இந்தியா சிந்திக்குமா?
நிலம் ஒன்றாய்...
குலம் ஒன்றாய்...
இனம் ஒன்றாய்...
மனம் ஒன்றாய்...
தசையும், ரத்தமும் ஒன்றாய் இருந்த எங்கள் தமிழ் இனத்தை இரு கூறுகளாக பிரித்துப் போட்டது எது? தென் தமிழகத்தோடு சேர்ந்து இருந்த இலங்கை தனித் தீவாக மாறியது எப்படி?
ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாபெரும் கடல் கோளைப் போல மீண்டும் ஒரு கடல் கோள் ஏற்பட்டால்தான் இந்தப் பூகோள அமைப்பு மாறக்கூடும். முன்னர் ஏற்பட்ட அந்த பாழாய்ப்போன கடல் கோளால் தானே தென் தமிழகத்தோடு சேர்ந்திருந்த இலங்கை தனித்தீவாக மாறியது. இலங்கை என்றாலே எரிகின்ற பூமி என்றாகிப் போனது. அந்தச் சுனாமி மட்டும் ஏற்படாமல் போயிருந்தால்....?
ம்... கற்பனையும், கண்ணீருமா தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கப் போகின்றன? அந்தக் கடல்கோள் பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டையும் விழுங்கி ஏப்பமிட்டது. தமிழ் இனத்தை இரு கூறுகளாக பிரித்துப் போட்டது. தாய்த் தமிழகத்தோடு சேர்ந்திருந்த இலங்கை தண்ணீரில் மிதக்கும் தீவாயிற்று- இன்று கண்ணீரில் குளிக்க
இந்தியா சிந்திக்குமா?
நிலம் ஒன்றாய்...
குலம் ஒன்றாய்...
இனம் ஒன்றாய்...
மனம் ஒன்றாய்...
தசையும், ரத்தமும் ஒன்றாய் இருந்த எங்கள் தமிழ் இனத்தை இரு கூறுகளாக பிரித்துப் போட்டது எது? தென் தமிழகத்தோடு சேர்ந்து இருந்த இலங்கை தனித் தீவாக மாறியது எப்படி?
ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாபெரும் கடல் கோளைப் போல மீண்டும் ஒரு கடல் கோள் ஏற்பட்டால்தான் இந்தப் பூகோள அமைப்பு மாறக்கூடும். முன்னர் ஏற்பட்ட அந்த பாழாய்ப்போன கடல் கோளால் தானே தென் தமிழகத்தோடு சேர்ந்திருந்த இலங்கை தனித்தீவாக மாறியது. இலங்கை என்றாலே எரிகின்ற பூமி என்றாகிப் போனது. அந்தச் சுனாமி மட்டும் ஏற்படாமல் போயிருந்தால்....?
ம்... கற்பனையும், கண்ணீருமா தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கப் போகின்றன? அந்தக் கடல்கோள் பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டையும் விழுங்கி ஏப்பமிட்டது. தமிழ் இனத்தை இரு கூறுகளாக பிரித்துப் போட்டது. தாய்த் தமிழகத்தோடு சேர்ந்திருந்த இலங்கை தண்ணீரில் மிதக்கும் தீவாயிற்று- இன்று கண்ணீரில் குளிக்கும் தேசமாயிற்று! ரத்தத்தில் மூழ்கி யுத்தக்களமானது- இலங்கை தமிழ்நாட்டிலிருந்து நிலத்தால் வேறானது; இனத்தால் ஒன்றானது! இந்தியா நிலத்தால் ஒன்று. ஆனால்- இனம், குணம், மொழி, வழி, கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றால் தமிழர்களுக்குச் சம்பந்தமில்லாதது. பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற இந்திய நிலப்பரப்பு எண்ணம் ஒன்றாகி, சொல் ஒன்றாகி, செயல் ஒன்றாகி வாழ்கின்ற தேசம்போல், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் எப்படியோ இன்றுவரை ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களை இந்தியர்கள் என்று இந்தியா நினைப்பது ஒப்புக்காக!
தமிழர்கள் தங்களை இந்தியர்கள் என்று கருதுவது ஒரு நிர்ப்பந்தத்திற்காக!
நீரும், நீரும் கலந்தாற் போன்ற ஒற்றுமை இந்தியர்களுக்குள்ளே இல்லை! எண்ணெய்யும், தண்ணீரும் போலத்தான் நம்முடைய உறவும் ஒருமைப்பாடும். மனமார்ந்த- உண்மையான- எதார்த்தமான ஒருமைப்பாடு இந்தியாவில் இருக்கிறது என்பதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் நினைப்பது ‘இந்தியா என்னை உண்மையான இந்தியன் ஆக்கவில்லையே’ என்பதுதான். இந்தியா அனைத்து தேசிய இனங்களையும் சமமாக பார்க்கின்ற தேசமாக இல்லை. ‘இந்தியா என் தேசம், இந்தியர்கள் எல்லோரும் என் உடன்பிறப்புகள்’ என்று எண்ணும் எண்ணம் பெரும்பாலான மக்கள் மத்தியில் இல்லை.
நான் இந்திய ஒருமைப்பாட்டை மட்டுமல்ல; உலக ஒருமைப்பாட்டையே விரும்புகிறவன். "நாடுகளாலும், எல்லைக் கோடுகளாலும் வையகம் முழுவதும் உள்ள மானிடச் சமுதாயம் பிரிந்து கிடப்பதே தவறு' என்று கருதுகிறவன் நான். ‘"யாதும் ஊரே யாவரும் கேளிர்'’ என்பது தமிழ் மக்கள் உலக ஒருமைப்பாட்டை எவ்வளவு நேசித்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு. எல்லா ஊர்களும், நமது ஊர்களே; எல்லா நாடுகளும் நமது நாடுகளே; எல்லா மக்களும் நமது மக்களே என்ற எண்ணத்தில் -அது தரும் இன்பத்தில் மூழ்கித் திளைக்கும் நாள் எந்த நாள் என்ற ஏக்கம் தான் நெஞ்சில் எழுகிறது. அப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையும், பண்பாடும் மிக்க இந்தத் தமிழர்கள்தான் காலம் காலமாக இந்தியாவால் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒரு காலத்தில் திராவிடர் இயக்கம் ‘"திராவிட நாடு திராவிடருக்கே'’என்ற உரிமை முழக்கம் எழுப்பி வந்தது. காலப்போக்கில் அந்தக் கொள்கையை நாம் கைவிட்டு விட்டோம். கைவிட்டுவிட்ட நிலையிலும் அண்ணாவின் உள்ளத்தை உறுத்திக்கொண்டி ருந்த ஒரு கருத்தை -ஒரு உண்மையை அவர் வெளியிடத் தவறவில்லை.
""திராவிட நாடு கொள் கையை நாம் கைவிட்டு விட்டோம்... இருந்தாலும் அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன'' என்றார்.
அந்தக் கொள்கையை கைவிட்டதோடு மட்டு மல்லாமல், ஒட்டுமொத்தமாக அதற்கான காரணங்களையே மறந்துவிட்டது திராவிடர் இயக்கம்.
பதவி நாற்காலிகளின் கால்களுக்குக் கீழே தமிழ் இன உணர்வை ஒட்டுமொத்தமாக புதைத்துவிட்டார்கள். தமிழர்களைக் கெடுக்கவும், அழிக்கவும்; கெடுப்பார்க்கும், அழிப்பார்க்கும் துணை நிற்கிறதே இந்தியா... என்பதைக்கூட பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
அப்படி எண்ணிப் பார்ப்பது ஆட்சி அதி காரங்களுக்கு ஆபத்தாக முடியும் என அஞ்சுகிறார்கள். இன்று தமிழர்கள் நிலம் இழந்து, புலம் பெயர்ந்து உலகம் எங்கும் அகதிகளாக -அனாதைகளாக -கூலிமக்களாக -கொத்தடிமைகளாக கணம் கணம் செத்துக் கொண்டிருப்பதை எவருமே கண்டு கொள்வதில்லை. இதெல்லாம் இயற்கையின் சாபம் -இயற்கை கொடுக்கும் தண்டனை என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
வட இந்தியாவிலிருந்து போய் குடியேறி ஃபிஜித் தீவின் பிரதமரான சௌத்திரிக்கு தன் பதவி பறிபோனால் பதறத் தெரிகிறது; துடிக்கத் தெரிகிறது! ஆனால் ஃபிஜித் தீவில் கண்ணீரும் செந்நீரும் சிந்திக்கொண்டிருக்கிற தமிழர்களைப் பற்றி நினைக்க நேரம் இருக்காது! என் காயம் அடுத்தவனுக்கு வலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அப்படித்தான் தமிழன் கண்ணீருக்காக இந்தியா கண்ணீர் சிந்தாது. இந்தியா அழும் என எதிர்பார்ப்பது ஏமாளித்தனம்! முட்டாள்தனம்!
நான் ஃபிஜித் தீவு சென்றிருந்தபோது தமிழர்களின் நிலை கண்டு வேதனை அடைந்தேன். நாடறிந்த நாத்திகனான நான் ‘எல்லாம் விதி... தலையெழுத்து’ என சமாதானம் சொல்லிக் கொள்ளத் தோன்றியது.
இந்தியா தேசமே!
இந்தியா தேசமே!!
ஈழத் தமிழர்கள்
இன்னல்கள் பற்றிச்
சிந்தியா தேசமே
-என நான் எழுதிய கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
சோனியா காந்தி, கலைஞர், ஜெயலலிதா... சில விஷயங்களைச்...
(சொல்கிறேன்)