Advertisment

மணிப்பூர் விவகாரம்! மோடி அரசை விளாசிய திருச்சி சிவா!

ss

ணிப்பூர் விவகாரம் குறித்து பாராளு மன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக் கெடுப்புக்கான தேவை என்ன, நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடந்தது? ஜனநாயகத்தை எப்படி ஒன்றிய அரசு கேலிக்கூத்தாக்கியது என்பது குறித்து சிவா எம்.பி. விளக்கமளித்துள்ளார். அதிலிருந்து... ""மணிப்பூரில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. இரு குழுக்களுக்கு இடையி லான மோதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கிறார்கள். சற்றேறக்குறைய 1 லட்சத்துக்கு நெருக்கமானவர்கள் இடம்பெயர்ந்து நிவாரண முகாம் களிலும் காடுகளிலும் பதுங்கிவாழ்கிறார்கள். இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்ற பதற்றம் எங்களுக்கு இருக்கின்றது. ஏதோ இந்த பிரச்சனை முடிந்துவிட்டதைப் போலவும் இதற்குத் தீர்வு காண்போம் என்பதைப் போலவும், "உள்துறை அமைச்சர் மணிப்பூருக்குச் சென்றார்' என்றெல்லாம் ஒன்றிய அரசு விளக்கம் சொல்கிறது. ஆனால் இந்து பத்திரிகையைப் பார்த்தால் தெரியும். 230-க்கும் மேலான குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்

ணிப்பூர் விவகாரம் குறித்து பாராளு மன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக் கெடுப்புக்கான தேவை என்ன, நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடந்தது? ஜனநாயகத்தை எப்படி ஒன்றிய அரசு கேலிக்கூத்தாக்கியது என்பது குறித்து சிவா எம்.பி. விளக்கமளித்துள்ளார். அதிலிருந்து... ""மணிப்பூரில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. இரு குழுக்களுக்கு இடையி லான மோதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கிறார்கள். சற்றேறக்குறைய 1 லட்சத்துக்கு நெருக்கமானவர்கள் இடம்பெயர்ந்து நிவாரண முகாம் களிலும் காடுகளிலும் பதுங்கிவாழ்கிறார்கள். இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்ற பதற்றம் எங்களுக்கு இருக்கின்றது. ஏதோ இந்த பிரச்சனை முடிந்துவிட்டதைப் போலவும் இதற்குத் தீர்வு காண்போம் என்பதைப் போலவும், "உள்துறை அமைச்சர் மணிப்பூருக்குச் சென்றார்' என்றெல்லாம் ஒன்றிய அரசு விளக்கம் சொல்கிறது. ஆனால் இந்து பத்திரிகையைப் பார்த்தால் தெரியும். 230-க்கும் மேலான குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மியான்மர் எல்லையில் காடுகளில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்நிய நாட்டு எல்லை...… இந்தப் பக்கம் வரமுடியவில்லை. இங்கிருந்து கொண்டுசென்ற உணவு, தானியம் கொஞ்சம்தான் இருக்கிறது. கையிலே கொண்டு சென்ற பணம், தங்கத்தை வைத்து அங்குள்ள உள்ளூர் மக்களின் துணையோடு காலம் தள்ளுகிறார்கள். இன்னும் அச்சம் நிலவுகிறது. இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டதை உலகமே பார்த்தது. பல நாடுகள் கண்டித்தன. வேதனை தரக்கூடிய நிகழ்வு. அதற்கு எந்தவிதமான விளக்கமும் அரசு தரவில்லை.

Advertisment

tt

"இந்தியா' கூட்டணி என்ற எதிர்க்கட்சிகளோட கூட்டமைப்பில் நாங்கள் ஒற்றுமையாக ஒருங் கிணைந்திருக்கிறோம். எல்லா அவை நிகழ்வு களையும் ஒதுக்கி வைத்துவிட்டு மணிப்பூர் நிகழ்வு குறித்து விவாதம் நடத்தவேண்டும், பிரதமர் அறிக்கை தரவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையே. பின்னர் எங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்லட்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயக மரபு என்றோம். ஆனால் பிரதமர் அவைக்கு வரமறுத்தார். மாறாக, அவர்கள் உள்துறை அமைச்சரை வர வைக்கிறோம். இரண்டரை மணிநேர குறுகிய விவாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என அவர்கள் சொன்னார்கள். நாங்கள் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. காரணம், பிரதமர் என்பவர் இந்த நாட்டின் உச்ச பதவியில் இருப்பவர். ஒரு பகுதியிலே ஒரு உயிருக்கு சேதம் என்றால் கூட பதறவேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உண்டு.

உதாரணம் சொல்லவேண்டுமென்றால், ஊட்டியிலேயே ஒரு ராணுவ அதிகாரி உயர்பொறுப்பில் உள்ள அதிகாரி உயிரிழந்த போது, அடுத்த இரண்டு மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அங்கு விரைந்துசென்று ஆவனசெய்தார். ஒரு அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடக்குமானால், கலவரம் நடக்குமானால் ஏதாவது உயிர்ச்சேதம் நிகழ்ந்தால், அதற்கு உடனடி யாகப் பரிகாரம் தேடவேண்டிய பதற்றமும் பொறுப்புணர்ச்சியும் வேண்டும்.

ஆனால் பிரதமர், மணிப்பூர் குறித்து ஒரு நாள்கூட எந்தக் கருத்தும் சொன்னதில்லை. நாடாளுமன்றத்துக்கு தினம்தோறும் வருகிறவர், அவைக்கு வருவதில்லை. நாடாளுமன்றத் தில் இதுகுறித்து பேசியதில்லை. நாங்கள் தொடர்ந்து இந்தப் போராட்டத்தின் மூலமாக இந்தியாவிலிருக்கிற மக்களுக்கு நாடாளு மன்றம் நடக்கின்ற நிலையைத்தான் எடுத்துக் காட்டினோம்.

Advertisment

tr

மணிப்பூர் மக்களுக்காக இந்தியாவிலுள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் கடுமையாகக் குரல் கொடுத்தன. ஆனால் அரசாங்கம் இசையவே யில்லை. பிரதமர் வர மறுக்கிறார் என்பதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தோம். காலையில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் என்று நடத்திவிட்டு மதியத்துக்கு மேல் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு அதை நீர்த்துப்போகச் செய்தார்கள். அவர்களாகவே அதிகம் பேசினார்கள். பிரதமர் 2 மணி நேரம் பத்து நிமிடம் பேசினாரே தவிர, ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் மணிப்பூரைப் பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தபின் அதுகுறித்து 2 நிமிடம் மட்டுமே பேசினார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எத்தனை காலத்துக்குப் பின்னால்? மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டன. அந்த பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்று அவர்களை மானபங்கப்படுத்தியவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இதுபோல் வேறு சம்பவங்கள் நடந்திருக்கிறதா? அங்கே இணையதளம் முடக்கப்பட்டிருக் கிறதே? என்றெல்லாம் கேட்டால் இதற்கெல் லாம் பதிலில்லை. காரணம் கேட்டால் தி.மு.க.வை குறிவைக்கி றார்கள்.

நாங்கள் நாடாளு மன்றத்தை முடக்க வில்லை, உரிமைக்காகப் போராடுகிறோம். இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பல பாதக மான சட்டங்களை மூன்று நிமிடங்களில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஒரு மசோதா வாக்களிப்புக்கு வருகின்றபோது 'இல்லை' என்று எதிர்ப்பு வருகின்றது. ஆனால் நிறைவேறியது என்று தீர்ப்பு சொல்கிறார்கள். ஒரே நாளில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒரு சட்டம் நிறைவேறியதாக சரித்திரமே கிடையாது.

ஒருநாள் அவகாசம் உறுப்பினர்களுக்கு தேவை. இங்கு எதுவுமே இல்லை. எதையுமே கருத்தில்கொள்ளாமல் அவர்களாகவே நிறை வேற்றிக்கொண்ட, ஜனநாயகத்திற்கு பாதகமான, விரோதமான பல நடந்தேறியிருக்கிறது. இதையெல்லாம் தடுத்தாக வேண்டும் என்ற கடமையுணர்வோடும், பொறுப்புணர்வோடும் தான், மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்று இந்த சந்திப்பை நாங்கள் நடத்தியிருக்கிறோம்'' என்றார்.

-தொகுப்பு தெ.சு.கௌதமன்

nkn160823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe