Advertisment

மீண்டும் பற்றியெரியும் மணிப்பூர்! அமைச்சர், எம்.எல்.ஏ. வீடுகள் தீக்கிரை!

ss

த்தியிலும் மாநிலத்திலுமாக இரட்டை எஞ்சின் ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வரக்கூடிய மணிப்பூரில், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, இன்னமும் விடாமல் பற்றியெரிகிறது.

Advertisment

mm

இந்த போராட்ட வன்முறையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 250 பேருக்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். தங்கள் வீடுகளைவிட்டு வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரமாக உள்ளது. ஆயிரக்கணக் கான வீடுகள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.

இச்சூழலில், கடந்த சில நாட்களாக நடந்த மோதலில் 17 பேர்வரை கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில், 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தீவைக்கப்பட்டதோடு, முதல்வரின் இல்லத்தையும் தாக்க முற்பட்டதால் உச்சகட்டப் பதட்டம் தொற்றியுள்ளது! கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஜிரிபாம் மாவட்டத்திலுள்ள சைரான் கிராமத்தை சேர்ந்த குக்கி இன ஆசிரியை சொசாங்கிமி, மை

த்தியிலும் மாநிலத்திலுமாக இரட்டை எஞ்சின் ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வரக்கூடிய மணிப்பூரில், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, இன்னமும் விடாமல் பற்றியெரிகிறது.

Advertisment

mm

இந்த போராட்ட வன்முறையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 250 பேருக்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். தங்கள் வீடுகளைவிட்டு வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரமாக உள்ளது. ஆயிரக்கணக் கான வீடுகள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.

இச்சூழலில், கடந்த சில நாட்களாக நடந்த மோதலில் 17 பேர்வரை கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில், 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தீவைக்கப்பட்டதோடு, முதல்வரின் இல்லத்தையும் தாக்க முற்பட்டதால் உச்சகட்டப் பதட்டம் தொற்றியுள்ளது! கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஜிரிபாம் மாவட்டத்திலுள்ள சைரான் கிராமத்தை சேர்ந்த குக்கி இன ஆசிரியை சொசாங்கிமி, மைத்தேயி இனக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டு, தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கிறார். மேலும் 6 குடிசை வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.

Advertisment

அதற்கு பதிலடியாக, குக்கி இனத்தை சேர்ந்த போராட்டக் காரர்களின் துப்பாக்கிச்சூட்டில் விவசாயி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து குக்கி இனக்குழுவினர் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், குக்கி இனத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கொல்லப்பட்ட னர். இதை யடுத்து, ஜிரி பாம் மாவட் டத்திலுள்ள மைத்தேயி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் குக்கி இனப்போராட்டக் குழுவினரால் கடத்திச்செல்லப்பட்டனர். மேலும், ஜாகுரதார் கரோங் மார்க்கெட் பகுதியிலுள்ள கடை கள், வீடுகள், காவல் நிலையம் மற்றும் சி.ஆர்.பி.எஃப். அலுவலகம் ஆகியவை தாக்குதலுக் குள்ளாகின.

mm

இப்படியான பதட்ட சூழலில், கடத்திச் செல்லப்பட்ட ஆறு பேரும் ஆற்றில் சடல மாகக் கண்டெடுக்கப்பட்டதும் மைத்தேயி போராட்டக்குழுவினர் கலவரத்தில் இறங்க, மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களிலும் போராட்டம் வெடித்துக்கிளம்ப, மாநில அரசுக்கு எதிரான கோபத்தால், 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் கலவரம் கட்டுக்கடங்காமல் பரவியதில், மேலும் 4 எம்.எல். ஏ.க்களின் வீடுகளுக்கு தீ வைக்கப் பட்டன. அந்த கும்பல் தொடர்ச்சியாக, இம்பாலின் கிழக்கிலுள்ள லுவாங்ஷாங் பாமில் உள்ள முதல்வர் பைரேன்சிங்கின் பூர்வீக வீட்டின் மீதும் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அதையடுத்து, அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்புப் படை யினர் கொண்ட கூட்டுப்படையினர் அந்த கலவரக்காரர்களைத் தடுத்துநிறுத்தி விரட்டியடித்தனர்.

mm

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மணிப்பூர் கலவரத்தைத் தடுப்பது தொடர்பாக குக்கி இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார் என்று, மிகப்பெரிய பொய்யை தெரிவித்துள்ளார் என்று குக்கி இன எம்.எல். ஏ.க்கள் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாகச் சேர்ந்து எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த நவம்பர் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தின் போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும்பொருட்டு, மணிப்பூரிலுள்ள குக்கி இன எம்.எல்.ஏ.க்களோடு மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவலாகும். உச்சநீதிமன்றத் தை மணிப்பூர் விவகாரத்தில் தவறாக வழிநடத்துகிறார். மே 3, 2023க்குப் பிறகு, முதல்வர் பைரேன்சிங்குடன் நாங்கள் எந்தச் சந்திப்பையும் நடத்தவில்லை என்பதையும், எங்கள்மீது, எங்கள் இன மக்களின்மீது வன்முறை ஏவிவிடப்பட்டு, எங்கள் இனத்தையே அழிப்பதற்கு மூல காரணமாக முதல்வர் விளங்குவதால், எதிர்காலத்தில்கூட அவரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எங்கள் இன மக்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதை கண்டிக்கிறோம்'' என்று தெரிவித்து, 10 எம்.எல்.ஏ.க்களும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மணிப்பூரில் கலவரம் பற்றியெரியும் நிலை யில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் ஒற்றுமையாகவும் இல்லை, பாதுகாப்பாகவும் இல்லை. தனது வெறுப்பூட்டும் அரசியலுக்கு உதவுவதால், மணிப்பூர் எரிக்கப்படவேண்டுமென்று பா.ஜ.க. விரும்புகிறது. கடந்த 7ஆம் தேதியிலிருந்து இதுவரை 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உங்களை மணிப்பூர் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்'' என கொந்தளித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, "மணிப்பூரின் சமீபத்திய வன்முறை கவலை அளிக்கிறது. பிரதமர் ஒருமுறையாவது மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்க உழைக்க வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தை அடக்க, மேலும் 5,000 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்ப, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர், இந்திய ஜனநாயகத்துக்கு கரும்புள்ளி!

-தெ.சு.கவுதமன்

nkn231124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe