Advertisment

ராங்கால்- தமிழன்னைக்கு மணிமண்டபம்! பொதுச்செயலாளர் தேர்தல்! எடப்பாடி ரெடி!

rr

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கு.''”

Advertisment

"ஆமாம்பா, ஸ்டாலின் பிறந்த மார்ச் 1-ஐ, திராவிடத் திருநாளா தமிழகம் தழுவிய அளவில் தி.மு.க.வினர் கொண்டாடி இருக்காங்களே!''

"உண்மைதாங்க தலைவரே, 50 ஆண்டுகளுக் கும் மேலான அரசியல் வாழ்வைக் கொண்டவரான ஸ்டாலின், பள்ளிப் பருவத்திலேயே கோபாலபுரத் தில் மாணவர் தி.மு.க.வைத் தொடங்கியவர். அப் போதே நாடகங்கள் மூலம் பிரச்சாரத்தைக் கையில் எடுத்தவர். தொடர்ந்து மிசாக் கொடுமைகள் உள்ளிட்ட சோத னைகளைச் சந்தித்தவர். தன் மேல் விழுந்த காயங்களையே படிக்கட்டுகளாக ஆக்கிக் கொண்டு மேலே வந்தவர். அப்படிப்பட்ட அவருடைய பிறந்த நாளை கோலாகல மாகக் கொண்டாடி இருக் காங்க. பிரதமர் மோடி உள் ளிட்ட அரசியல் தலைவர் களின் வாழ்த்துக் குவியலுக்கு நடுவில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிரமாண்டமாக பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத் தில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவை ஸ்டாலின் வழி நடத்தணும்னு வாழ்த்தினாங்க.''”

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றி, தி.மு.க.வினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்குதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, அங்கே அபரிமிதமான வெற்றி பெறுவோம்னு களத்தில் இருந்த தி.மு.க. அமைச்சர்கள் சொன்னபோதும், குறைந்

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கு.''”

Advertisment

"ஆமாம்பா, ஸ்டாலின் பிறந்த மார்ச் 1-ஐ, திராவிடத் திருநாளா தமிழகம் தழுவிய அளவில் தி.மு.க.வினர் கொண்டாடி இருக்காங்களே!''

"உண்மைதாங்க தலைவரே, 50 ஆண்டுகளுக் கும் மேலான அரசியல் வாழ்வைக் கொண்டவரான ஸ்டாலின், பள்ளிப் பருவத்திலேயே கோபாலபுரத் தில் மாணவர் தி.மு.க.வைத் தொடங்கியவர். அப் போதே நாடகங்கள் மூலம் பிரச்சாரத்தைக் கையில் எடுத்தவர். தொடர்ந்து மிசாக் கொடுமைகள் உள்ளிட்ட சோத னைகளைச் சந்தித்தவர். தன் மேல் விழுந்த காயங்களையே படிக்கட்டுகளாக ஆக்கிக் கொண்டு மேலே வந்தவர். அப்படிப்பட்ட அவருடைய பிறந்த நாளை கோலாகல மாகக் கொண்டாடி இருக் காங்க. பிரதமர் மோடி உள் ளிட்ட அரசியல் தலைவர் களின் வாழ்த்துக் குவியலுக்கு நடுவில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிரமாண்டமாக பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத் தில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவை ஸ்டாலின் வழி நடத்தணும்னு வாழ்த்தினாங்க.''”

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றி, தி.மு.க.வினரைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்குதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, அங்கே அபரிமிதமான வெற்றி பெறுவோம்னு களத்தில் இருந்த தி.மு.க. அமைச்சர்கள் சொன்னபோதும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வெற்றிபெறும்னு ஸ்டாலின் நினைத்தார். அதுக் குக் காரணம், உளவுத்துறை ரிப்போர்ட். அதோடு, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் பறக்கும் படையினரும் ஆளுங்கட்சித் தரப்பை தீவிர கண்காணிப்பில் வைத் திருந்ததோடு, அ.தி.மு.க. வினர், நாம் தமிழர் கட்சி யினர் உள்ளிட்டவர்களை வெகு சுதந்திரமா செயல் பட அனுமதிச்சாங்க. அதோடு வருமான வரித் துறையினர் வேறு தி.மு.க. அமைச்சர் களையும், பெரும் புள்ளி களையும், அவர்களின் நட்புக் குரிய தொழில் அதிபர்களை யும் கண்கொத்திப் பாம்பாக கண்காணிச்சிது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்காக காங்கிரஸ் தரப்பே தீவிரமா களமிறங்கலை. இப்படிப்பட்ட சங்கடங்களால் கைச்சின்னம் குறைந்த பட்ச வாக்குகளில் வெற்றிபெறும்னு முதல்வர் கணிச்சிருந்த நிலை யில், இந்த மகத்தான வெற்றி அவரையும் உற்சாகமடைய வச்சி ருக்கு. இந்த வெற்றியை அவருக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக தி.மு.க. உடன்பிறப்புகள் பார்க்கறாங்க.''”

"ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவை நிறுத்த எதிர்க்கட்சிகள் தலைகீழா நின்னும் கூட, சிறு அசம்பாவிதத்துக்கும் தி.மு.க. இடம் கொடுக்கலையே?''”

"உண்மைதாங்க தலைவரே, வாக்குப் பதிவுக்கு முன்பே பா.ஜ,.க. தரப்பும், எடப்பாடி தரப்பும் தனித்தனியா எடுத்த கருத்துக்கணிப்பு, அவர்கள் படுதோல்வி அடைவாங்கன்னு சொல்லுச்சு. அதனால் எப்படியாவது தேர்தலை ரத்துசெய்ய வைக்கிறதுன்னு அவங்க வரிஞ்சிகட்டி நின்னாங்க. அதனால், அவர்களை சமாளிக்க தி.மு.க.வும் உரிய வியூகங்களை வகுத்தது. அதனால்தான், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்குப்பதிவின்போது, எந்த ஒரு சட்டச்சிக்கலும் வரவில்லை. குறிப்பாக, மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் அமைக்கப்பட்ட கட்சியின் வார் ரூம் பரபரப்பாக இயங்கியது. அனைத்து வார்டுகளையும் கண்காணிக்க, வழக்கறிஞர் குழுக்களையும் அமைத்து மிகவும் கவனமாக செயல்பட்டாங்க. சின்னச் சின்ன பிரச்சினை எழும்போதே அதை சால்வ் செய்தாங்க. அதனால் பண விவகாரம் உட்பட எந்தவித சட்டரீதியான பிரச்சினைகளும் பெரிதாக எழவில்லை. அதனால் சுமுகமாக இடைத்தேர்தல் நடந்ததில், அறிவாலயம் நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கு.''”

rr

"அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி தயாராகறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த ஜூலையில் எடப்பாடி கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்னு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில் காலம் தாழ்த்தாமல், கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி அந்தப் பதவியில் உட்கார்ந்துடணும்னு நினைக்கிறார் எடப்பாடி. அதனால் விரைவில் அதற்கான தேர்தல் தேதியையும் அவர் அறிவிக்க இருக்கிறார். இந்த சூழலில், தென் மாவட் டங்களில் உள்ள ஓ.பி. எஸ்., சசிகலா, தின கரன் ஆகியோரின் ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் ரகசிய முயற்சிகளையும் அவர் முடுக்கிவிட்டிருக்கிறார். இதற்கான அசைன்மெண்ட் மாஜி மந்திரிகளான உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் சேலம் இளங் கோவன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கு.''”

"ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் சட்டமன்ற அ.தி.மு.க. துணைத்தலைவர் பதவியைப் பறிப்பதி லும் எடப்பாடி தரப்பு மும்முரம் காட்டுதே?''”

"ஏற்கனவே அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டு, அந்தப் பதவியில் மாஜி உதயகுமாரை உட்காரவையுங்கள்னு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார் எடப்பாடி. இப்ப, உச்சநீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, மீண்டும் அதே கோரிக்கையோடு சபாநாயகருக்கு ஒரு கடிதத்தைக் கொடுக்கும் முயற்சியிலும் எடப்பாடி தரப்பு ஜரூராக இருக்குது. அதேபோல், இடைக் காலத்தில் அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ்., வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டதால், அவர்களை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் ஒரு கடிதம் முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் பரிசீலிக் கும்படி சபாநாயகரை எடப்பாடித் தரப்பு வலியுறுத்த இருக்கிறது. இதற்கிடையே எடப்பாடி தரப்பிலிருந்து வைக்கப்படும் எந்த ஒரு கோரிக்கை யையும் எங்களிடம் கேட்காமல் பரிசீலிக்கவும், அங்கீகரிக்கவும் கூடாதுன்னு தேர்தல் ஆணையத் திடம் ஓ.பி.எஸ். தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.''

rrrr

"நானும் ஒரு தகவலை உன்மூலம் பகிர்ந்துக்கறேன். சென்னையில் இருந்து மதுரை வரை ’"தமிழைத் தேடி'’என்கிற மொழி உணர்வுப் பரப்புரைப் பயணத்தைக் கடந்த 21ஆம் தேதி முதல், 28 ஆம் தேதி வரை நடத்தி முடித்திருக் கிறார் பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ். இந்தப் பரப்புரைப் பயணத்தில், தமிழன்னை சிலை ஒன்றும் ராமதாஸோடு பயணித்தது. அந்த சிலையை கண்டுகளித்த பலரும் அது கம்பீர மாகவும் அழகாகவும் இருப்பதாகச் சொல்ல... அந்த சிலையை வைத்து, தமிழன்னைக்கு ஒரு மணிமண்டபத்தைக் கட்ட முடிவெடுத்திருக் கிறாராம் ராமதாஸ்..''

__________

நித்தியின் முகத்திரை கிழித்த 13-ஆவது வருடம்!

rr

2010, மார்ச் 2-ஆம் தேதி, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு தன்னைத் தானே கடவுள் என சொல்லிக்கொள்ளும் நித்தியானந்தாவின் முகத்திரையை நக்கீரன் கிழித்தகற்றி, திரைக்குப் பின்னால் நித்தி நிகழ்த்திய அலங் கோலங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. அந்த நீண்ட, கடினமான தர்ம யுத்தத்தில் சட்டப் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நித்தியானந்தா இந்தியாவை விட்டு ஓடி கைலாஸா தீவில் தலை மறைவாக இருப்பதில் பெரும்பங்கு நக்கீரனையே சாரும்.

இத்தனைக்குப் பிறகும் தனது செல்வாக்கு ஐ.நா.வரை சென்றடைந்திருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார் நித்தி. பெண் கள் முன்னேற்றம் தொடர்பாக பிப்ரவரி 22-ஆம் தேதி நடந்த ஐ.நா. மாநாட்டில் கைலாஸா(?) நாட்டின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருந்தார் நித்தியானந்தா. இதுகுறித்து விளக்கமளித்த ஐ.நா. இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாஸா இடம்பெறவில்லை. அரசுசாரா அமைப்புகளின் சார்பிலேயே கைலாஸா பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். எந்த அரசுசாரா அமைப்பும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் கைலாஸா உறுப்பினர்களும் பங்குபெற்றனர். எனவே, அவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மைக்கு ஆதரவான நமது குரல் வலுக்குறையாது தொடர்வதுடன், நித்தியானந்தா அண்ட் கோவின் முகத்திரையை நக்கீரன் தொடர்ந்து கிழித்தெறியும்.

nkn040323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe