நாயகன் அனுபவத் தொடர் (61) - புலவர் புலமைப்பித்தன்

dd

சுயமரியாதையும் சுதந்திரமும்!

விலங்கோடு விலங்காகத் திரிந்த மனிதனை வேறுபடுத்திக் காட்டியது மொழிதான்.

சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் எண்ணத்தை மற்றவருக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதனால் ஏதோ சத்தம் போட்டான்; உளறினான். அதை அடுத்தவன் எப்படியோ புரிந்து கொண்டான். பொருளற்ற சத்தம்; உளறல் வளர்ந்து, பொருள் உள்ள ஒலியாக மாறியது. ஒலி வடிவான எழுத்து மொழி தோன்றியது. அது வளர்ந்து வரி வடிவம் பெற்று ஓர் உயர்ந்த நிலையை எய்தியது. அந்த மொழிதான் அவனுக்கு அடையாளம். மொழியைச் சார்ந்தே இனம் அடையாளம் காணப்பட்டது.

periyar

மொழி மெல்ல மெல்ல வளர்ந்த நிலையில் மனிதன் கருத்துக்களை வெளிப்படுத்தினான். ஒரு மனிதன் என்ன நினைக்கிறானோ... அதைச் சொல்லத்தான் மொழி. அப்படிச் சொல்லவும், செய்யவும் அவனுக்கு உரிமை இருக்கிறது. எண்ணுகிற எண்ணமோ, சொல்கின்ற சொல்லோ, செய்கின்ற செயலோ... எதுவாயினும் அடுத்தவன் உரிமையில் தலையிடாத வண்ணம், அடுத்தவர் நலத்தைக் கெடுக்காத வண்ணம் ஒரு கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும். கட்டுப்பாடு மீறிப்போவது என்பது உரிமை மீறும் செயலாகும்.

எல்லா மனிதருக்கும் சிந்திக்கவும், சொல்லவும், செய்யவும் ஆன உரிமை என்பது பிறப்புரிமையாகும். "இவன் நான் நினைத்ததைத்தான் நினைக்க வேண்டும், நான் சொல்வதைத்தான் சொல்ல வேண்டும், நான் செய்வதைத்தான் செய்ய வேண்டும்'’ என்பது அடுத்தவ

சுயமரியாதையும் சுதந்திரமும்!

விலங்கோடு விலங்காகத் திரிந்த மனிதனை வேறுபடுத்திக் காட்டியது மொழிதான்.

சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் எண்ணத்தை மற்றவருக்கு எடுத்துச் சொல்ல விரும்பினான். அதனால் ஏதோ சத்தம் போட்டான்; உளறினான். அதை அடுத்தவன் எப்படியோ புரிந்து கொண்டான். பொருளற்ற சத்தம்; உளறல் வளர்ந்து, பொருள் உள்ள ஒலியாக மாறியது. ஒலி வடிவான எழுத்து மொழி தோன்றியது. அது வளர்ந்து வரி வடிவம் பெற்று ஓர் உயர்ந்த நிலையை எய்தியது. அந்த மொழிதான் அவனுக்கு அடையாளம். மொழியைச் சார்ந்தே இனம் அடையாளம் காணப்பட்டது.

periyar

மொழி மெல்ல மெல்ல வளர்ந்த நிலையில் மனிதன் கருத்துக்களை வெளிப்படுத்தினான். ஒரு மனிதன் என்ன நினைக்கிறானோ... அதைச் சொல்லத்தான் மொழி. அப்படிச் சொல்லவும், செய்யவும் அவனுக்கு உரிமை இருக்கிறது. எண்ணுகிற எண்ணமோ, சொல்கின்ற சொல்லோ, செய்கின்ற செயலோ... எதுவாயினும் அடுத்தவன் உரிமையில் தலையிடாத வண்ணம், அடுத்தவர் நலத்தைக் கெடுக்காத வண்ணம் ஒரு கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும். கட்டுப்பாடு மீறிப்போவது என்பது உரிமை மீறும் செயலாகும்.

எல்லா மனிதருக்கும் சிந்திக்கவும், சொல்லவும், செய்யவும் ஆன உரிமை என்பது பிறப்புரிமையாகும். "இவன் நான் நினைத்ததைத்தான் நினைக்க வேண்டும், நான் சொல்வதைத்தான் சொல்ல வேண்டும், நான் செய்வதைத்தான் செய்ய வேண்டும்'’ என்பது அடுத்தவரின் உரிமையைப் பறிப்பதாகும். சுயநலம் கொண்டவன்; வலிமை வாய்ந்தவன்; தன் நலத்திற்காக "-தான் வாழ்வதற்காக -அடுத்தவன் கருத்தை -சொல்லை -செயலை ஏற்றுக்கொள்ளாமல் தன் எண்ணம்போல்தான் எவனும் நடந்துகொள்ள வேண்டும்' என்று கருதும் ஆதிக்க மனோபாவம் மெல்ல மெல்ல மனித சமுதாயத்தில் வளரத் தொடங்கியது.

இந்தச் சர்வாதிகார மனப்பான்மை சின்னச் சின்னக் குழுவைத் தாண்டி அடுத்தடுத்த குழுக்களையும் ஆட்கொள்ளத் தொடங்கியது. அடுத்தவனின் சிந்தனைக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் வாழ்வதும், அப்படி வாழ கட்டுப்படுத்துவதும் வாழ்க்கையே அல்ல. அப்படி வாழ்பவன் மனிதனே அல்ல. உள்ளமும், உணர்ச்சியும் இல்லாத உயிரற்ற சடம். அடுத்தவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதைவிட சாவதே மேல். ஒருவன் தன் எண்ணம், செயல் ஆகியவற்றை இழப்பது என்பது பிறப்புரிமையையே இழப்பதாகும். பிறப்புரிமையை இழந்துவிட்டு ஒருவன் வாழ்வதைப் போன்ற அவமானம் உலகில் வேறு எதுவும் இல்லை. ‘"சுதந்திரம் எனது பிறப்புரிமை'’ என்று சுதந்திர போராட்ட காலத்தில் முழங்கிய முழக்கத்திற்கு எனக்கு ஆரம்பத்தில் பொருள் புரியவில்லை. ஆனால் அந்த முழக்கம் எத்தனை அர்த்தமுள்ளது; எத்தனை அறிவார்ந்தது என்பதைப் பின்னர்தான் நான் உணர்ந்து கொண்டேன்.

சுயமரியாதையும், சுதந்திரமும் ஒன்றோடொன்று இணைந்தவை. பிரிக்கப்பட முடியாதவை. சுதந்திரம் இல்லாதவனுக்குச் சுயமரியாதை இருக்க முடியாது. சுயமரியாதை உள்ளவன் சுதந்திரம் இல்லா மல் இருக்கமுடியாது. அப்படிப்பட்ட சுய மரியாதையும், சுதந்திரமும் வாழ்க்கை பெரிதென்று எண்ணுகிறவனுக்கு; எப்படியா வது வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிற வனுக்கு வாய்ப்பதில்லை. சுயமரியாதை உள்ளவனாக இருப்பதற்கும், சுதந்திரத்தை நேசிப்பதற்கும் பற்றற்ற மனம் வேண்டும். ‘"நாமார்க்கும் குடியல்லோம்'’ என்று ஒரு பற்றற்ற மனிதரால்தான் பாடமுடிந்தது. தந்தை பெரியார் அவர்கள் மூத்திரக் குடுவையைச் சுமந்துகொண்டு தொண்ணூற்றைந்து வயது முடியும்வரை பரதேசியைப் போல -பஞ்சை பராரியைப்போல சுற்றி அலைந்தது இந்த சுயமரியாதையை மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கத்தான். சுதந்திரமுள்ள மனிதனாக வாழ்வதற்குச் சொல்லிக் கொடுப்பதற்குத்தான்.

barathiyar

எந்த மனிதன் என்னை அவனுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்கிறானோ... அந்த மனிதனுக்குக் கீழே நான் வாழமாட்டேன். எந்த தேசம் அல்லது எந்த சமுதாயம் என்னை ‘நீ இரண்டாம்தரக் குடிமகன்’ என்று சொல்கிறதோ, அந்த தேசம் எனக்கு அந்நிய தேசம்தான். என் மொழிக்கு மாற்றாக வேறொரு மொழியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடுத்தவன் நிர்ப்பந்திப்பது, என்னை இரண்டாம்தரக் குடிமகனாக ஆக்குகின்ற செயல். என் அடையாளத்தை அழிக்கிற செயல். இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய போதும்; ஐ.நா. சபையில் பேசியபோதும் தன் தாய்மொழியான இந்தியில் பேசினார். அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். வாஜ்பாய் தன் அடையாளத்தை அழியாமல் பார்த்துக் கொள்வதில் எத்தனை அக்கறையோடு இருந்தார் என்பதை நினைத்துப் பாராட்டு கிறேன். அந்த எண்ணம், அந்த லட்சியம் தமிழர்களுக்கும் வரவேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். வரவில்லையே என்றுதான் வருத்தப்படுகிறேன். உலகெங்கிலும் வலுத்தவனின் ஆதிக்க மனப்பான்மையும், இளைத்தவன் அடிமைப்பட்டுக் கிடப்பதும் அன்றும் இருந்திருக்கிறது; இன்றும் இருக்கிறது.

ஈழத்தில் சுமார் 70 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் மேல் அடிமைத்தனம் திணிக்கப்பட்டு வருகிறது. அதை எதிர்த்து நடக்கிற போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. போராட்டத்தின் வடிவங்கள் மாறியிருக் கின்றன. போராட்டம் ஓயவில்லை. கிழக்கு தைமூரைத் தொடர்ந்து, மாண்டெனிக்ரோவைத் தொடர்ந்து, கொசாவாவைத் தொடர்ந்து தமிழ் ஈழம் என்பது காலத்தின் கட்டாயம்.

பாரதி சொன்னானே...

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ? - என்றும்

ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ?

"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி'’-இது தமிழ்நாட்டு மேடைதோறும் ஓயாமல் மேடைப் பிரசங்கிகள் இடுகின்ற முழக்கம்.

"தமிழன் கடல் கடந்து சென்றான், கடாரம் கொண்டான்; காவா நாவிற் கனக விசயன் தலையில் சேரன் செங்குட்டுவன் கல்லினை ஏற்றினான், கற்புத் தெய்வம் கண்ணகிக்கு சிலை வடித்தான். ஒரு மொழி வைத்து உலகாண்டான் சேரலாதன்'’’இப்படியெல்லாம் ஆயிரம் சொல்லப் பட்டாலும் இன்றுள்ள தமிழன் எந்த நிலையில் இருக்கிறான்? என் முப்பாட்டன் முடிபுனைந்து ஆண்டான்’என்ற பெருமை, இன்று பிச்சை எடுக்கும் எனக்கென்ன பயன்படும்! அப்படித் தான் அந்தப் பழம் பெருமைகள் இன்று பொருள் அற்றுப் போயின. ஆங்கிலத்தில் கூட Kooli என்ற சொல் இருக்கிறது. அது தமிழ்ச் சொல். கூலி வேலை செய்யப் பிறந்த இந்தக் கொத்தடிமை இனத்துக்கே உரிய அந்தச் சொல்லை ஆங்கிலத்திற்கு நாம் தானமாகத் தந்திருக்கிறோம்.

இன்று உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்கிறார்கள்; எங்கே வாழ்கிறார்கள்? வாடுகிறார்கள்! வதைகிறார்கள்! உலகத்தில் இன்று தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பவன் இறைவன் அல்ல... தமிழன். மலேசியாவில், பினாங்கில், சிங்கப்பூரில், மொரீசியஸில், ஃபிஜி தீவில், ஆப்பிரிக்காவில் என்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் தமிழர்கள் இருக்கின்றார்கள். எல்லா இடங்களிலும் பெரும்பாலும் கூலிகளாகவே இருக்கிறார்கள். அடுத்த நாட்டை தன் வேர்வையால், ரத்தத்தால் வாழவைத்துக் கொண்டிருக்கிறான் தமிழன்.

எனது ஃபிஜித் தீவு அனுபவங்களைச்....

(சொல்கிறேன்)

nkn270121
இதையும் படியுங்கள்
Subscribe