Advertisment

மணப்பாறை நகராட்சி மீண்டும் தி.மு.க. வசமாகுமா?

dd

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 2 அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணப்பாறை நக ராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், அ.தி.மு.க. 11, தி.மு.க. 11 என சரி சமமாக வெற்றி பெற்றனர். மீதம் உள்ள 5 பேர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த 5 பேரும் தி.மு.க.வில் சீட் கேட்டு கிடைக்காமல் புறக்கணிக்கப் பட்டவர்கள் என்பதால் அவர்கள் தனித்து களம் கண்டு வெற்றியும் பெற்றனர். வெற்றிபெற்ற அன்று மதியம் 3:30 மணியளவில் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்று தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

Advertisment

ff

அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி நடை பெற்றபோது, ஏற்கனவே தி.மு.க. 11 வார்டுகளும் (இவர்களில் கே.என்.நேரு ஆதரவாளர்கள் 7 பேர், அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் 4 பேர்), 5 பேர் சுயேட்சையும் சேர்த்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 2 அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணப்பாறை நக ராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், அ.தி.மு.க. 11, தி.மு.க. 11 என சரி சமமாக வெற்றி பெற்றனர். மீதம் உள்ள 5 பேர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த 5 பேரும் தி.மு.க.வில் சீட் கேட்டு கிடைக்காமல் புறக்கணிக்கப் பட்டவர்கள் என்பதால் அவர்கள் தனித்து களம் கண்டு வெற்றியும் பெற்றனர். வெற்றிபெற்ற அன்று மதியம் 3:30 மணியளவில் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்று தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

Advertisment

ff

அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி நடை பெற்றபோது, ஏற்கனவே தி.மு.க. 11 வார்டுகளும் (இவர்களில் கே.என்.நேரு ஆதரவாளர்கள் 7 பேர், அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் 4 பேர்), 5 பேர் சுயேட்சையும் சேர்த்து மொத்தம் 16 பேர் பலத்துடன் இருந்த நிலையில், நகர்மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் 4 பேரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அ.தி.மு.க. தரப்பில் ஆதரவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இதனால் அப்போது நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான வாக் கெடுப்பில் தி.மு.க. பங்கேற்காமல் தவிர்த்தது. எனவே இதற்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்ததாக, நகராட்சி ஆணையர் ஷியாமளா முன்னி லையில், மார்ச் 26-ஆம் தேதி மீண்டும் நகராட்சி துணைத் தலைவருக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதுவும் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு எந்த ஒரு கூட்டமும் அதிகாரப்பூர்வமாக நடை பெறாமல் உள்ளது. ஏனென்றால், ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றால் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தி.மு.க. தரப்பில் தொடர்ந்து அவையைப் புறக்கணித்ததால் விதிமுறைப்படி சபையை நடத்தவே முடியவில்லை.

ff

Advertisment

இதற்கிடையே திடீர் திருப்பமாக, அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்களாக இருக்கும் 1-வது வார்டு உறுப்பினர் செல்லம்மா, 13-வது வார்டு உறுப்பினர்வாணி ஆகிய இருவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை கடந்த 17-ம் தேதி காலை 7 மணியளவில் சந்தித்து, தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அதன்பின் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அதற்கான பின்னணி குறித்து விசாரித்ததில், தற்போது வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட 5 பேர் கொண்ட குழு தன்னிச்சையாகச் செயல் படுவதாகவும், மூத்த நிர்வாகி களுக்கு எந்தவொரு அங்கீ காரமோ, மரியாதையோ கொடுப்பதில்லை என்றும், தற்போது நகர்மன்றத் தலைவ ராக உள்ளவரும் இந்த ஐவர் குழுவின் முடிவுப்படியே செயல்படுகிறாரென்றும் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே தான் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, அ.தி.மு.க.வில் தொடர்ந்து செயல்பட விருப்ப மில்லாமல் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பியதால், இருவரும் தி.மு.க. நகரச் செயலாளர் கீதா மைக்கேல் மூலம் கட்சியில் இணைந்துள்ள னர்.

இதற்கிடையில் ஏப்ரல் 18-ம் தேதியன்று அ.தி.மு.க. சார்பில் முக்கிய புள்ளிகள் இணைந்து தனியார் ஓட்டலில் ஒரு கூட்டத்தை நடத்தி யிருக்கிறார்கள். அதில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்துவிடுவார்கள். அவர்களை திரும்ப கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

dd

ஆனால் அவர்கள் சொல்வதற்கு மாறாக, இந்த கூட்டம் முடிந்தபின்பும், மேலும் இருவர் அ.தி.மு.க.வி லிருந்து தி.மு.க.வில் இணையத் தயாராகிவருவதாகக் கூறப் படுகிறது.

அதற்கு காரணம், அ.தி.மு.க.விலுள்ள ஐவர் குழுவால் ஏற்பட்ட பாதிப்பே என்கிறார்கள். தங்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காததால், தி.மு.க.வில் இணைவோமென்று கூறி யிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, மீண்டும் தி.மு.க.வினர், மொத்தம் 16 பேருடன் தங்கள் பலத்தை நிரூபிப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தி.மு.க.வில் இருந்துகொண்டு அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக வாக் களித்தவர்களை கட்சித் தலைமை அழைத்து, கட்சியிலுள்ள அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்றும், இப் படி தனித்தனியாகச் செயல்படக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கியுள்ள தாகத் தெரிகிறது. இனி இதுபோல் தவறு நடந் தால் அவர்கள்மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத் துள்ளது. கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்புடையவரை தலைவராக, துணைத்தலைவராக கட்சித் தலைமை அறிவித்தால் இப்பிரச்சினை முடிவுக்கு வருமென்று தெரிகிறது. நகர்மன்றத் தேர்தல் முடிந்தும் நகராட்சி நிர்வாகம் செயல் படாம-ருப்பதால், நகராட்சியில் அனைத்துப் பணிகளும் முடங்கிக் கிடப்பது வேதனையளிப்பதாக உள்ளது.

nkn040522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe