ணிப்பூரில் முக்கிய இனக்குழுக்க ளாக உள்ள மைத்தேயி மற்றும் குக்கி இனக் குழுவினரிடையே பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக எழுந்த விவகாரம் மிகப்பெரிய மோதலாக, வன்முறையாக கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி உருவெடுத்தது. அப்போதிருந்து இன்றுவரை அங்கே வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலை.

dd

மே 3ஆம் தேதி தொடங்கிய வன்முறையால் இதுவரை சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டி ருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாமிலும், மேலும் பலர், வேறு மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள், வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மணிப்பூர் முழுவதும் இணையச்சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலை யில், கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியான வீடியோ நாடு முழுக்க கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த மே 4 அன்று காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்கள், மைத்தேயி இனத்தைச் சேர்ந்த ஆண் களால் அடித்து உதைக்கப்பட்டும், நிர்வாணமாக்கப் பட்டும் ஊர்வலமாக இழுத்து வரப்பட்டதும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் அந்த வீடியோவில் தெரியவந்தது. ஆளும் பா.ஜ.க. வுக்கு எதிராகக் கடும் விமர்சனம் கிளம்பியதால் மாதக்கணக்கில் மவுனம் காத்த மோடியே வாய்திறந்து, "இச்செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எனது இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்துள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த ஒரு சிவில் சமூகத்திற்கும் வெட்கக்கேடானது'' என்று பேசினார்.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறையால் உயிரிழந்தவர்களின் உடல்களை கடந்த டிசம்பருக் குள் அடையாளங்கண்டு உறவினர்களிடம் ஒப்ப டைத்து அடக்கம் செய்ய வேண்டுமென்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. வன்முறை குறித்து விசா ரிக்கவும், நிவாரண உதவிகள் குறித்து தீர்மானிக்கவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் முடிவெடுக்க நீதிபதிகள் கீதா மிட்டல், ஷாலின் ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

Advertisment

இந்நிலையில், கடந்த ஆண்டின் இறுதி நாளில்கூட இம்பால் மேற்கு மாவட்டத்தின் கடங்பண்ட் பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த தன்னார்வலரோடு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தியதில், தன்னார்வலர் உயிரிழந்தார். மணிப்பூரி மொழியில் செயல்பட்ட உள்ளூர் நாளிதழான கங்க்லீபாகி மீராவின் ஆசிரியர் வாங்கெம்சா ஷியாம்ஜெ, வன்முறையைத் தூண்டும்விதத்தில் செய்தி வெளியிட்டார் எனக்கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

88

Advertisment

கடந்த ஜனவரி 10ஆம் தேதி, மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த தாரா சிங், இபோம்சா சிங், அவரது மகன் ஆனந்த் சிங் மற்றும் ரோமன் சிங் ஆகிய நால் வரும் சுராசந்த்பூர் மாவட் டத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக் சென்றிருக்கிறார் கள். ஆனால் அவர்கள் வீடு திரும்பாததால் அவர் களது உறவினர்கள் அதிர்ச்சியானார்கள். போலீசில் புகாரளிக்க, அவர்களை போலீசார் தேடியதில், சுராசந்த்பூர் மாவட்டம் ஹாடக் பைலென் காட் டுப்பகுதியில் மூவரின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த தாகத் தெரியவருகிறது. இவர்களில் தாராசிங் மட்டும் என்னவானார் என்பது தெரியவில்லை. இவர்களைப் பாதுகாப்புப் படையினரே சுட்டுக் கொன்றிருப்பார்களென சந்தேகம் எழுப்பப்படு கிறது. இந்நிலையில், குக்கி, மைத்தேயி இனக் குழுவினரிடையே பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள கும்பி என்ற இடத்திலும், தவுபால் மாவட்டத் திலுள்ள வாங்கூவிலும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.

dd

கடந்த ஆண்டில் தொடங்கிய வன்முறை, புத்தாண்டிலும் தொடரும் நிலையில்.. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல், மற்ற கேளிக்கைகளில் மட்டும் கலந்துகொள்வது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், எதிர்க் கட்சிகள் மத்தியிலும் கடும் விமர் சனத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி, ஏற்கெனவே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் நடத்தி யுள்ள நிலையில், தற்போது மணிப்பூரிலிருந்து மும்பை வரை நடைபயணத்தைத் தொடங்கினார். அவரது நடைபயணத் தொடக்க விழாவுக்கு கடும் நிபந்தனைகளுடன் மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டிலாவது மணிப்பூரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா?