Advertisment

திராவிடக் கவிஞர் முடியரசனாருக்கு மணிமண்டபம்! முதல்வருக்கு கோரிக்கை!

kavingar

திராவிட இயக்கக் கவிஞர் களில் முதன்மை யானவரான முடியர சனாரின் நினை வைப் போற்றும் வகையில், மணி மண்டபம் கட்ட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத் துள்ளனர்.

Advertisment

'கவிஞன் யார் என்பதற்கான எடுத்துக் காட்டு திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்' என்று தந்தை பெரியா ராலும், "திராவிட நாட் டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் ஆவார். புரட்சிக்கவிஞர் அடிச் சுவட்டில் இன்று எத்த னையோ கவிஞர்கள் எழுச்சி முரசு கொட்டி வருகிறார்கள், இலட்சிய கீதம் இசைத்துவருகிறார்கள். அந்த வரிசையில்

திராவிட இயக்கக் கவிஞர் களில் முதன்மை யானவரான முடியர சனாரின் நினை வைப் போற்றும் வகையில், மணி மண்டபம் கட்ட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத் துள்ளனர்.

Advertisment

'கவிஞன் யார் என்பதற்கான எடுத்துக் காட்டு திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்' என்று தந்தை பெரியா ராலும், "திராவிட நாட் டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் ஆவார். புரட்சிக்கவிஞர் அடிச் சுவட்டில் இன்று எத்த னையோ கவிஞர்கள் எழுச்சி முரசு கொட்டி வருகிறார்கள், இலட்சிய கீதம் இசைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் முதன்மையானவர் முடியரசன்' எனப் பேரறிஞர் அண்ணாவாலும் பாராட்டப்பட்டவர் வீறுகவியரசன் முடியரசனார். பெரியகுளத்தில், 1920ஆம் ஆண்டில் பிறந்த முடியரசனின் இயற்பெயர் துரைராசு. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நெருங்கிய நட்பைப் பெற்றபின்னர், முடியரசன் ஆனார். பெரும்புலவரான தனது தாய்மாமா துரைசாமி மூலமாக இளம்வயதிலேயே மொழிப்பற்றையும், இலக்கிய உணர்வையும் வளர்த்துக்கொண்டார்.  

Advertisment

1940ஆம்  ஆண்டு முதல் மரபுக்கவிதைகளை எழுதிவந்தவர், கவியரங்க மேடைகளில் தனது அனல்பறக்கும் கவிதைகளால் சிலிர்க்க வைத்தார். திராவிட இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கவிஞர் கள் இருந்தபோதிலும், "என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே' என்று புரட்சிக்கவி பாரதிதாசனால் பாராட்டப்பட்டவர் முடியரசன். அவரது கவியரங்கக் கவிதைகள், "கவியரங்கில் முடியரசன்' என்ற தலைப் பில் அச்சேறியது. இது வரை, 18 கவிதை நூல் கள், 3 காப்பியங்கள், 3 கதை நூல்கள், 2 கட்டு ரைத் தொகுப்புகள், 2 கடித இலக்கியம், 4 பாட நூல்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார்.

முடியரசனின் கவிதை கள், பேரறிஞர் அண்ணா வை கவர்ந்ததால், திரா விட நாடு இதழ்களின் அட்டைகளில் முடியரச னின் கவிதைகளை அச்சேற்றினார் அண்ணா. 

முடியரசனார் குறித்து கலைஞர், "தன்மானக்குன் றம், தலைதாழாச் சிங்கம், கொள்கைமாறாத் தங்கம், திராவிட இயக்கத்தின் முன் னோடிக் கவிஞர், திராவிட இயக்கத்தின் ஈடு இணை யற்ற தளகர்த்தர்களில் ஒருவர் முடியரசனார். இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று செங்கோலோச்சுகிறதென்றால், அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்' என்று புகழ்ந்தார்.

பெருமைவாய்ந்த கவிஞர் முடியரசனார் நூற் றாண்டு நிறைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், காரைக்குடியில் முடியரசனாருக்கு மணிமண்டபம் அமைக்க வீறுகவியரசன் முடியரசன் அவைக்களம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கை யை ஏற்று, அரசின் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டு, முடியரசனாரின் சிலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு, அவ்விடத்திலேயே அரசுக்கு வருவாய் வரத்தக்க வகையில், ஆயிரம் பேர் அமரத் தக்கவாறு அரங்க வடிவில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

திராவிட மாடல் அரசு, திராவிடக் கவிஞருக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பிக்குமா? 

nkn251025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe