ஒரு விளை யாட்டாக இல்லாமல் வினையாக இருந்து உயிர்களை காவு வாங்கிவரும் மாஞ்சா காற்றாடிக்கு தடை போட்டிருந்தாலும், பேராபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூலை கடைகளில் விற்க தடை கொண்டு வரப்பட்டாலும், காற்றாடி சூதாட்டம் அரங் கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆன்லைன் மூலமாக மாஞ்சா விற்பனையும் நடந்துதான் வருகிறது. இந்த ஆன்லைன் வியாபாரத்தை முடக்க போலீசார் மெத்தனம் காட்டி வந்த வேளையில் தான் இப்போது இன்னோர் உயிரும் மாஞ்சாவுக்கு பலியாகியிருக்கிறது.
பெற்றோருடன் பைக்கில் சென்ற மூன்று வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில், பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் கண்முன்னே நடந்த இந்த கொடூரத்தால் சென்னை மாநகரமே அதிர்ந்து போயிருக்கிறது.
சென்னை கொண்டித்தோப்பு கிருஷ்ணப்ப தெருவைச்சேர்ந்த கோபால் (35), சுமித்ரா (28) தம்பதியின் மகன் அபினேஷ்ராவ் (3). விடுமுறை தினம் என்பதால் 3-11-2019 அன்று உறவினர் வீட் டிற்கு குடும்பத் துடன் பைக்கில் சென் றனர். கொருக்குப்பேட்டை பாரதிநகர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிர
ஒரு விளை யாட்டாக இல்லாமல் வினையாக இருந்து உயிர்களை காவு வாங்கிவரும் மாஞ்சா காற்றாடிக்கு தடை போட்டிருந்தாலும், பேராபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூலை கடைகளில் விற்க தடை கொண்டு வரப்பட்டாலும், காற்றாடி சூதாட்டம் அரங் கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆன்லைன் மூலமாக மாஞ்சா விற்பனையும் நடந்துதான் வருகிறது. இந்த ஆன்லைன் வியாபாரத்தை முடக்க போலீசார் மெத்தனம் காட்டி வந்த வேளையில் தான் இப்போது இன்னோர் உயிரும் மாஞ்சாவுக்கு பலியாகியிருக்கிறது.
பெற்றோருடன் பைக்கில் சென்ற மூன்று வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில், பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் கண்முன்னே நடந்த இந்த கொடூரத்தால் சென்னை மாநகரமே அதிர்ந்து போயிருக்கிறது.
சென்னை கொண்டித்தோப்பு கிருஷ்ணப்ப தெருவைச்சேர்ந்த கோபால் (35), சுமித்ரா (28) தம்பதியின் மகன் அபினேஷ்ராவ் (3). விடுமுறை தினம் என்பதால் 3-11-2019 அன்று உறவினர் வீட் டிற்கு குடும்பத் துடன் பைக்கில் சென் றனர். கொருக்குப்பேட்டை பாரதிநகர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது எங்கிருந்தோ பறந்துவந்த காற்றாடியின் மாஞ்சா நூல் பைக்கின் முன்புறம் பெட்ரோல் டேங் மீது உட்கார்ந்திருந்த சிறுவனின் கழுத்தை அறுத்தது. சிறுவனின் கழுத்து நரம்புகள் அறுந்து ரத்தம் கொட்டியது. வலி பொறுக்க முடியாமல் சிறுவன் அலறித்துடித்தான். அவ்வழியாக சென் றோரின் உதவியுடன் அருகில் இருந்த அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டான் என்பதை கூறியதும், ""நாங்கள் வாழ்ந்ததே இவ னுக்காகத்தான். அவனே போயிட்டானே...''’’என்று அவனின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதது அங்கிருந்தவர்களின் மனதைப் பிசைந்தது.
கடந்த ஆண்டில் இதே பகுதியில் பள்ளி சென்ற சிறுமி மாஞ்சா நூலினால் கழுத்தறுந்து உயிரிழந்தார். கடந்த ஆண்டிலேயே வியாசர்பாடி யைச் சேர்ந்த வாலிபர் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது மாஞ்சா நூலால் கழுத்தறுந்து உயிரிழந்தார். 2012-ஆம் ஆண்டில் கோயம்பேட்டில் இருந்து வானகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரும்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ராஜ்குமார் என்பவரின் கழுத்தில் காற்றாடியின் மாஞ்சாநூல் சிக்கியதில், ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 2015-ஆம் ஆண்டில் பெரம்பூர் ரயில்வே மேம் பாலம் அருகே தந்தையுடன் பைக்கில் சென்ற 5 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சாநூல் அறுத்த தில் சிறுவன் அஜய் பரிதாபமாக உயிரிழந்தான்.
சாதாரண நூலைப்பயன்படுத்தி காற்றாடிகள் விட்டபோது எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. காற்றாடி அறுந்துவிடாமல் இருப்பதற் காக கண்ணாடித்துகள், கந்தகம், துத்தநாகம், வஜ்ரம் உள்ளிட்ட பல்வேறு அபாயகரமான பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாஞ்சா நூலை பயன்படுத்துகிறபோதுதான் பேராபத்து நிகழ்கிறது. மாஞ்சா நூலில் இருக்கும் கண்ணாடித்துகள் கழுத்தை அறுத்துவிடுகிறது. நூலில் தடவியிருக்கும் ரசாயனக் கலவைகள் விஷ மாக மாறி உயிருக்கு ஆபத்தாகின்றன. மகிழ்ச்சியை தரக்கூடிய பட்டங்கள் உயிரைக்குடிக்கும் எமனாக மாறிவிடுகின்றது.
இது குறித்து வட சென்னை பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞரு மான சங்கர் நம்மிடம் பேசிய போது, ""பொதுவாக சென்னை யில் குறிப்பாக -வடசென்னை யில் காற்றாடி விடும் பழக்கம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. வடமாநிலத்தவர்களின் வருகைக்கு பின்னர் பாரிமுனை, வியாசர் பாடி, தண்டையார்பேட்டை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய வட சென்னை பகுதிகளில் காற்றாடி விடுவது அதிகரித்தது. விளையாட்டாக இருந்த இது பின்னர் சூதாட்டமாக மாறியது. இதற்காக வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு பகுதியில் நாராயணப்ப நாயக்கன் தெருவில் மாஞ்சா நூல் தயாரிப்பு குடிசைத்தொழிலாகவே மாறியது. இங்கு மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் பல வடிவிலான காற்றாடிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த பகுதியில் இருந்து சென்னையின் பல இடங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன''’’என்கிறார்.
அவர் மேலும், ""சென்னையில் காற்றாடி விடுவதை சாதாரணமான விளையாட்டு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், இது ஒரு பெரும் சூதாட்டமாக நடந்து வருகிறது. காற்றாடி விடுவதில் கோஷ்டிகள் உண்டு. ஒவ்வொரு கோஷ்டிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘மிட்நைட் மசாலா, ‘பானி, ‘ராஜதானி’என்று பெயர்களும் உண்டு. லட்சக்கணக்கில் பணம் கட்டி ஆடப்படும் இந்த சூதாட்டத்திற்கு காவல்துறை தடை போட்டாலும், தீவிரமாக கண்காணித்து வந்தாலும், அவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தொடர்ந்து சூதாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உயிர்ப்பலிகளின் காரணமாக போலீஸ் கெடுபிடி அதிகமானதால் புறநகர் கிழக்கு கடற்கரை சாலையில் ஆளவந்தான் அறக் கட்ட ளைக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் கடற்கரை ஓரம் மைதானம் போல் உள்ளதால், அங்கு காற்றாடி போட்டிகள் நடந்து வருகின்றன. இருந்தபோதும் அடிக்கடி சென்னையிலும் ஒரு சிலர் மறைமுகமாக காற்றாடி விடுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிர்ப்பலியும் ஏற்படுகின்றன''’என்கிறார்.
ஒவ்வொரு உயிரிழப்புக்கு பின்னரும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அபினேஷ்ராவ் மரணத்திலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சம்பந்தப் பட்ட மாஞ்சாநூலுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே சென்னை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-அரவிந்த், கதிரவன்