ன்னியர் சமுதாயத்தினருக்கு தனியாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வன்னியர் சங்கத் தின் சார்பில், 1987-ம் ஆண்டு, வட தமிழ்நாட்டில் போராட்டம் நடை பெற்றது. 17.9.1987-ம் அன்று தொடங்கிய போராட்டம், 23.09.1987 வரை நடை பெற்றது. அப்போது தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந் தது. இந்த போராட் டத்தை நசுக்க வேண்டு மென நினைத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 வன்னியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தார் கள். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், அவர்கள்மீது சிறைச்சாலைக்குள் நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் சிறையிலேயே இறந்தார்கள். அப்போது, வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராமதாஸ்.

mm

1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார் கலைஞர். அதேபோல தி.மு.க. ஆட்சிக்குவந்ததும், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் என்ற புதிய பிரிவை உண்டாக்கி, பிற்படுத்தப்பட் டோருக்கான 50% இடஒதுக்கீட்டில், வன்னியர்கள் அடங்கிய 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தி அவர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கினார். போராட் டத்தின்போது இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் நிதியுதவி, மாதம் 2 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கினார் முதல்வராக இருந்த கலைஞர்.

2019-ல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப் படும், சமூக நீதிப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்த 21 பேருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என வாக்குறுதி தந்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின்.

Advertisment

முதல்வரான நிலையில், 2021 செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் பேசும்போது, "வாக்குறுதி தந்திருந்தேன், அதனை யார் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை. சமூக நீதிக்காகப் போராடி உயிர்நீத்த சமூக நீதிப் போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படும்" என்றார்.

முதல்வரின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, வன்னியர் சங்கம், வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட பல்வேறு சங்கங்களும் பெருவரவேற்பை அளித்துள்ளன.stalin

இதுகுறித்து நம்மிடம் பேசிய வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர், "போராட்டம் நடந்து 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 7 சட்டமன்றத் தேர்தல்கள், 8-க்கும் மேற்பட்ட நாடாளு மன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அதன் கூட்டணிக் கட்சியாக அசைக்கமுடியாத இடத்தில் பா.ம.க.வும் அதிகாரத் தில் இருந்துள்ளது. அப்போ தெல்லாம் மணி மண்டபம் கட்டுவதைப் பெரியளவில்கூட பா.ம.க. வலியுறுத்தவில்லை. இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி உறுதியாகி தேர்தலைச் சந்திக்க, வன்னியர் வாக்குகளைக் கவர, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டார்கள் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாங்களே எதிர்பாராதவிதமாக அந்த அரசாணை அனைத்து மட்டங் களிலும் அமல்படுத்தப்பட்டது.

Advertisment

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் மணிமண்டபம் கட்டுவதாக அறிவிப்பு போன்ற வை எங்களுக்கே ஆச்சர்ய மானது. இதற்கு நன்றி சொல்ல நிச்சயம் வன்னியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள். மணிமண்டபத் திறப்புவிழா நடந்தபின், வன்னியர்கள் சார்பில் முதல்வருக்கான பாராட்டுவிழா நடத்தவேண்டும் என்பது எங்கள் ஆசை'' என்றார்.

பா.ம.க. தலைமைக்கு மிக நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, "இட ஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட போராட் டத்துக்குபின் வன்னியர்களை திட்டமிட்டே வன்முறையாளர்கள், சாதி வெறியர்கள், மரம் வெட்டிகள், குடிசை கொளுத்திகள் என விதவிதமான பெயர்களில் கொச்சைப்படுத்தினார்கள். இப்போது அதற்கு மருந்து தரும்விதமாக போராட்டத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டவர்களை, சமூகநீதி போராளிகள் என அரசே அடை யாளப்படுத்தி, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளது. இது வன்னியர்கள் மீதான வீண் அவதூறுகளை துடைக்கும். முதலமைச்சர் அறிவிப்பை பார்த்ததும் தைலாபுரத்தில் கட்சியின் முக்கியஸ் தர்களுடன் விவாதித்த பின்பே அறிக்கை வெளியிட்டார். நீண்ட நன்றி அறிக்கை வெளியிட்டால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கோபித்துக்கொள்ளும் என்பதால் சாதாரணமாக அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டது'' என்கிறார்கள்.

கொங்கு கவுண்டர் + வன்னியர் கூட்டணியை உடைக்கவே வன்னியர் மணிமண்டபம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் என் கிறார்கள் சிலர். உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி என்ற அறிவிப்பும் இந்த எண்ணத்தை வலிமைப்படுத்துகிறது.

இதுகுறித்து வன்னிய பிரமுகர்களிடம் கேட்டபோது, "அ.தி.மு.க. கூட்டணியில் கொங்கு வேளாளர்கள் செல்வாக்காக இருக் கிறார்கள். இது எங்கள் சாதியினருக்கும் நன்றாகத் தெரியும். இரு சமூகத் தினருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் இல்லை. கொங்கு மண்டலத்தில் வன்னியர்கள் அதிகமுள்ள சேலம், தருமபுரி மாவட்டங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வின் உட்கட்சிப் பிரச்சினைகளே காரணம்'' என்றார்கள்.