Advertisment

நாயகன் அனுபவத் தொடர் (46) - புலவர் புலமைப்பித்தன்

dadf

அமைதிப்படை எனும் அழிவுப்படை!

விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பினார் ராஜீவ்காந்தி. புலிகள் சார்பாக டெல்லியில் ராஜீவ்காந்தியுடன் பேச்சு நடத்த எனக்கு வந்த அழைப்பை கிட்டுவிடம் தெரிவித்தேன். அவர் தம்பி பிரபாகரனுடன் தொடர்புகொண்டு சொல்ல... "அண்ணன் விரும்பினால் பேசட்டும்'’என்று சொன்னதுடன், கிட்டு மூலம் மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்தார். அதை கிட்டு குறித்துக் கொடுத்தார். "இந்த குறிப்புகள் அடிப்படையில் பேசுங்க'’ என்றார் கிட்டு. வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

Advertisment

காரில் வரும்போது... ராஜீவ்காந்தி சென்னை வந்தபோது அவரை வரவேற்ற நிகழ்வு என் நினைவுகளில் காட்சியாக விரிந்தது.

Advertisment

pp

1984-ஆம் ஆண்டு... தேர் தல் சுற்றுப் பயணத்திற்காக ராஜீவ்காந்தி தமிழகம் வந்திருந்தார். ஹெலிஹாப்டரில் வந்திறங்கிய அவரை நான், அருமை நண்பர் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகிய இரு வரும் மட்டுமே சென்று வரவேற்றோம்.

"இவர் தமிழக அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன்'’என ஆங்கிலத்தில் சொல்லி அறிமுகப்படுத்தினார். மிகுந்த அன்போடு என் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

ராஜீவ்காந்தி, நேருவின் பேரன் என்பதில் எனக்கு தனிப் பட்ட மரியாதை உண்டு. அதற் குக் காரண

அமைதிப்படை எனும் அழிவுப்படை!

விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பினார் ராஜீவ்காந்தி. புலிகள் சார்பாக டெல்லியில் ராஜீவ்காந்தியுடன் பேச்சு நடத்த எனக்கு வந்த அழைப்பை கிட்டுவிடம் தெரிவித்தேன். அவர் தம்பி பிரபாகரனுடன் தொடர்புகொண்டு சொல்ல... "அண்ணன் விரும்பினால் பேசட்டும்'’என்று சொன்னதுடன், கிட்டு மூலம் மூன்று கோரிக்கைகளையும் முன் வைத்தார். அதை கிட்டு குறித்துக் கொடுத்தார். "இந்த குறிப்புகள் அடிப்படையில் பேசுங்க'’ என்றார் கிட்டு. வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

Advertisment

காரில் வரும்போது... ராஜீவ்காந்தி சென்னை வந்தபோது அவரை வரவேற்ற நிகழ்வு என் நினைவுகளில் காட்சியாக விரிந்தது.

Advertisment

pp

1984-ஆம் ஆண்டு... தேர் தல் சுற்றுப் பயணத்திற்காக ராஜீவ்காந்தி தமிழகம் வந்திருந்தார். ஹெலிஹாப்டரில் வந்திறங்கிய அவரை நான், அருமை நண்பர் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகிய இரு வரும் மட்டுமே சென்று வரவேற்றோம்.

"இவர் தமிழக அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன்'’என ஆங்கிலத்தில் சொல்லி அறிமுகப்படுத்தினார். மிகுந்த அன்போடு என் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

ராஜீவ்காந்தி, நேருவின் பேரன் என்பதில் எனக்கு தனிப் பட்ட மரியாதை உண்டு. அதற் குக் காரணம்... நான் நேருவை பெரிதும் மதித்தேன்; நேசித் தேன். நேரு அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் மாபெரும் கவிஞராக வளர்ந்திருப்பார். அவருக்கு அப்படிப்பட்ட கவிதை உள்ளம். நாத்திகனான எனக்கு நேரு ஒரு பழுத்த நாத்திகர் என்பதால் இன்னும் அதிகமாகப் பிடித்தது. அதனால்தான் நான் நேருவை பெரிதும் நேசித்தேன்.

நேருவைப் போல உலகப் புகழின் உச்சியில் இருந்திருக்க வேண்டியவர்; கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல் தமிழ் ஈழ தேசத்துக்கு "அமைதிப் படை' என்ற பேரில் ஓர் அழிவுப் படையை ஏன் அனுப்பினார்?

என் அன்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், ஈழத்தி லிருந்து அமைதிப்படை இந்தியாவுக்கு திரும்பியபோது... முதலமைச்சர் என்கிற முறையில்கூட இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லவில்லை. வரவேற்க வேண்டியது தவிர்க்க முடியாத மரபு என்றாலும்கூட அவர் வரவேற்கச் செல்லவில்லை. சட்டமன்றத்திலேயே அதற்கான காரணத்தை வெளிப்படையாக -வேதனை யோடு பதிவு செய்தார்.

""என் தமிழ்ச் சாதியைச் சேர்ந்த ஐயாயிரம் அப்பாவி களைக் கொன்று குவித்துவிட்டு வருகின்ற இந்திய ராணுவத்தை நான் எப்படி வரவேற்க முடியும்''’என்றார்.

இத்தனைக்கும் அவர் ஈழ விடுதலையை வெளிப்படையாக ஆதரிக்கிறவர் அல்ல. விடுதலைப் புலிகளை கலைஞர் அன்றும், என்றும் ஆதரித்ததில்லை. “"நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல'’’என்று சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார். அதேபோல ஈழ விடுதலையையும் ஆதரிக்காதவர்.

இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லவில்லை என்பதிலிருந்தே இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு ஆறாத வடுவை, ரணத்தை ஏற்படுத்தி யவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நான் டெல்லிக்கு புறப்படவிருந்த நேரத்தில்... என் மனைவி தமிழரசி திடீர் என்று நோய்வாய்ப்பட்டதால் விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கவேண்டி வந்தது. அதனால் நான் நினைத்த நாளில் புறப்பட இய லாது போயிற்று. பிறகு அந்தப் பயணம் நின்று போனது. ஆயினும் ராஜீவ்காந்தி விரும்பிய புலிகள் பிரதிநிதி களுடனான சந்திப்பு வேறொரு சமயத்தில் நடந்தது.

"ஈழத்தின் மீது, தான் மேற்கொண்ட நடவடிக்கை தவறானதுதான்' என எண்ணிப் பார்க்கும் மனநிலைக்கு ராஜீவே வந்திருந்தார். அதனால்தான் 1991-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் நாள் விடுதலைப் புலிகளின் சார்பில் தூது சென்றவர்கள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அவ ரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் கள்.

இந்த சந்திப்பு குறித்த செய்தியை பிரணாப் முகர்ஜி ஆரம்பத்தில் மறுத்தார். ஆனால் "புலிகள் பிரதி நிதியை ராஜீவ்காந்தி சந்தித் தது உண்மைதான்' என்று பின்னர் உறுதி செய்யப்பட் டது. புலிகள் இயக்கத்தின் சார்பில் தூது சென்றவர் களிடம் மிகவும் சுமுக மாகவே பேசியிருக்கிறார் ராஜீவ்காந்தி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... கடந்த காலக் கசப்புகளை மாற்றும் வகையில், விடுதலைப் புலி களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாய் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இப்படியான சூழலில் ராஜீவ்காந்தியை கொலை செய்ய புலிகள் திட்டமிட் டார்கள் என்று குற்றம் சாட்டுவதை அறிவுள்ள எந்த மனிதனும் ஒப்புக்கொள்ள மாட்டான். ‘ராஜீவ் மீண்டும் பிரதமராக வந்தால், நமக்கு ஆதரவாக இருப்பார்’என்ற நம்பிக்கையோடு விடை பெற்றுச் சென்றவர்கள், இந்த கொலை பாதகச் செயலை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

Dr.Narman baker அவர்கள் எழுதிய 'Who really killed Rajiv'என்கிற கட்டுரையைப் பார்க்கலாம்.... வேலூர் சிறையில் தன்னைச் சந்தித்த ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்காவிடம் நளினி என்ன சொன்னார் என்பதையும்...

(சொல்கிறேன்)

______________

சந்தத்தில் விளையாடிய தமிழ்

puuu

அண்ணன் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்த படம் ‘"ஊரும் உறவும்'. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கி யிருந்த இந்தப் படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நான் எழுதிய பாடலை எஸ்.பி.பாலசுப்பிர மணியமும், வாணி ஜெயராமும் பாடியிருந்தனர்.

பல்லவி:

ஆண்:

புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என

பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என

வந்தாள் காவடி சிந்தாள்

பெண்:

கண்ணன் கருமுகில் குழல் குழல் குழல் என

காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என

சொன்னான் காவியக் கண்ணான்

சரணம்-1:

ஆண்:

பாவை இளமனம் சுகம் சுகம் சுகம் என

நாளை ஒரு தினம் வரும் வரும் வரும் என

பார்த்தாள் கண் பூத்தாள்

பார்த்தாள் பார்த்த கண் பூத்தாள்

பெண்:

மோகம் எனும் கனல் அணை அணை அணை என

தியாகம் எனும் புனல் மழை மழை மழை என

பொழிந்தான் தன்னை மறந்தான்

பொழிந்தான் தியாகத்தில் நனைந்தான்

ஆண்:

வெள்ளை மல்லிகைகள் சிந்தும் புன்னகையில்

விரகமும் தனிமையும் மறைத்திருந்தாள்

பெண்:

வெள்ளை மல்லிகைகள் சிந்தும் புன்னகையில்

இருவரும் உலகினை மறந்திருந்தார்

சரணம்-2:

ஆண்:

தென்றல் நடந்தது சிலு சிலு சிலு என

தேகம் குளிர்ந்தது குளு குளு குளு என

தேகம் யாத்திரை போகும்

பெண்:

கொடைக்கானலில் சிறு சிறு பனித்துளி

பன்னீர் தெளித்தது குளு குளு எனும்படி

பூவும் பஞ்சணை போடும்

இருவரும்:

அந்த வானிலவு இன்று தேனிலவு

அழகிய ஒலி மழை அமுதங்களே

(பாட்டுக் கச்சேரி தொடரும்)

nkn051220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe