Advertisment

‘நாணயம்’ மனிதனுக்கு அவசியம்! -தங்கம் தென்னரசு ‘நோ டென்ஷன்’ ரகசியம்!

coins

செல்வச் செழிப்போ, பதவியோ, அதிகாரமோ ஒரு மனிதனுக்கு மனநிறைவுடன் கூடிய, உற்சாகம் ததும்பிவழியும் வாழ்க்கையைத் தந்துவிடாது. தனக்கு மிகவும் பிடித்த நல்ல விஷயங்களில், தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருவதுதான், ஒருவரது வாழ்க்கையை அர்த்தம் உள்ள தாக்குகிறது. அந்த வகையில், முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு, அகமகிழ்வுடன் வாழக்கூடியவராக இருக்கிறார்.

Advertisment

coins

தனது 17-வது வயதில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, ஆங்கிலேயர் கால ஓட்டைத் துட்டு, ராஜராஜ சோழன் காசு, செப்புக்காசு உள்ளிட்ட நாண யங்களை வாங்கியதிலிருந்து ஆரம்பித்த பழக்கத்தை, 54 வயதிலும் தொடர்கிறார். “நாணய சேகரிப்பை உண்மையான வரலாற்றுப் பின்னணியை, தெளிவாகக் கண்டறியும் ஆதாரமாகவே நான் காண்கிறேன். என்னைப் பொறுத்தமட்டிலும், "நாகரிகத் தின் தொட்டில்' நாணயங்கள் தான். நாணயங்களை ஒரு மாணவன் சேகரிக்கும்போது, அவனது அறிவுத்திறன், உற்றுநோக்கும் திறன், வகைப் படுத்தும் திற

செல்வச் செழிப்போ, பதவியோ, அதிகாரமோ ஒரு மனிதனுக்கு மனநிறைவுடன் கூடிய, உற்சாகம் ததும்பிவழியும் வாழ்க்கையைத் தந்துவிடாது. தனக்கு மிகவும் பிடித்த நல்ல விஷயங்களில், தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருவதுதான், ஒருவரது வாழ்க்கையை அர்த்தம் உள்ள தாக்குகிறது. அந்த வகையில், முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு, அகமகிழ்வுடன் வாழக்கூடியவராக இருக்கிறார்.

Advertisment

coins

தனது 17-வது வயதில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, ஆங்கிலேயர் கால ஓட்டைத் துட்டு, ராஜராஜ சோழன் காசு, செப்புக்காசு உள்ளிட்ட நாண யங்களை வாங்கியதிலிருந்து ஆரம்பித்த பழக்கத்தை, 54 வயதிலும் தொடர்கிறார். “நாணய சேகரிப்பை உண்மையான வரலாற்றுப் பின்னணியை, தெளிவாகக் கண்டறியும் ஆதாரமாகவே நான் காண்கிறேன். என்னைப் பொறுத்தமட்டிலும், "நாகரிகத் தின் தொட்டில்' நாணயங்கள் தான். நாணயங்களை ஒரு மாணவன் சேகரிக்கும்போது, அவனது அறிவுத்திறன், உற்றுநோக்கும் திறன், வகைப் படுத்தும் திறன், வரிசைப்படுத் தும் திறன், கூர்ந்து செயலாற் றும் வேகம் எனப் பலவும் மேம்படும். மேலும், கவனிப்பு, ஓர்மை, ஒப்பீடு செய்தல், வரலாற்றுப் பின்னணி, தமிழ்மொழி சார்ந்த அறிவு, மன்னர்களின் ஆட்சிமுறை, கூடுதலாக, தமிழ்மண் சார்ந்த வரலாற்று ஆர்வமும், தமிழர் பண்பாடு குறித்த புரிதலும் ஏற்படும். இவை, மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும், போட்டித் தேர்விலும் உறுதுணையாக இருக்கும். நாணயங்களை, அதன் வாங்கும் திறனை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாணயமும், அந்தந்த காலகட்டத்தின் வரலாற்றை உள்ளடக்கியது. நம் தாய்மொழி தமிழ், தொன்மையான, கூடுதல் சிறப்புவாய்ந்த மொழிதான் என்பதற்கு, பழந்தமிழ்ச் சங்ககாலக் காசுகளும், தமிழ் கிரந்த எழுத்துப் பொறிப்பு களைக் கொண்ட சோழர் தங்க நாணயங்களும், துணை ஆதாரங்களாக இருந்துவரு கின்றன. தமிழில் எழுத்துக் குறிப்புகளோடு கிடைக்கப்பெற்ற ஏனைய நாணயங்களைவிட, சேரர் நாணயங்களில்தான், மன்னர்களின் பெயர்களிலேயே நாணயங்கள் மிக அதிகமாகக் கிடைத்துள்ளன. குறிப்பாக என் சேகரிப்பில் மாக்கோதை, குட்டு வன் கோதை, கொல்லிப்புறை, கொல்லிரும்புறை போன்ற நாணயங்களும் அடங்கும். பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் மட்டுமின்றி, தமிழ்கூறும் சேர மன்னர்களின் பெயர்கள், இன்னும் பிற இலக்கியங்களிலும் விரவிக் கிடக்கின்றன.

அவற்றில் சில -அந்து வஞ்சேரலிரும்பொறை, இளங் குட்டுவன், கணைக்காலிரும் பொறை, கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை, கருவூர்ச்சாத்தன், குட்டுவன் கோதை, கோக்கோதை மார்பன், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, நம்பிக் குட்டுவ னார், பாலை பாடிய பெருங் கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மாந்தரம் பொறையன் கடுங்கோ, மாரி வெண்கோ, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், வஞ்சன், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை’என ஆர்வம் மேலிட, அந்தப் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

Advertisment

thangam

நாணயவியல் அமைப்பின் தலைவர் சென்னை மணிகண்டன் நம்மிடம், ""கல்வி அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்ததால், மாணவர்களுக்கு நாணயச் சேகரிப்பின் அவசியத்தை, தொல்லியல் சார்ந்த வரலாற்றுத் தகவல்களை, தமிழக அரசின் பாடத்திட்டத்தில் கொண்டுவர காரணமாக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்திலும்கூட, இதை இன்னும் விரி வாகப் பாடத்திட்டத் தில் கொண்டு வரும் எண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பண்பாட்டில் இவருக்கிருந்த ஆர்வத் தைக்கண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், 2006-ஆம் ஆண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்ற தமிழ் கற்கும் சட் டத்திற்கான சட்ட முன்வடிவை, சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல்செய்யும் வாய்ப்பினை இவருக்குப் பெற்றுத் தந்தார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை 15-ஐ, கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு அறிவித்தது, தங்கம் தென்னரசு கல்வித்துறை அமைச்சராக இருந்தபோதுதான்.

c

அறம் சார்ந்த அரசியல் பயணம் மட்டுமல்லாது, தொன்மை வாய்ந்த நாணயங்களைச் சேகரித்தல், சங்க கால நாணயங்கள் தொடர்பான ஆராய்ச்சி, கல்வெட்டு, ஓலைச்சுவடி, புராதன கட்டிடக்கலை, செப்பேடு, கோவில் கட்டுமானம், ஓவியம், இசை, தமிழ்ப் பண்பாடு குறித்த வரலாறு, தமிழர் நாகரிகம் சார்ந்த இலக்கியம் மற்றும் தமிழ் மண் சார்ந்த மரபுச் செல்வங்களின் மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளார்.

தமிழர் வழிபாட்டில் சமஸ்கிருதம் ஊடுருவிய காலத்தில், தமிழ் மொழிக்கு அதீத முக்கியத்துவம் தந்த பக்தி இலக்கியங்களைப் படித்தறிதல், திராவிடம் சார்ந்த பழைய நூல்களைத் தேடிப்பிடித்துச் சேகரித்தல், வன உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல், பிற உயிர்களையும் தன்னைப் போலவே பாவித்தல், இயற்கை அன்னையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் படம் பிடித்தல் என, மற்ற அரசியல் தலைவர்களில் இருந்து, முற்றிலும் மாறுபட்டவர், தங்கம் தென்னரசு''’என்று பெருமிதப்பட்டார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தும், கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு எனச் சொல்லி கடும் விமர்சனத்துக்கு ஆளான மாஃபா பாண்டியராஜனும் இதே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். தங்கம் தென்னரசுவோ, வேற லெவல்.

nkn240421
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe