Advertisment

மாணிக்தாகூர் Vs தளபதி தகிப்பில் மதுரை பாலிடிக்ஸ்!

manick-thalapathi

தை பொங்க லன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘எக்ஸ்’ தளத்தில். "தை பிறந்தால் வழி பிறக்கும்'.…ஆட்சியில் பங்கு என்பது என்ன என்பதை நாம் அறிய. கேரளாவின் யு.டியூப் மாடல் உதாரணமாக இருக்கிறது. கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையான பாதை யைக் காட்டுகிறது. ஆனால் அதிகாரம் குவிக்கப்படவில்லை; பகிரப்படுகிறது' என்று தி.மு.க. கூட்டணியில் அதிர்வை ஏற்படுத்தினார். அடுத்ததாக, மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டத்தை கூட்டி, "மதுரை வடக்கில் இந்தமுறை காங்கிரஸ்தான் நிற்கப்போகிறோம். உடனே பூத் கமிட்டி அமையுங்கள்'' எனச் சொல்ல, காங்கிரஸாரோ, "வடக்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. தளபதி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, பூத் கமிட்டி அமைத்து, தொகுதியில் சுற்றிவரும் நிலையில் நாம் களத்தில் இறங்கினால் பிரச்சனை யாகாதா?'' எனக் கேட்க, அவர்களை சமாதானப்படுத்திய விஷயம் எம்.எல்.ஏ. தளபதி காதுக்குப்போக கடுப்பாகி விட்டார். 

Advertisment

அட

அடுத்து நடந்த தி.மு.க. கூட்டத் தில், "பூத் கமிட்டி போடக்கூட ஆளில் லாத கட்சி, தொகுதிக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத் துள்ள கட்சி' என்றெல்லாம் கடுமை யாகக் காங்கிரஸை தாக்கியவர், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக் கெல்லாம் அடுத்த முறை சீட் கொடுக்கக்கூடாது எனத் தலை மைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மதுரை நகரெங்கும், காங்கிரஸ் கட்சி சார்பில், 'மதுரை வடக்கு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்!' என்று போஸ்டர் ஒட்டப்பட, இது தி.மு.க.வினரை மேலும் கொதிப்பாக்கியது! உடனே, "தொகுதி முடிவாகாத நிலையில் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டியது கண்டிக்கதக்கது. இதை செய்தவர்கள்மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்'" என்றார் செல்வப் பெருந்தகை. பதிலுக்கு மாணிக்கம் தாகூரோ, "இளைஞர் கங்கிரஸார்தான் அந்த போஸ்டரை ஒட்டினர். உணர்வுள்ள காங்கிரஸாரை நான் பாராட்டுகிறேன். தளபதி, அதிகார மமதையால் இப்படிப் பேசுகிறார். மதுரை வடக்கு தொகுதி யை காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது'' என்றவரிடம், கனிமொழி எம்.பி., ராகுலை சந்தித்தது குறித்து கேட்ட போது, "அவர்கள் என்ன பேசினார்களென்று யாருக் கும் தெரியாது. கார்கே அமைத்த குழு மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும். காங்கிரஸ் கட்சியை இழிவாகப் பேசி யவர்களிடம் எந்த தயவு தாட்சண்யமும் பார்க்கக் கூடாது. அவமானப்படுத்திய தி.மு.க. மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

manick-thalapathi1

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "சார், எங்களுக்கே சந்தேகமாக இருக்கு. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர். அவர் திடீரென அதிகாரத்தில் பங்கு வேண்டுமென்று குரல் கொடுத்துவிட்டு, மாநிலத் தலைவரிடம் கூட தெரி விக்காமல் விஜய்யை சந்தித்தார். அதையடுத்து மாணிக்கம் தாகூரும் கூட்டணிக்கு எதிராகக் கள மிறங்கினார். இப்படி அடுத்தடுத்து கூட்டணிக்கு எதிராக செயல்படுவது எங்களுக்கே சந்தேகத்தை கிளப்புகிறது. இவர் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ?'' என கேள்வியெழுப்பியவர்கள், "மாணிக்கம் தாகூர், தொகுதிப் பங்கீடே முடியுமுன் பூத் கமிட்டி போடச் சொல்கிறார். கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்துமென்று நிர்வாகிகள் சொல்வ தையும் காதில் வாங்கவில்லை. அவரது மாமனார் பெயரில் வடக்கு தொகுதியை கேட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது செயல் காங்கிரஸ்காரர்களையே வேதனைப்படுத்து கிறது'' என்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் நம்மிடம், "மாணிக்கம் தாகூரின் உறவினர்தான் சுதர்சன நாச்சி யப்பன். 2021ல், இதே மதுரை வடக்கு தொகுதியை கேட்டு நான், ரவிச்சந்திரன் ஆகியோர் பணம் கட்டி விண்ணப்பித்திருந்தோம். அப்போது அவர், "உனக்கு மதுரை வடக்கிற்கு சீட் வாங்கித் தரு கிறேன், 5 கோடி கொடு' என்றார். நான் "1 கோடி தருகிறேன்' என் றேன். இதுபோல் தான் மாணிக்கம் தாகூரும், சுதர்சன நாச்சியப்பனிடம் பணம் கொடுத்துத் தான் 2009-ல் விருதுநகர் சீட் வாங்கி, வைகோ வை தோற்கடித்து எம்.பி. ஆனார். நான் மதுரை வடக்கு தொகுதி யில் குடியிருப்ப தால், இப்பகுதியில் நலத்திட்ட உதவிகள் செய்துவருவது தெரிந்து என்னை ஓரங்கட்டத் தொடங்கினார். 

கே.எஸ் அழகிரி இருந்தபோது, கட்சி உறுப் பினர் சேர்க்கையை நான் அதிகப்படுத்தியதால், அவர் என்னை பாராட்டினார். அது பிடிக்காமல், நாச்சியப்பன் என்னிடம், "யோவ், நீ பழங்குடி இனத் தைச் சேர்ந்தவன். நீ எப்படி வடக்கு தொகுதியை கேட்கிறாய்? அந்த தொகுதி எங்க சமுதாயம் நிறைந் துள்ள தொகுதி'' என குறிப்பிட்டார் என்றார். 

தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. கோ.தளபதி யிடம் பேசியபோது, அவரது மகன் அன்பு எடுத்தார். "எங்களைப் பொறுத்தவரை தலைமைக்கு விளக்கம் கொடுத்துவிட்டோம். இந்த பிரச்சினை யை பெரிதுபடுத்த வேண்டாமே'' என்று முடித்துக் கொண்டார். 

காங்கிரஸின் ஸ்லீப்பர் செல்போல் செயல்படும் மாணிக்கம் தாகூருக்கும், தளபதி எம்.எல்.ஏ.வுக்குமான மோதல், மதுரை தொகுதி தேர்தலில் எம்மாதிரி எதிரொலிக்கும் என்பது போகப்போகத் தெரியும்.       

nkn040226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe