தென்காசி மாவட்டத்தில் சாலையோ ரப் பள்ளத்தில் வாகனம் சிக்கிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காவல்துறையினர் சந்தேகப்பட்டு விபத்தில் சிக்கிய அத்தனை நபர்களையும் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரிக்கும் போதுதான் அந்த விவகாரம் அம்பலமானது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை டூ தேவர்குளம் சாலைவழியே சென்ற வோல்ஸ் வேகன் கார், ருக்மணியாபுரம் பாலம் அருகி லிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. அந்த வழியே சென்ற ஊத்துமலை காவல் நிலைய போலீஸார் விபத்தை சரிசெய்ய முதலில் உதவியிருக்கின்றனர். காரின் உள்ளே இருந்த ரத்தக் கறைகள் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, காரிலிருந்த மூவரையும் அள்ளிக் கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர் விசாரணையில் மான் வேட்டையாடிவிட்டு திரும்புகையில் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட, தாங்கள் சிக்கிக்க
தென்காசி மாவட்டத்தில் சாலையோ ரப் பள்ளத்தில் வாகனம் சிக்கிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காவல்துறையினர் சந்தேகப்பட்டு விபத்தில் சிக்கிய அத்தனை நபர்களையும் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரிக்கும் போதுதான் அந்த விவகாரம் அம்பலமானது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை டூ தேவர்குளம் சாலைவழியே சென்ற வோல்ஸ் வேகன் கார், ருக்மணியாபுரம் பாலம் அருகி லிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. அந்த வழியே சென்ற ஊத்துமலை காவல் நிலைய போலீஸார் விபத்தை சரிசெய்ய முதலில் உதவியிருக்கின்றனர். காரின் உள்ளே இருந்த ரத்தக் கறைகள் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, காரிலிருந்த மூவரையும் அள்ளிக் கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர் விசாரணையில் மான் வேட்டையாடிவிட்டு திரும்புகையில் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட, தாங்கள் சிக்கிக்கொண் டதாகத் தெரிவித்தனர். உடனே வனத்துறையை நாட... வனத்துறையிலிருந்து இரண்டு பெண் வாட்சர்கள் குற்றவாளிகளை ஆலங்குளம் வன அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர்.
"அண்ணாமலைபுதூர் -முத்தால்புரம் பகுதியிலுள்ள பசும்பொன் மற்றும் கதிர்வேல் ஆகியோருக்குச் சொந்தமான தோட்டத்தி லிருந்து மான் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டனர். மொத்தம் 2 மான்களை வேட்டையாடி, அதில் ஒரு மானை அந்த தோட்டத்திலேயே வைத்து உரித்து கறி யாக எடுத்துக்கொண்டு வடமலாபுரத்தைச் சேர்ந்த தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் முகேஷ் மற்றும் சங்கரன் கோவில் ஷேக் அகமது ஆகியோர் சென்றுவிட்டனர்.
இரண்டு கார்களிலும் மொத்தம் 10 நபர்கள் வந்த நிலையில் அந்த காரில் 7 நபர்கள் சென்றுவிட்டனர். மீதமுள்ள மானை நாங்கள் எடுத்துவருகையில் கார் விபத்துக்குள்ளாகிவிட்டது. யாரிடமும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதால் வேட்டையில் சிக்கிய மானையும், வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் விபத்து நடந்த பாலத்திற்கு அடியில் ஒளித்துவைத்தோம்'' என்றனர் வனத்துறையிடம் சிக்கிய நாசரேத் பகுதியை சேர்ந்த ரஞ்சித்சிங் ராஜா, நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் மற்றும் பொன்ஆனந்த் ஆகிய மூன்று நபர்களும்.
கைது செய்யப்பட்ட மூவரின் வாக்குமூலத் தின்படி ருக்மணியாபுரம் பாலத்திற்கு அடியில் ஒளித்துவைக்கப்பட்ட துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களையும், வேட்டையாடப்பட்ட புள்ளிமானின் உடலையும் கைப்பற்றிய வனத்துறை, மூவர் மீதும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் ஓமியோபதி மருத்துவர், இன்னொருவர் ஜிம் மாஸ்டர் எனவும் தெரியவந்த நிலையில், ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். கைதான மூவரில் பொன் ஆனந்திற்கு விபத்தின்போது காயம் ஏற்பட்டதால் அவர் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இருவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பியது நீதிமன்றம். இதே வேளையில், "சந்தேகத்தின் பேரில் மூவரை பிடித்து வைத்திருக்கின்றோம். வந்து அழைத்துச் செல்லுங்கள்' என ஊத்துமலை போலீஸார் கூற, தான் செல்லாமல் குற்றவாளிகளை அழைத்து வர இரண்டு பெண் வனக்காவலரை மட்டும் அனுப்பிவிட்டுவிட்டு பணியில் அஜாக்கிரதை யாக இருந்ததாக வனக் காப்பாளர் மகாதேவ பாண்டியனை சஸ்பெண்ட் செய்தது மாவட்ட வனத்துறை.
ஆலங்குளம் வனச்சரக அலுவலர் ஒருவரோ, "விபத்து நடந்தபொழுது அந்த இடத்தில் இருந்தது தற்பொழுது தேடப்படும் குற்றவாளிகளான தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், சங்கரன்கோவில் ஷேக் அகமது, முத்தால்புரம் பசும்பொன், கதிர்வேல் உள்ளிட்ட 10 நபர்கள். போலீஸார் அவர்களை அழைக்கும்போது, “"யாருக்காக இந்த கறி தெரியுமா.? வேண்டுமானால் ...........ரிடம் பேசுகிறாயா?' என மிரட்டும் தொனியில் பேச, எதுக்கு இந்த வம்பு.? என மூவரை மட்டும் பிடித்துக்கொண்டு ஏனையோர்களை கண்டும்காணாமல் விட்டுவிட்டது, இவர்களை விசாரிக்கையில்தான் தெரிந்தது. குறிப்பிட்ட அமைச்சருக்கு நெருக்கமான உறவினர் குற்றாலத்தில் தங்கியுள்ளதாகவும், அவருக்காக, அவருடைய நண்பர்களுக்காக இந்த மான்கறி என்றும் தெரியவந்தது. தொடர்ந்து விடாமல் அவர்களைத் தேடிவருகின்றோம்'' என்றார் அவர்.
வனச்சரகத்தின் தொடர் தேடுதல் வேட்டையில், மான்வேட்டைக்குப் பயன் படுத்தப்பட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷின் காரை சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டி லுள்ள தனியார் பார்க்கிங் ஒன்றிலிருந்து கைப்பற்றியது வனத்துறை. இதேவேளையில் "யார் அந்த அமைச்சர்?, அமைச்சரின் உறவினர்?' என்ற கேள்வி தமிழக அரசியலில் பூதாகரமாகி யுள்ளது.
-வேகா