.''”

"விஜய் மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்க அவர் கட்சி நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மாவட்டம் தோறும் பரப்புரைப் பயணம் செய்துவருகிறாரே?''”

dss

"நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், மாவட்டம் வாரியாக மாநாடு தொடர்பான பரப்புரைப் பயணத்தை நடத்திவருகிறார். அந்த வகையில் திருச்சிக்கு வந்த அவர், விமான நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். மாலைநேரக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்ட போதும் ஆனந்த், இரவு 11.45க்குதான் அங்கு வந்துசேர்ந்தார். நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், அனைவரும் மாநாட்டிற்கு குடும்பத்துடன் வரவேண்டும், கட்டுப்பாடு ஒழுக்கத்துடன் பெண்களைப் பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும். உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டும்தான் பதவிகள் வழங்கப் படும் என்றெல்லாம் அடுக்கிய வர்... ஒரு தொண்டர், தான் வேலை பார்க்கும் முதலாளியிடம், மாநாட்டுக்கு விடுப்பு கேட்டி ருக்கிறார். விடுப்பு தரவில்லை என்றதும் அப்படிப்பட்ட வேலையே வேண்டாம் என்று வந்துவிட்டார் என்று குட்டிக் கதையைக் கூறி தொண்டர்களை உசுப்பேத்தினார்''”

"நானும் என் காதுக்கு வந்த இரண்டு தகவல்களைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் கோவைக்கு ஒருநாள் பயணமாகச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அங்கு லாட்டரி மார்ட்டினை சந்தித்திருக்கிறார். தனது கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாடு குறித்து அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் திருமா. அப்போது அவருக்கு சில அரசியல் வியூகங்களை மார்ட்டின் எடுத்துச் சொன்னாராம். இந்த நிலையில், எடப்பாடியும் மார்ட்டினைத் தொடர்புகொண்டு, எங்களுக்கு அரசியல் வியூக அமைப்பாளராக, தற்போது தனிக்கட்சி தொடங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோர் தேவைப்படுகிறார். அதற்கு நீங்கள்தான் உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.''