கனிமக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவர் லாரி ஏற்றிக் கொலை!

ss

புதுக்கோட்டை மாவட் டத்தில் மணல், மண், மலை போன்ற கனிமங்கள் கொள்ளையர்களால் களவாடப்படுகிறது. இதற்கெதிராகப் போராடிய சமூக ஆர்வலர் லாரியேற்றிக் கொல்லப்பட்டிருப்பது மக்களை அதிரவைத்திருக்கிறது.

திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் மகன் ஜகபர் அலி. முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும்கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிமக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங் களுடன் பல முறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. நீதி

புதுக்கோட்டை மாவட் டத்தில் மணல், மண், மலை போன்ற கனிமங்கள் கொள்ளையர்களால் களவாடப்படுகிறது. இதற்கெதிராகப் போராடிய சமூக ஆர்வலர் லாரியேற்றிக் கொல்லப்பட்டிருப்பது மக்களை அதிரவைத்திருக்கிறது.

திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் மகன் ஜகபர் அலி. முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும்கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிமக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங் களுடன் பல முறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. நீதிமன்றம் வரை சென்று கனிமக் கொள்ளையைத் தடுக்கவேண்டும் என்று வழக்கு தொடுத்து தீர்ப்பும் வாங்கியிருந்தார்.

ss

இந்த நிலையில் கடந்த ஜனவரி 10ந் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியரை சந்தித்து குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங் களையும் இணைத்து, "பல நூறு கோடிக்கான கனிமக் கொள்ளை நடந்துள்ளது. இதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென' புகார் கொடுத்துள்ளார்.

சுமார் 70 ஆயிரம் லாரி சக்கைகளை அனுமதி பெறாத இடங்களில் குவித்து வைத்துள்ளதையும் படங்களுடன் புகாரில் இணைத்துக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற ஜகபர் அலி, அந்த வழியாகச் சென்ற 407 லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

கிரஷர் உரிமையாளர்களான வலையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் ராசு, சங்கரன் மகன் ராமையா, ராசு மகன் தினேஷ்குமார் ஆகியோர் ஜகபர் அலி தங்கள் தொழிலுக்கு எதிராகச் செயல்படுவதால் அவரை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு, தங்கள் உறவினரான திருமயம் அர்சுன் டிப்பர் சர்வீஸ் முருகானந்தத்தின் உதவியை நாடியுள்ளனர். ஜனவரி 17-ஆம் தேதி தனது லாரி ஓட்டுநர் ராமதாஸ் மகன் காசிநாதன் உதவியுடன், ஜகபர் அலியை பின்தொடர்ந்து, தொழுகை முடிந்து வரும்போது, வவ்வாணி கண்மாய் வாரி அருகே லாரியை ஜகபர் அலி மீது 2 முறை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனடிப்படையில் முருகானந்தம், காசிநாதன், ராசு, தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், ராமையாவைத் தேடிவருகின்றனர்.

"இந்த கொலைக்கு... கனிமவளக் கொள்ளையர்களை மட்டுமின்றி, கனிமவளக் கொள்ளைக்கு தொடர்ந்து துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். திருமயம் தாசில்தார் புவியரசன்தான் குவாரிக்காரர்களுக்கு ஆதரவாக ஜகபர் அலி கொடுத்த புகாரை சம்பந்தப்பட்ட கனிம கொள்ளையர்களுக்கு கொடுத்துள் ளார். நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதால் ஜகபர் அலி கொல் லப்படக் காரணமான மாவட்ட அதிகாரிகள் மீதும் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்கின்றனர் கனிமக் கொள்ளைக்கு எதிரான சமூக ஆர்வலர்கள்.

nkn220125
இதையும் படியுங்கள்
Subscribe