நாயகன் அனுபவத் தொடர் (70) - புலவர் புலமைப்பித்தன்

mavali

இந்தியப் பணத்தில் பாகிஸ்தான் ஆயுதம்! இலங்கை இனவெறி!

லால்பகதூர் சாஸ்திரியிலிருந்து தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்கள், ஈழத் தமிழினத்திற்கு எதிராக தங்களால் முடிந்த கெடுதல்களைச் செய்தே வந்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கும் அதையே செய்தார் என்பதை இந்த அத்தியாயத்திலும் சொல்கிறேன்.

1948-லிருந்து தொடர்ந்து துன்பப்பட்டு வந்த... துயரப்பட்டு வருகின்ற ஈழத் தமிழர்களை... எங்கள் தமிழ்ச்சாதியை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை. ’தமிழீழ விடுதலை பெறுவது ஒன்று மட்டுமே தீர்வு! சிங்கள இனத்தோடு, சிங்கள அரசின் கீழ் சமாதானமாக வாழ்வது சாத்தியமே இல்லை’ என்று ஆனபின்னாலும், அதற்கான நியாயங்களை இந்திய அரசு சிந்தனையில் கொள்ளவே இல்லை! இந்தியா, தமிழீழத்தை ஆதரிக்க வேண்டாம். இலங்கையின் இரக்கமற்ற இனவெறி, மதவெறி ஆட்சிக்குத் தருகின்ற ஆதரவையாவது நிறுத்திக்கொள்ள வேண்டாமா? ஈழத்தின் தமிழர்களின் ரத்தத்தில் குளித்த ராஜபக்சேவுக்கு, மன்மோகன் சிங் மிகமிக வேண்டியவராக இருந்தார். அது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

mavali

ஒரு நாளைக்கு இருபது ரூபாய் செலவு செய்ய வக்கற்று, வறுமைக் கோட்டுக்குக் கீழே

இந்தியப் பணத்தில் பாகிஸ்தான் ஆயுதம்! இலங்கை இனவெறி!

லால்பகதூர் சாஸ்திரியிலிருந்து தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்கள், ஈழத் தமிழினத்திற்கு எதிராக தங்களால் முடிந்த கெடுதல்களைச் செய்தே வந்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கும் அதையே செய்தார் என்பதை இந்த அத்தியாயத்திலும் சொல்கிறேன்.

1948-லிருந்து தொடர்ந்து துன்பப்பட்டு வந்த... துயரப்பட்டு வருகின்ற ஈழத் தமிழர்களை... எங்கள் தமிழ்ச்சாதியை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை. ’தமிழீழ விடுதலை பெறுவது ஒன்று மட்டுமே தீர்வு! சிங்கள இனத்தோடு, சிங்கள அரசின் கீழ் சமாதானமாக வாழ்வது சாத்தியமே இல்லை’ என்று ஆனபின்னாலும், அதற்கான நியாயங்களை இந்திய அரசு சிந்தனையில் கொள்ளவே இல்லை! இந்தியா, தமிழீழத்தை ஆதரிக்க வேண்டாம். இலங்கையின் இரக்கமற்ற இனவெறி, மதவெறி ஆட்சிக்குத் தருகின்ற ஆதரவையாவது நிறுத்திக்கொள்ள வேண்டாமா? ஈழத்தின் தமிழர்களின் ரத்தத்தில் குளித்த ராஜபக்சேவுக்கு, மன்மோகன் சிங் மிகமிக வேண்டியவராக இருந்தார். அது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

mavali

ஒரு நாளைக்கு இருபது ரூபாய் செலவு செய்ய வக்கற்று, வறுமைக் கோட்டுக்குக் கீழே ஏறத்தாழ 30 கோடிக்கும் மேற்பட்டோர் வாழும் தரித்திரம் பிடித்த நாட்டின் வரிப்பணம் 4200 கோடி ரூபாயை (அன்றைய மதிப்பில்... நூறு கோடி டாலரை) இலங்கை இனவெறி அரசுக்குத் தானமாக வழங்கினார் மன்மோகன் சிங்.

எதற்காக இந்த பண உதவி? அப்படி என்ன அக்கறை மன்மோகன் சிங்கிற்கு? அந்தப் பணம் மக்கள் வாழ்விற்காக செலவிடப்படவில்லை... பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்கள் வாங்கத்தான் ராஜபக்சே பயன்படுத்தினார். ஆயுதம் வாங்கிக் குவிப்பது ஆயுத பூஜை செய்யவா? எங்கள் தமிழ்ச்சாதியை அடியோடு ஒழித்துக்கட்டத்தான்... என்பதெல்லாம் மன்மோகன் சிங்கிற்கு தெரியாதா என்ன? தெரிந்திருந்தும் 4200 கோடி ரூபாயை வாரி வழங்கினார் ராஜபக்சேவுக்கு. இந்த அநீதியை, தான் சார்ந்த சீக்கிய சமூகத்திற்குச் செய்வாரா?

பொதுவாகக் காங்கிரஸ் ஆட்சி எந்தெந்தக் காலங்களில் நடந்திருக்கிறதோ... அந்தக் காலங்களில் எல்லாம் தவறாமல் தமிழர்கள் கழுவில் ஏற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி மதவாதக் கட்சி என்றால்... காங்கிரஸ் கட்சி தமிழர்களைப் பகையாக நினைக்கின்ற இனவாதக் கட்சி என்றுதான் சொல்லவேண்டும். தமிழர்களைத் தண்டிப்பது, துன்புறுத்துவது என்பதெல்லாம் காங்கிரஸ் அரசுகளின் தீட்டப்படாத திட்டங்கள்.

1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற சத்வந்த் சிங்கும், கேஹர் சிங்கும் 1989-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த சமயத்தில் அதாவது... 2008-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் அந்த இருவருக்கும் நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஞானி ஜோகிந்தர் சிங் வேதாந்தி பேசும்போது... ""பிரதமர் அவர்களே, சத்வந்த் சிங்கும், கேஹர் சிங்கும் சீக்கிய தேசத்தின் மாவீரர்கள்; தியாக சீலர்கள். காரணம் அவர்கள் இந்திரா காந்தியை கொன்றவர்கள்''’ என பகிரங்கமாக ஒளிவு மறைவின்றி பிரகடனப் படுத்தினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை மன்மோகன் சிங். தடைச் சட்டமும் பாயவில்லை. ஆனால் தமிழர்கள் மீது மட்டும் சட்டம் பாய்கிறது.

கைகூடி வரவிருந்த தமிழீழத்தை தடுத்ததே ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய ராணுவத்தின் அமைதிப்படைதானே. இலங்கை ராணுவத்தின் வேட்டைக்காடாக இருந்த பூமி, இந்திய ராணுவத்தின் வேட்டைக்காடாக மாறிப்போனது. இந்தியா தன் படையை ஈழ மண்ணுக்கு அனுப்பியதன் அடிப்படை நோக்கமே தவறானது. நோக்கமே தவறாக இருக்கும்போது நடக்கிற காரியம் நியாயமாகவா இருந்துவிட முடியும்? இந்தியாவிட மிருந்து என்ன நியாயம் கிடைத்துவிடும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு? திரிகோணமலையிலிருந்து அந்நிய சக்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதால் இலங்கையின் அக்கிரமங்களையும் ஆதரித்தே வருகிறது இந்தியா.

எனக்குத் தெரிந்து பாரத மாதாவுக்கு செரிமானமாகாத ஒன்று எது என்றால்... அது; தமிழர்கள் மானத்தோடும், மரியாதையோடும் நலமாகவும், வளமாகவும் வாழ்வது ஒன்றுமட்டும் தான். இந்தியாவால் தமிழர்களுக்குத் தீமை செய்யாமல் இருக்க முடியாது. தமிழர்களுக்குப் பாதகம் செய்யாமல் பாரதத் தாய் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாது. பாரததேவிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தமிழர்கள் பலி பீடத்திற்குச் சென்றுதான் தீரவேண்டும். நரபலியாகத் தமிழர்களை வதைக்காமல் பாரததேவி தனக்கு வரும் தீமைக்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது. ஆவேசம் கொண்ட அம்மனுக்கு ஆட்டையும், கோழியையும் பலியிடுவதில்லையா; அப்படித்தான் இதுவும். கோடிக்கணக்கான இந்தியர்களுடைய பாதுகாப்பிற்கு சில ஆயிரம்... லட்சம் தமிழர்களைப் பலி இடுவது ஒன்றும் பஞ்சமா பாதகம் இல்லை. அதுதான் சாஸ்திரம்; சடங்கு; சம்பிரதாயம்; ஆண்ட வன் கட்டளை. இவற்றை யாரால் எதிர்க்க முடியும்?

இந்தியாவின் பூகோள அமைப்பு தமிழர்களை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது; சித்ரவதை செய்திருக்கிறது;அவதிக்கு ஆட்படுத்தியிருக்கிறது; கொலைக்களத்திற்கு அனுப்பி இருக்கிறது; என்பதையெல்லாம் நினைக்கவே நெஞ்சு பதறும்! சொல்லவோ வாய் பதறும்! அத்தனை துன்பங்களை, அத்தனை துயரங்களை இந்தியாவின் பூகோள அமைப்பு நமக்கு கொடுத்திருக்கிறது.

பெரிய மனிதர்கள், எஜமான்கள் கூலிக்காரப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்தால் என்ன? கற்பழித்தால் என்ன? கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன? யார் கேட்க முடியும்? அப்படித்தான் இந்தியப் பேரரசுக்கு முன்னே தமிழர்களின் நிலை. இங்கே பாய்கிற நதிகள் புனிதமான நதிகள்! இந்த தேசம் புண்ணிய தேசம்! ஆனால் தமிழர்கள் தண்டனைக்குரிய பாவிகள்!!

இந்தியாவின் பூகோள அமைப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, நினைத்து நினைத்து நெஞ்சு வெடித்துவிடக் கூடிய செய்திகளைச்...

(சொல்கிறேன்)

nkn270221
இதையும் படியுங்கள்
Subscribe