Advertisment

நாயகன் அனுபவத் தொடர் (41) - புலவர் புலமைப்பித்தன்

mgr

புலிகளுக்கு உதவிய புரட்சித் தலைவர்!

1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் நாள்....

என் மகன் புகழேந்தி ஒரு விபத்தில் சிக்க, கோயம்புத்தூர் கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. கோமா நிலையில் நினைவு தப்பி, படுத்த படுக்கையாக இருந்தான். பத்து மாத காலம் சிகிச்சை செய்யப்பட்டநிலையில்... எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில்... ஒருநாள் அதிசயமாக கண் விழித்தான்.

Advertisment

mgr

அன்று நவம்பர் 26-ஆம் நாள். காலையிலேயே மருத்துவமனைக்குச் சென்றேன். என் மகன் காதில் மிகச்சத்தமாக “புகழ்... "இன்னிக்கி தம்பிச் சித்தப்பா பிறந்தநாள்'’என்று கூறினேன்.

Advertisment

அப்படி நான் உரக்கச் சொன்னதும், தூக்கம் கலைந்து துள்ளி எழுவதுபோல கண்களை அகலத் திறந்து, அங்கும் இங்கும் பார்த்தான். வாயைத் திறந்து ஏதோ முனக ஆரம்பித்தான். என் கண்களில் இன்பக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

ஏறத்தாழ செத்துப் போனதுபோல் கிடந்தவன் “"தம்பிச் சித்தப்பாவோட பிறந்தநாள்'’’ என்று சொன்னதும்... ‘"தம்பி’ ‘சித்தப்பா'’ என்கிற குரல் கேட்டு புத்துயிர் பெற்று எழுவதுபோல் எழுந்தான் என்றால்... அவன் பிரபாகரன் மீது, அவனுடைய தம்பிச் சித்தப்பா மீது வைத்திருந்த பாசம்தானே.

இதைக் கேள்விப்பட்ட என் மனைவி, எ

புலிகளுக்கு உதவிய புரட்சித் தலைவர்!

1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் நாள்....

என் மகன் புகழேந்தி ஒரு விபத்தில் சிக்க, கோயம்புத்தூர் கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. கோமா நிலையில் நினைவு தப்பி, படுத்த படுக்கையாக இருந்தான். பத்து மாத காலம் சிகிச்சை செய்யப்பட்டநிலையில்... எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில்... ஒருநாள் அதிசயமாக கண் விழித்தான்.

Advertisment

mgr

அன்று நவம்பர் 26-ஆம் நாள். காலையிலேயே மருத்துவமனைக்குச் சென்றேன். என் மகன் காதில் மிகச்சத்தமாக “புகழ்... "இன்னிக்கி தம்பிச் சித்தப்பா பிறந்தநாள்'’என்று கூறினேன்.

Advertisment

அப்படி நான் உரக்கச் சொன்னதும், தூக்கம் கலைந்து துள்ளி எழுவதுபோல கண்களை அகலத் திறந்து, அங்கும் இங்கும் பார்த்தான். வாயைத் திறந்து ஏதோ முனக ஆரம்பித்தான். என் கண்களில் இன்பக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

ஏறத்தாழ செத்துப் போனதுபோல் கிடந்தவன் “"தம்பிச் சித்தப்பாவோட பிறந்தநாள்'’’ என்று சொன்னதும்... ‘"தம்பி’ ‘சித்தப்பா'’ என்கிற குரல் கேட்டு புத்துயிர் பெற்று எழுவதுபோல் எழுந்தான் என்றால்... அவன் பிரபாகரன் மீது, அவனுடைய தம்பிச் சித்தப்பா மீது வைத்திருந்த பாசம்தானே.

இதைக் கேள்விப்பட்ட என் மனைவி, என் உறவினர்கள் எல்லாரும் மருத்துவமனைக்கு வந்து அவனைப் பார்த்து கண்களில் கண்ணீர் மல்க நின்று, மகிழ்ச்சி அடைந்தனர். அன்று முழுவதும் அந்த நிலையே நீடித்தது. ‘""எங்கள் மகன் மீண்டும் எங்களுடன் வந்துவிடுவான்''’என்கிற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தியது. உண்மையில் அந்தநாள் எங்களுக்கு ஒரு திருவிழா நாள்போல தெரிந்தது. ஆனால்... புகழுக்கு மீண்டும் நினைவு தவறிப்போனது... தவறியும் திரும்பவில்லை நினைவு.

1996-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் நாள்... நிரந்தரமாக தன் கண்களை அவன் சாத்திக்கொண்டான்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...

தம்பி பிரபாகரனிடம் “""சித்தப்பா நீங்க உங்கள் நாட்டுக்கு போகும்போது என்னையும் கூட்டிப்போங்க, நானும் போர் செய்யணும்''’என மகன் புகழேந்தி சொன்னான். "அவன் நினைத்தபடி தம்பியோடு புறப்பட்டுப்போய் களத்தில் நின்று என் மகன் இறந்து போயிருந்தால்... வீர மரணமாவது வாய்த்திருக்கும். அந்தப் பெருமை நிலைத்திருக்கும். ஆனால் விபத்திலல்லவா இறந்துபோனான்...' என்றுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.

எங்கள் மகள் கண்ணகியும், மகன் புகழேந்தியும் இல்லாத வெறுமையை புகழேந்தியின் மகனான எங்கள் பேரன் தம்பி என்கிற திலீபன் போக்கிவருகிறான்.

நான் தம்பி பிரபாகரனை முதன்முதலாகச் சந்தித்த போது என் வயது 46. இன்று என் வயது 86. போனஸ் நாட்களை வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கோலா கலமாக இருந்த... எப்போதும் கூட்டம் கூட்டமாக இருந்த... எங்கள் வீட்டில் இன்று நான், என் மனைவி தமிழரசி, பேரன் தம்பி எனும் திலீபன் ஆகிய மூன்றுபேர் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏதோ... போன ஜென்மம் என்று ஒன்று இருந்து, இந்த ஜென்மத்தின் வழியே அதைப் பார்ப்பதுபோல் எல்லாம் என் கண்முன்னே நிழலாடுகின்றன.

"நான் நிச்சயம் விடுதலைப் புலிகளுக்கு உதவுவேன்'’’ என என்னிடம் சொன்னது போலவே... தம்பியை அழைத்துப் பேசினார். ஏராளமான பண உதவிகள் செய்தார் முதல்வர் புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆர்.

தம்பி மீது எனக்கிருந்த அன்பைக் காட்டிலும், மதிப்பைக் காட்டிலும் புரட்சித்தலைவருக்கு அன்பும், மதிப்பும் வளர்ந்தன. என்னைக் காட்டிலும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக அவர் மாறிப்போனார்.

புலிகளுக்கு என்னுடைய ஆதரவு என்பது தார்மீக அடிப்படையிலானது. ஆனால் அவருடைய ஆதரவு அப்படியல்லவே. அவரால் ஆயுதவழிப் போருக்கான எல்லா உதவிகளையும் செய்யமுடியும். அதை அவர் வஞ்சகமில்லாமல் மனமார்ந்த ஈடுபாட்டுடன் செய்தார்.

ஈழம் விடுதலை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டதுடன்... தன்னுடைய காலத்தி லேயே விடுதலை பெறுவார்கள் என்று நம்பினார் புரட்சித்தலைவர்.

"இந்த தமிழ்ச் சமுதாயம் உலகத்தில் தோன்றிய நாள்தொட்டு, தம்பியைப் போன்ற ஒரு போராளியை கண்டிருக்காது'’’ என்று ஒரு கட்டத்தில் மிகவும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.

நாயகன் தொடரில் அத்தியாயம் 32-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள அண்ணன் எம்.ஜி.ஆர். மறுத்ததைச் சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

அதுபற்றிப் பார்க்கலாம்...

இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றி நட்வர்சிங் முதன்முதலாக எம்.ஜி.ஆரிடம் சொன்னபோதே... “"நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்'’என்றுதான் சொன்னார். ஆனால்அவர் மிகுந்த நோயால் பீடிக்கப்பட்டு, செயல்பட முடியாமல் நின்ற நிலையில்... டெல்லியின் நெருக்கடிக்கு இசைந்துபோக வேண்டியிருந்தது.

அமைதிப்படை தமிழ்ஈழ மண்ணுக்குச் சென்றபின்னர், அங்கு நடந்த நிகழ்வுகளைக் கண்டபின்னர் அவர் எந்த அளவுக்கு வேதனைப்பட்டார் என்பதை நான் நன்றாக அறிவேன்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 29-ஆம் நாள் கையொப்பமானது. ஆகஸ்ட் திங்கள் 2-ஆம் நாள் அந்த ஒப்பந்தத்திற்கான பாராட்டு விழா சென்னையில் ஏற்பாடானது. அந்த விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். நினைத்தார். அதற்கேற்ப அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். விழாவில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் கலந்துகொள்ள ஏற்பாடானது. விளம்பரச் சுவரொட்டிகளும் தயாராக இருந்தன.

புரட்சித்தலைவர் கண்கலங்க... நான் எனது கைக்குட்டையால் துடைத்துவிட்டதைச்....

(சொல்கிறேன்)

__________________

ரகசிய பூஜை... இதழ்மணி ஓசை!

nnnd

டைரக்டர் துரை இயக்கித் தயாரித்த படம் ‘"ஒரு வீடு ஒரு உலகம்.' ஷோபா, டெல்லி கணேஷ், விஜய்பாபு நடித்த இந்தப் படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒரு பாடலை எழுதினேன். டி.எல்.மகாராஜன், சசிரேகா பாடிய அந்த இனிமையான பாடல்...

பல்லவி:

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை

ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை

ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை

நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை

சரணம்-1:

ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடிவரும்

கோலம் கொண்டதென்ன

தேவாரப்பாட்டு நீ பாடக்கேட்டு

மயங்கி நின்றதென்ன சொல்லு

திருமண மேடையில் நாதஸ்வரம்

இருமன மேடையில் நாளும் சுகம்

சரணம்-2:

நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென

பாடிடும் தென்றல் காற்று

என் காதல் தேவி பல்லாண்டு வாழி

இதுவும் தென்றல் சொன்ன பாட்டு

இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே

இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே

(பாட்டுக்கச்சேரி தொடரும்)

nkn181120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe