தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய பூகோளம்!
இந்தியாவின் பூகோள அமைப்பு தமிழர்களாகிய நமக்கு எப்படித் தண்டனை தருவதாக- தமிழர்களுக்கு இயற்கை இட்ட சாபமாக இருக்கிறது என்பதை தேசாபிமானத்திற்கும் மேலான மனிதாபிமானத் தோடு எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதலில் யாவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியாவின் பூகோள படத்தையும், இலங்கையின் பூகோள படத்தையும் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.
இந்தியாவின் வடக்கே இமயமலை! ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் வடக்கு எல்லை.
மேற்கே அரபிக் கடல்!
கிழக்கே வங்கக் கடல்!
தெற்கே இந்து மாக்கடல்!
அதையொட்டி மிகமிக அருகில் இலங்கை!
மேற்கேயும், கிழக்கேயும் நீண்ட தூரத்திற்கு நிலப்பரப்பு இல்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடிய எல்லைகள் வடக்கும், தெற்கும்தான்!
வடக்கே... இந்தியா வுக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் இருக்கும் ஜம்மு- காஷ்மீர் பனிமலைப் பிரதேசமாக இருந்தாலும், எல்லைப் பிரச்சினையால் எரிமலைப் பிரதேசமாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் பெரும்பகுதி வட எல்லையைப் பாதுகாப்பதற்காகத்தான் செலவ
தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய பூகோளம்!
இந்தியாவின் பூகோள அமைப்பு தமிழர்களாகிய நமக்கு எப்படித் தண்டனை தருவதாக- தமிழர்களுக்கு இயற்கை இட்ட சாபமாக இருக்கிறது என்பதை தேசாபிமானத்திற்கும் மேலான மனிதாபிமானத் தோடு எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதலில் யாவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியாவின் பூகோள படத்தையும், இலங்கையின் பூகோள படத்தையும் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.
இந்தியாவின் வடக்கே இமயமலை! ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் வடக்கு எல்லை.
மேற்கே அரபிக் கடல்!
கிழக்கே வங்கக் கடல்!
தெற்கே இந்து மாக்கடல்!
அதையொட்டி மிகமிக அருகில் இலங்கை!
மேற்கேயும், கிழக்கேயும் நீண்ட தூரத்திற்கு நிலப்பரப்பு இல்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தக்கூடிய எல்லைகள் வடக்கும், தெற்கும்தான்!
வடக்கே... இந்தியா வுக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் இருக்கும் ஜம்மு- காஷ்மீர் பனிமலைப் பிரதேசமாக இருந்தாலும், எல்லைப் பிரச்சினையால் எரிமலைப் பிரதேசமாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் பெரும்பகுதி வட எல்லையைப் பாதுகாப்பதற்காகத்தான் செலவிடப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் என்னதான் சமரசம் பேசினாலும், சமர் நடந்துகொண்டுதான் இருக்கும்.
தெற்கே இலங்கை!
இலங்கை யார் பக்கம் வேண்டுமானாலும் சாயும்! ஒரு வைப்பாட்டியைச் சிணுங்காமல் வைத்துக்கொள்வதைப்போல எந்தப் பக்கமும் சாய்கிற இலங்கையை நட்பு நாடாக வைத்துக்கொள்ள வேண்டும். அது, இந்தியாவின் தலையெழுத்து! அதனால் இந்தியாவுக்கு இலங்கைதான் உலகத்திலேயே மிகப் பெரிய தேசமாகத் தெரிகிறது. இலங்கையிலிருந்துதானே ஏதாவது அந்நிய சக்திகளால் இந்தியாவுக்கு தெற்கிலிருந்து ஆபத்து வரக்கூடும். அதனால் இலங்கையோடு இருக்கின்ற பாசக்கயிறு அறுந்துவிடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
அப்படி இந்தியாவுக்கு இருக்கிற பொறுப்பை, பொறுப்புள்ள எவரும் தட்டிக் கழித்துவிட முடியாது. பாகிஸ்தானாலும் ஆபத்து வரலாம், அமெரிக்காவினாலும் ஆபத்து வரலாம்; ஆபத்து வருவதும் இலங்கையை மையமாக வைத்துத்தான்... ஆபத்தைத் தடுப்பதும் இலங்கையை மையமாக வைத்துதான் தடுத்தாக வேண்டும். அதனால் இந்தியா, எப்போதும் இலங்கையின் தோளில் கைபோட்டுத் தோழமை பாராட்டியே தீரவேண்டும்.
வைப்பாட்டி கேட்ட; கேட்காத எந்த உதவியையும் செய்யத் தயங்காத செல்வந்தனைப்போல இலங்கையிடம் இந்தியா அக்கறையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டாயம்தான் தமிழர்களைக் கழுவில் ஏற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கு அடிக்கடி ஏற்படுத்துகிறது. இலங்கை சீராடிக் கொண்டால், பாகிஸ்தானோடு படுக்கையைப் பங்குபோட்டுக் கொள்ளும்! அல்லது அமெரிக்காவின் ஆலிங்கன அழைப்பிற்கு அனுமதி கொடுத்துவிடும்! அதனால் இந்தியா இலங்கையைக் கண்ணிலும் வைத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் எந்த ஆட்சி இருக்கிறது; எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்பது பற்றியெல்லாம் இந்தியா கனவு காணவும் அவசியமில்லை; கவலைப்படவும் தேவையில்லை!
சிறிமாவோ ஆட்சியா?
ஜெயவர்த்தனே ஆட்சியா?
சந்திரிகா ஆட்சியா?
ரணில் விக்ரமசிங்கே ஆட்சியா?
ராஜபக்ஷேவின் ஆட்சியா?
-என்ற கேள்விக்கே இடமில்லை! இலங்கை அதிபராக தொழு நோயாளி இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கட்டி அணைத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
வேறு வழி?
வேறு வழியில்லாமல் போனதால்தான் இந்தியா தமிழர்களுக்குத் தண்டனை தருவதைத் தவிரவும் வேறு வழியில்லாமல் போனது. தமிழர்களுக்கு இயற்கை தந்த சாபம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி, தமிழர்கள் வாங்கிவந்த வரம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி. இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க வேறு வழி இல்லவே இல்லை. இந்தியாவுக்கு வரும் ஆபத்தைத் தடுக்க இலங்கை வேண்டும்! இலங்கை வேண்டும் என்றால் தமிழர்கள் அடிக்கடி பலிபீடம் ஏற வேண்டும்! இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருவது! நேற்றும் இதுதான் நடந்தது; இன்றும் இதுதான் நடக்கிறது; நாளையும் இதுதான் நடக்கும்! இதில் மாற்றம் இருக்கப் போவதில்லை.
இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தமிழர்களுக்கு எதிரானதாகத்தான் இருக்க முடியும். இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொள்கையில்- இந்த அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதற்குக் காரணம்... இந்தியாவை ஆளவருகிறவர்களல்ல. இந்தியாவின் பூகோள அமைப்புதான் காரணம்! இந்திய- இலங்கை ஒப்பந்தங்கள் நான்கு முறை செய்து கொள்ளப்பட்டிருக்கின்றன. எல்லா ஒப்பந்தங்களும் எழுதிய தீர்ப்பு தமிழர்களைக் கழுமரத்தில் ஏற்றுவதாகத்தான் இருந்திருக்கிறது!
இந்திய வம்சாவழித் தமிழர்களும் சரி; ஈழத் தமிழர்களும் சரி, அன்று அனுபவித்த... இன்று தொடர்ந்து அனுபவித்துவரும் துன்பங்களுக்கும்....
லால்பகதூர் சாஸ்திரியைச் சொல்லியும் குற்றமில்லை!
இந்திரா காந்தியைச் சொல்லியும் குற்றமில்லை!
ராஜீவ் காந்தியைச் சொல்லியும் குற்றமில்லை!
அது இந்தியப் பூகோளம் செய்த குற்றம், இயற்கை நமக்குத் தந்த சாபத்தால் விளைந்த குற்றம். இந்தியாவின் தென்கோடியில் நாம் இருந்து தொலைந்துவிட்டோம். இயற்கை நமக்குக் கொடுக்கும் தண்டனைகளை ஏற்றுத் தானே தீரவேண்டும்! தமிழர்களுக்குத் தொடர்ந்து தண்டனை வழங்குகின்ற... தொடர்ந்து தமிழர்களைக் கழுவில் ஏற்றுகின்ற இந்த இயற்கை அமைப்பை யாரால் மாற்றக் கூடும்? தெற்கே இருக்கும் தமிழகம் தெற்கே இருந்துதான் தீரவேண்டும். அதற்கு தெற்கே கடற்பகுதியும், அதை ஒட்டி ஈழத்தமிழகமும் இருந்துதானே தீரவேண்டும்! சேது சமுத்திரத் திட்டம் போல இந்த இயற்கை அமைப்பை மாற்ற என்ன திட்டம் தீட்ட முடியும்?
தென் தமிழகத்தோடு சேர்ந்து இருந்த இலங்கை தனித் தீவாக மாறியது எப்படி?
நிலம் ஒன்றாய்
குலம் ஒன்றாய்
இனம் ஒன்றாய்
மனம் ஒன்றாய்
தசையும், ரத்தமும் ஒன்றாய் இருந்த எங்கள் தமிழ் இனத்தை இரு கூறுகளாக பிரித்துப் போட்டது எது? என்பதைச்....
-(சொல்கிறேன்)