Advertisment

மணிப்பூர் கொடூரம்! -சரவெடியாகப் பொரிந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

dd

ணிப்பூர் கலவரம் மற்றும் பழங்குடியினப் பெண்கள் நிர்வாண மாக நடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், "மணிப்பூரில் மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை சட்டத்தின் ஆட்சியே இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற் றும் திறன் காவல்துறைக்கு இல்லை. சட்டம், ஒழுங்கு குடிமகன்களைக் காப்பாற்றாவிட்டால், குடிமக்கள் என்ன ஆவார்கள்? வரும் ஆகஸ்டு 14-ஆம் தேதி டி.ஜி.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும்'’என கண்டித்துள்ளது.

Advertisment

manipur

மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச்செல்லப்பட்ட இரு பழங்குடியினப் பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக் கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்கை மணிப்பூருக்கு வெளியே மாற்றும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான கபில்சிபல், "இந்த விவகாரத்தில் பெண்கள் சி.பி.ஐ. விசாரணையையோ, வழக்கை மணிப் பூருக்கு வெளியே மாற்றுவதையோ விரும்பவில்லை'' என்பதைத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கள், "அந்த இரு பெண்களும் பா-யல் வன்முறைக் குள்ளாகி 14 நாட்களுக்குப் பின்பே காவல்துறை எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்துள்ளது. காவல்துறை யினரே பெண்களை கலவரக்காரர்களிடம் ஒப்ப டைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதனை மாநில போலீசார் விசாரிப்பது பொருத்த மாக இருக்காது. முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிறப்புக் குழு இதனை விசாரிக்கவேண்டும். மணிப்பூர் வன்முறை தொடர்பா

ணிப்பூர் கலவரம் மற்றும் பழங்குடியினப் பெண்கள் நிர்வாண மாக நடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், "மணிப்பூரில் மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை சட்டத்தின் ஆட்சியே இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற் றும் திறன் காவல்துறைக்கு இல்லை. சட்டம், ஒழுங்கு குடிமகன்களைக் காப்பாற்றாவிட்டால், குடிமக்கள் என்ன ஆவார்கள்? வரும் ஆகஸ்டு 14-ஆம் தேதி டி.ஜி.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும்'’என கண்டித்துள்ளது.

Advertisment

manipur

மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச்செல்லப்பட்ட இரு பழங்குடியினப் பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக் கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்கை மணிப்பூருக்கு வெளியே மாற்றும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான கபில்சிபல், "இந்த விவகாரத்தில் பெண்கள் சி.பி.ஐ. விசாரணையையோ, வழக்கை மணிப் பூருக்கு வெளியே மாற்றுவதையோ விரும்பவில்லை'' என்பதைத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கள், "அந்த இரு பெண்களும் பா-யல் வன்முறைக் குள்ளாகி 14 நாட்களுக்குப் பின்பே காவல்துறை எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்துள்ளது. காவல்துறை யினரே பெண்களை கலவரக்காரர்களிடம் ஒப்ப டைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதனை மாநில போலீசார் விசாரிப்பது பொருத்த மாக இருக்காது. முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிறப்புக் குழு இதனை விசாரிக்கவேண்டும். மணிப்பூர் வன்முறை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கே தெரியாதது வேதனை'' என கண்டனம் தெரிவித்தனர்.

manipur

அரசுத் தரப்பில் பதிலளிக்க கூடுதல் அவ காசம் கோரப்பட்டது. அதற்கு, "இந்த விவகாரத் தில் காலம் கடந்துகொண்டிருக்கிறது. வன்முறை யால் பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டியது அவசியம். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள், அதுதொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெண்கள் அமைப்பு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விருந்தா, "கார் கழுவும் மையத்தில் பணிபுரிந்த 2 பெண்கள் ஒரு கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்களின் உடல்கள் எங்கே என்பதே தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இரண்டு பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். அருகி-ருந்த போலீசாருக்கே எதுவும் தெரியவில்லை என்றால் அதையெப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவுசெய்ய 14 நாட்கள் ஆனது ஏன்?

வன்முறை தொடர்பாக 6,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எஃப்.ஐ.ஆர். எத்தனை, பூஜ்ய எஃப்.ஐ.ஆர் எத்தனை, எத்தனை கைதுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன, 164 சட்டப்பிரிவின்கீழ் எத்தனை பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள் ளது என்பதனை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். கொலை, பலாத்காரம், தீவைப்பு, கொள்ளை, வீட்டுச் சொத்துகளை அழித்தல், பெண்களை நிர்வாணப்படுத்துதல், பலாத்காரம் செய்தல், மதவழிபாட்டுத் தலங்களை அழித்தல் தொடர்பான வழக்குகளில் எத்தனை எஃப்.ஐ.ஆர். கள் உள்ளன என்பதை அரசு தனித்தனியாகப் பிரித்து நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவேண்டும்'' என கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

manipur

இதற்கிடையில், மறைந்த சுஷ்மாஸ்வராஜின் மகள், பான்சுரி ஸ்வராஜ், "மணிப்பூரைப் போலவே, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக வன்முறை கள் அதிகளவு நடந்துள்ளன. இந்த மாநிலங்களி லும் இத்தகைய வன்முறைகளை விசாரிக்கும்படி உத்தரவிடவேண்டும்'' எனக் கோரினார். "தற்போது மணிப்பூர் தொடர்பாக விவாதித்து வருகிறோம். முத-ல் இதுகுறித்து விவாதிப்போம், உங்கள் கோரிக்கைகள் குறித்து தனியாக விசாரிப்போம்'' என அமர்வு விவாதிக்க மறுத்துவிட்டது.

மேலும் அரசைச் சாடிய தலைமை நீதிபதி, “"மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது என்பதால், மணிப்பூரில் நடப்பதை நாம் நியாயப்படுத்த முடியாது. ஒன்று, நடப் பதைத் தடுக்க திறமையற்றவர்களாக காவல்துறை இருக்கவேண்டும் அல்லது தடுக்க விருப்பமற்றவர் களாக இருக்கவேண்டும். மாநில போலீஸ் விசாரணை நடத்தத் தகுதியற்றதாக இருக்கிறது. அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். போலீஸ் விசாரணை மிக மந்தமாக நடக்கிறது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கே இல்லை'' என விமர்சித்தார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்ட வழக்கில், "அந்த வீடியோ வெளிவந்த பிறகு ஜூன் 20-ல்தான் முதல் கைதே நிகழ்ந்திருக்கிறது''’என அரசையும் காவல்துறையையும் விமர்சித்தார்.

உச்சநீதிமன்றம் வரை விவகாரம் வந்தபின், இரு பெண்கள் நிர்வாணமாக ஊர் வலம் இழுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய காவல் அதிகாரியான கெய்சம் பிரேம்குமார், இத்தனை நாட்களுக்குப் பின் சமீபத்தில் பணியிடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்கவேண்டும் என கோரிக்கை வைத்த எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சிகளின் சார்பில் 21 உறுப் பினர்கள் அடங்கிய பிரதிநிதிகளை மணிப்பூருக்கு அனுப்பி நிலவரத்தைப் பார்வையிட்டன. "இந்தியா' கூட்டணி யைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள் மணிப்பூரையும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்ட பின் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்க்கியைச் சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்த அறிக்கையை அளித்தனர்.

mm

காங்கிரஸ் எம்.பி.யான ஆதிர்ரஞ்சன் சௌத்ரியோ, “"மணிப்பூர் விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் போதுமான நடவடிக்கை களை எடுக்கவில்லை. மக்களுக்கு உணவோ, மருந்துகளோ இப்போதுவரை சரிவரக் கிடைக்க வில்லை. குழந்தைகள் பள்ளி, கல்லூரி செல்ல போதுமான வசதிகள் இல்லை. இரு சமூகங்களுக்கு இடையிலான சண்டையை நிறுத்த எதுவும் செய்யப்படவில்லை. மாநில அரசும், மத்திய அரசும் தங்கள் கண்களை மூடிக்கொண்டுவிட்டன''’ என்று காட்டமாக விமர்சித்தார். இது ஒருபுறமிருக்க, உலக அரங்கில் மணிப்பூர் வன்முறை விவகாரம் இந்தியாவின் புகழைச் சீர்குலைத்துவிட்டது எனக் கூறி பீகாரைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர் வினோத் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பா.ஜ.க. வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனத்த இதயத் துடன் தன் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சியி-ருந்தும் விலகுவ தாகவும் ஷர்மா குறிப் பிட்டுள்ளார்.

“"இதுபோன்று பல சம்பவங்கள் நடப்பதாகவும். நாம் எத்தனை விஷயங் களில் நடவடிக்கை எடுக்கமுடியும்?' என்று மணிப்பூர் முதல்வர் குறிப்பிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் மகள்களும், சகோதரிகளும் நிர்வாணமாக நடத்திவரப்பட்டதுடன் வன்புணர்வும் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் இத்தகைய அறிக்கை வெளியிடுவது திகைப்பூட்டுவதாக இருக்கிறது'” என்றும் ஷர்மா விமர்சித்துள்ளார்.

ஷர்மாவின் ராஜினாமா கடிதம் பேனர் வடிவில் பாட்னாவிலுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சி அலுவலக வாச-ல் தொங்கவிடப்பட்டது. அந்தப் பேனரில், “"இந்தியாவின் சகோதரிகளும் தங்கைகளும் கதறுகிறார்கள், மோடி அரசாங்கத்துக்கு ஆதரவாக முழக்கமிடுபவர்களே வெட்கப்படுங்கள்' என்கிறது. அத்தோடு ஷர்மா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதமும் அந்தப் பேனரில் காணப்படுகிறது. "மணிப்பூரில் நடக்கும் வன்முறைக்கு முதல்வர் பைரேன்சிங்கே பொறுப்பு. அவரை பிரதமர் பாதுகாக்கிறார்' எனவும் ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார். "இத்தகைய தலைமையின் கீழ் பணியாற்றியதை நினைத்து வெட்கப்படுகிறேன்' என அந்தக் கடிதம் முடிகிறது.

ஏற்கெனவே இந்த மாதத் தொடக்கத்தில் மிஸோரம் மாநிலத்தின் பா.ஜ.க. துணைத்தலைவர் ஆர். வன்ராம்சுவாங்கா, மத்திய மாநில அரசுகள் தேவாலயங்களை எரித்தழிப்பதற்கு ஆதரவு தருவதாகக் குற்றம்சாட்டி கட்சியி-ருந்து பதவி விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மன உறுத்தல் தாங்காமல், பா.ஜ.க.வின் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பி-ருந்து ராஜினாமா கடிதங்கள் வரும் நிலையிலும், உச்சநீதிமன்றமே கேள்விமேல் கேள்வியெழுப்பிய நிலையிலும், தன் முதல்வர் இருக்கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந் திருக்கிறார் பீரேன்சிங்.

nkn050823
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe