பிரியங்காவிம் நளினி சொன்ன உண்மை!

1992-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22-ஆம் நாள் வெளியான Illustrated weekly of Indiaஆங்கில இதழில் ‘Who really killed Rajiv Gandhi' என்ற தலைப்பில் Dr.Narman Baker அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

Advertisment

Within days of the assassination, the Hindu reported that an LTTE emissary met Rajiv Gandhi earlier in 1991 to re#establish a cardial relationship the congress party spokesman, Pranab Mukherjee, denied that such a Meeting took place. Later, it became evident that the meeting in fact took place on 5'th march, 1991 at Rajiv Gandhi's new Delhi residence. this is a Critical piece of evidence, if the meeting ended amicably and if the LTTE believed that Rajiv Gandhi would not be hostile to the LTTE, then it would no longer have a motive to assassinate Rajiv Gandhi (If LTTE's foes were to know of the meeting they might have a motive to assassinate Rajiv... ... ...

இப்படியாக அவர் எழுதிய நீண்ட கட்டுரையில் அவர் சொல்ல வருவதை சுருங்கச் சொன்னால்....

1991 மார்ச் 5-ஆம் தேதி ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் சார்பாக அவர்களின் தூதர்கள் ராஜீவின் வீட்டிலேயே சந்தித்துப் பேசி, நல்லவிதமாக அந்தச் சந்திப்பு முடிந்த நிலையில், விடுதலைப் புலிகள் ராஜீவைக் கொன்றதாகச் சொல்வது கொலையைத் திசைதிருப்பும் வேலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இருக்க நியாயமில்லை.

Advertisment

இன்னொன்றையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்களே தவிர, அடுத்தவரைக் கொலை செய்வதன் மூலம் தங்கள் லட்சியம் அழிந்து போவதை அனுமதிக்க மாட்டார்கள். ஏங்ய்ங்ழ்ஹப் ஆச்ள்ண்ழ் ஃஹழ்ண்ம் அவர்களே விடுதலைப் புலிகள் ராஜீவை கொலை செய்திருக்க அடிப்படையான காரணங்கள் இல்லை’என்பதை விளக்கி இருக்கிறார், ராஜீவ்காந்தியை புலிகள் கொலை செய்வதால் ஏற்படும் சாதக பாதகங்களை மிக நுட்பமாகக் குறிப்பிட்டிருந்தார்.

priyanka-gandhi

காத்மா காந்தி கொலைக்கும், இந்திரா காந்தி கொலைக்கும் புலன் விசாரணை செய்யவேண்டிய பெரிய அளவிலான சிக்கல் இருக்கவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி கொலைதான் மிக அதிசயமான மர்மங்களைக் கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலையில் ஏற்கனவே நடந்த புலன் விசாரணை என்பது புலன் விசாரணையே அல்ல. அது... சதிகாரர்கள் கொலை செய்து விட்டுத் தப்பித்துக் கொள்வதற்காக -சதிகாரர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட புலன் விசாரணை யாகத்தான் இருக்கிறது. இந்தப் புலன் விசாரணை நிரபராதிகளைத் தண்டிப்பதாகும். சிறப்பு புலனாய்வு குழு செய்த வேலையெல்லாம் குற்றவாளிகளுக்கு பதுங்கு குழிகளை உருவாக்கி பாதுகாத்த வேலைதான்.

இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது அதிகார பீடத்தில் இருந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். கொலை நடந்த அன்றே தெரிந்திருக்கும். விடுதலைப் புலிகள் மீது பழி போட்டுவிட்டுத் திரியும் அந்தத் துரோகிகளைத் தெரிந்து வைத் துள்ளவர்களும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தே வருவது எதனால் என்பதுதான் விளங்க வில்லை.

ராஜீவ் கொலையில் உண்மை யை அறிய முடியாமல் மறைத்து வைத்திருந்த மர்ம இருள் விலகுகின்ற காலம் இந் தக் காலம்! இன்னும் நீண்ட காலத்துக்கு இந்த மர்ம இருள் நீடிக்கும் என்று சதிகாரர்கள் கருதிக்கொண்டு நிம்மதியாக இருந்து விட முடியாது.

ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சோனியா காந்தியின் கருணையால் ஆயுள் தண்டனையாக்கப் பட்டது. நளினியை ஆயுள் தண்டனைக் கைதியாக அறிவிக்கச் செய்ததே- தண்டனையைக் குறைத்துத் தரச் சொன்னதே... ஒருவேளை நாளையே மறு புலன் விசாரணை நடக்குமானால், உண்மைக் குற்றவாளிகளின் முகத்திரையைக் கிழித்துக்காட்ட உதவும்.

2008-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் நாள் ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, வேலூர் வந்து நளினியை சிறையில் சந்தித்துப் பேசினார். சிறைச்சாலையின் விதிமுறைகளை மீறி மிக ரகசியமாக வந்து சந்தித்தார் பிரியங்கா.

பிரியங்காவிடம் நளினி சொன்னவை:

1. கொலை நடந்தபோது நான் தொலைதூரத்தில் வரிசையில் நின்றிருந்தேன். எனக்கு உண்மையாகவே என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது. என் அருகில் இருந்த சுபாதான் "இன்னும் இரண்டு மூன்று நிமிடங்களில் தணு சரித்திரம் படைக்கப் போகிறார்' என்று சொன்னாள்.

2. என் கணவர் முருகன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல. அவரும் என்னைப்போல ஒரு அப்பாவிதான். எங்களுக்கு இந்தக் கொலையில் எந்த சம்ப்ந்தமும் இல்லை.

-இப்படிச் சொல்லியிருக்கிறார் நளினி.

ஒரு தவறைச் செய்துவிட்டு, பின் தண்டனையிலிருந்து தப்புவதற்காக பொய் சொன்னால்... அதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் நளினியை பிரியங்கா சந்தித்தபோது, பதினேழு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து முடிகிற நிலையில் இருந்த நளினி எதற்காக ‘கொலையில் சம்பந்தமில்லை’ என்று பொய் சொல்லப் போகிறார். அப்படி பொய் சொல்வதால் அனுபவித்த கொடுமை இல்லையென்றாகிவிடுமா? அதனால்... எங்களுக்கு இந்தக் கொலையில் சம்பந்தமில்லை’ என்று நளினி சொன்னது உண்மையான வாக்குமூலமே.

ஒருக்கால், மரணதண்டனை விதிக்கப்பட்டு, நளினி தூக்கிலிடப்பட்டிருந்தால் அவருடனேயே உண்மைகளும், நியாயங்களும் புதைந்து போயிருக்கும். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இன்று உயிரோடு இருப்பதே ‘உண்மைக்கும், நியாயத்திற்கும் மரண தண்டனை கிடைக்காமல் தடுப்பதற்குத்தான்’ என நான் கருதுகிறேன்.

பிரியங்காவின் உள்ளத்தை ஏதோ ஒன்று தொடர்ந்து உறுத்திக்கொண்டு இருக்கிறது. அந்த உறுத்தல்தான் நளினியைப் பார்க்க வேலூருக்கு அழைத்து வந்திருக்கிறது என நான் நினைக்கிறேன்.

ஒருமுறை தம்பி பிரபாகரனிடம் அலட்சியமான ஒரு பதிலை ராஜீவ் காந்தி சொன்னதைச்...

(சொல்கிறேன்)