எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்!
டெல்லியின் நெருக்கடியால், தனக்கு விருப்பமில்லாமலே இந்திய- இலங்கை ஒப்பந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்... மிகுந்த மன உளைச்சலோடுதான் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார். அன்று காலையில் நான் ராமாவரம் சென்று அண்ணனைச் சந்தித்துப் பேசும்போது... கண்ணீர் விட்டு அழுதார். நான் என் கைக்குட்டையால் அவரது கண்ணீரைத் துடைத்தபடியே... “ஊரோட... உலகத் தோட கண்ணீரை எல்லாம் துடைச்ச உங்கள் கண்கள்லருந்து இப்படி கண்ணீர் வரலாமா?’’எனக் கேட்டு... அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாக என் தோளோடு அவரை சாய்த்துக்கொண்டேன்.
எது பற்றியும், எந்த நாளும் கவலைப்பட்டறியாத அவரது கருணை மனம், கடைசி காலத்தில் எத்தனை சோதனைக்கும், சொல்லொண்ணாத் துன்பத்திற்கும் ஆளாகி இருந்தது என்பதனை நான் அறிவேன். இயங்கு வதற்கு சிரமப் படுத்திய நோயும், எண்ணியபடி நடக்க இயலாத அளவுக்கு நெருக்கடிகளும்... அவரின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்துக் கொண்டிருந்தன.
அவர் மட்டும் எப்போதும் போல் நல்ல உடல்நிலை யோடு இருந்திருந்தால்... டெல்லியின் எந்த நிர்ப்பந்தத்திற்கும் பணிந்திருக்க மாட்டார். இந்திய ராணுவம் ஈழ
எம்.ஜி.ஆரின் இறுதி நாட்கள்!
டெல்லியின் நெருக்கடியால், தனக்கு விருப்பமில்லாமலே இந்திய- இலங்கை ஒப்பந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்... மிகுந்த மன உளைச்சலோடுதான் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார். அன்று காலையில் நான் ராமாவரம் சென்று அண்ணனைச் சந்தித்துப் பேசும்போது... கண்ணீர் விட்டு அழுதார். நான் என் கைக்குட்டையால் அவரது கண்ணீரைத் துடைத்தபடியே... “ஊரோட... உலகத் தோட கண்ணீரை எல்லாம் துடைச்ச உங்கள் கண்கள்லருந்து இப்படி கண்ணீர் வரலாமா?’’எனக் கேட்டு... அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாக என் தோளோடு அவரை சாய்த்துக்கொண்டேன்.
எது பற்றியும், எந்த நாளும் கவலைப்பட்டறியாத அவரது கருணை மனம், கடைசி காலத்தில் எத்தனை சோதனைக்கும், சொல்லொண்ணாத் துன்பத்திற்கும் ஆளாகி இருந்தது என்பதனை நான் அறிவேன். இயங்கு வதற்கு சிரமப் படுத்திய நோயும், எண்ணியபடி நடக்க இயலாத அளவுக்கு நெருக்கடிகளும்... அவரின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்துக் கொண்டிருந்தன.
அவர் மட்டும் எப்போதும் போல் நல்ல உடல்நிலை யோடு இருந்திருந்தால்... டெல்லியின் எந்த நிர்ப்பந்தத்திற்கும் பணிந்திருக்க மாட்டார். இந்திய ராணுவம் ஈழத்தில் நடத்திய கோரத் தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்கமாட்டார்.
ஈழ விடுதலையில் அவர் மிகுந்த ஆர்வமுடன் இருந்ததால்தான்... 1987 ஜூலை 29-ஆம் நாள் இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையொப்பமானபோதே... “உங்கள் எம்.ஜி.ஆரை, எங்கள் நாட்டு விஷயத்தில் தலையிட வேண்டாமென்று சொல்லி வையுங்கள். அவர் வேலையை அவர் பார்த்தால் போதும்’’என்று பண்ருட்டி ராமச்சந்திர னிடம் ஜெயவர்த்தனே சொன்னார். இதை தனது My Presidential Years என்ற புத்தகத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வி. (ஆர்.வெங்கட்ராமன்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்.
ஜெயவர்த்தனாவின் மூர்க்கத்தனமான சிங்கள அரசு, தமிழ்ச் சமுதாயத்தை முற்றிலுமாக அழிக்க நினைத்தது; முடியாமல் போனது. இனி என்ன செய்வது?’என கை பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தியா, ஈழ மண்ணில் காலடி எடுத்து வைத்தது. அதற்காக ஜெய வர்த்தனா சிந்தை குளிரக் குளிர சிரித்துக்கொண்டே இந்தியப் பிரதமரை இருகரம் நீட்டி வரவேற்றார்.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை தயாரித்து வைத்து இருவரும் கையெழுத்துப் போட்டார்கள்.
அப்பாடா... நம்மால்தான் விடுதலைப் புலிகளை அடக்க முடியவில்லை... அழிக்க முடியவில்லை... இந்தியாவாவது அந்தப் புண்ணிய காரியத்தைச் செய்து முடிக்கட்டும்’ என்று நினைத்து நினைத்து நெஞ்சம் குளிர்ந்தார்.
இலங்கை ராணுவம் செய்ய வேண்டிய வேலை இந்திய ராணுவம் முந்திக்கொண்டு செய்ய வருகிறபோது... அந்தச் சிரிக்கின்ற நரிக்கு சிந்தை குளிராமலா இருக்கும்! இலங்கை விரித்த வலையில் இந்தியா விழுந்தது.
"ஈழ தேசம் என்னும் ஏழை மக்களின் பூமியைச் சூறையாடியது இந்தியா' என்கிற அவப் பெயர்தான் மிச்சம் ஆனது!
வியட்நாமில் அமெரிக்கா நடத்திய மனித வேட்டைக்கும், இங்கே நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கும் கொஞ்சமும் குறையாத கோரத் தாண்டவத்தைத்தான் இந்தியா நடத்தி விட்டு வந்தது என்பதை அறியலாம். கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி தேசம், ஈழத்தில் ரத்த வெள்ளம் வழிந்தோட வைத்ததில் என்ன லாபம்? இது பாரத மாதாவுக்கு பெருமை சேர்க்கிற காரியமா?
இளைஞர்கள், வயோதிகர்கள், குழந்தைகள், தாய்மார்கள்... இப்படி பேத மில்லாமல் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். எங்கள் குலப் பெண்கள்... கற்பை உயிரினும் மேலாகக் கருதுகின்ற... எங்கள் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டார்கள்.
வாய்பேச முடியாத நிலையிலும் கூட... பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர் கள், பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கற்பழிப்புக் கொடுமைகளைக் குறிப்பிட்டு கண்ணீர் வடித்தார்.
ராணுவம் ஒரு நாட்டுக்குள்ளே போகிறபோது சாதாரணமாக நடக்கிற விஷயம்தான். நீங்கள் எதற்காக அர்த்த மில்லாமல் ‘கற்பு கற்பு’ என்று கதறு கிறீர்கள்’என்று அலட்சியமாகப் பதிலளித்தார் ராஜீவ்.
ஒருவேளை... வடக்கே பிறந்து, மேலை நாட்டிலே படித்து, மேலை நாட்டுப் பண்பாட்டிலே வளர்ந்து, மேலேயே பறந்து கொண்டிருந்த ராஜீவுக்கு இந்த கற்பு விஷயங்கள் எல்லாம் பைத்தியக் காரத்தனமாகத் தெரியலாம். ஆனால் நமக்கு? நம் தமிழ்ச் சமுதாயத்துக்கு அப்படி இல்லையே.
நான் முன்னரே சொன்னதுபோல புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆர்., தமிழனாய்ப் பிறக்கவில்லை. ஆனால் இந்தத் தமிழ் இனம் தன் தலைப் பிள்ளையாக அவரை தத்தெடுத்துக் கொண்டது.
ஈழ விடுதலைப் போராளிகளோடு போராளியாக அவர் இறுதிவரை வாழ்ந்தார். உள்ளத்தால் ஈழத்துக்காகப் போராடினார். உடலால் நோயோடு போராடினார். அந்தப் புரட்சித்தலைவரின் இறுதி நாட்கள் போராட்டமாகவே முடிந்து போயின. தமிழ் ஈழ தேசம் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் அவரை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும்.
ஆம்... எம்.ஜி.ஆர்., உண்மையான தமிழ்த் தலைவர், தமிழினத் தலைவர். உலகத் தமிழர்கள் எல்லோர்க்கும் ஒரே தலைவர். இது உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை!
விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி சில அரிய தகவல்களையும், புலிகளுடன் பேச ராஜீவ் காந்தி என்னை தேர்வு செய்ததையும்....
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்
___________
உலகமெங்கும் நமது ஆட்சி!
பிரபு, கௌதமி நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இளையராஜா இசைத்த "ராஜா கைய வச்சா'’ படத்திற்காக நான் எழுதிய டூயட். ராஜாவின் மெட்டும், சித்ரா, கே.ஜே.யேசுதாஸ் ஆகியோரின் குரலும் மழையடிக்கச் செய்யும். இதோ...
பல்லவி:
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா...
மானே உன் மாராப்பிலே ஹோய்...
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா...
மன்னா உன் பேர் அன்பிலே
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே
சரணம்-1:
இரவும் இல்லை பகலும் இல்லை
இணைந்த கையில் பிரிவும் இல்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா...
சரணம்-2:
கடந்த காலம் மறந்து போவோம்
கரங்கள் சேர்த்து நடந்து போவோம்
உலகமெங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகமெங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா...
(பாட்டுக்கச்சேரி தொடரும்)