Advertisment

நாயகன் அனுபவத் தொடர் (37) - புலவர் புலமைப்பித்தன்

dd

என் வீட்டில் ஈழப் போராளிகள்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களோடு 22 ஆண்டு காலம் மிக நெருக்கமாக இருந்தவன் நான். அவர் முதல்வராக இருந்த 10 ஆண்டு காலத்தில் நான் 9 ஆண்டு காலம் அரசாங்க பதவியில் இருந்திருக்கிறேன். 6 ஆண்டு காலம் ‘மேல்-சபை உறுப்பினர்’ மற்றும் "மேல்-சபை துணைத் தலைவர்'’பதவி களிலும், 3 ஆண்டு காலம் ‘அரசவைக் கவிஞர்’ பதவியிலும் இருந்திருக்கிறேன்.

Advertisment

ஒரு அரசியல் வாதி... அதுவும் இந்தக்கால அரசியல் வாதி, இப்படி 9 ஆண்டு காலம் அரச பதவியில் இருந்திருந்தால்... அதிலும் என்னைப்போல முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்திருந்தால்... பத்துத் தலைமுறைக்கு சொத்துச் சேர்த்திருப்பான். பதவிக்கு மேல் பதவி... பணத்துக்கு மேல் பணம்... என்று தேடிக் கொண்டிருப்பான்.

ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. இருந்த எல்லாவற்றையும் இழந்தேன்.

dss

காரணம்...

1980-ஆம் ஆண்டு தொடங்கி, 1987-ஆம் ஆண்டு முடிகின்ற வரை... ஏன் அதற்குப் பின்னும், நான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தோள் கொடுத்து நின்றேன். என் சக்திக்கு ஏற்ற வகையில் என்னால் எது எது எல்லாம் இயலுமோ... அதையெல்லாம் அவர்களுக்குச் செய்தேன்.

Advertisment

அந்த விஷயத்தில் நான் மன்னன் வரகுணபாண்டியன் போன்றவன். அப்படியென்ன அந்த மன்னனின் விசேஷம்?

வரகுணபாண்டியன் தமிழ்நாட்டு வரலாற்றில் வரும் ஒரு மன்னன். அவன் சிவபக்தன். அதிலும் கண்மூடித்தனமான சிவபக்தன். ஒரு சலவை

என் வீட்டில் ஈழப் போராளிகள்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களோடு 22 ஆண்டு காலம் மிக நெருக்கமாக இருந்தவன் நான். அவர் முதல்வராக இருந்த 10 ஆண்டு காலத்தில் நான் 9 ஆண்டு காலம் அரசாங்க பதவியில் இருந்திருக்கிறேன். 6 ஆண்டு காலம் ‘மேல்-சபை உறுப்பினர்’ மற்றும் "மேல்-சபை துணைத் தலைவர்'’பதவி களிலும், 3 ஆண்டு காலம் ‘அரசவைக் கவிஞர்’ பதவியிலும் இருந்திருக்கிறேன்.

Advertisment

ஒரு அரசியல் வாதி... அதுவும் இந்தக்கால அரசியல் வாதி, இப்படி 9 ஆண்டு காலம் அரச பதவியில் இருந்திருந்தால்... அதிலும் என்னைப்போல முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்திருந்தால்... பத்துத் தலைமுறைக்கு சொத்துச் சேர்த்திருப்பான். பதவிக்கு மேல் பதவி... பணத்துக்கு மேல் பணம்... என்று தேடிக் கொண்டிருப்பான்.

ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. இருந்த எல்லாவற்றையும் இழந்தேன்.

dss

காரணம்...

1980-ஆம் ஆண்டு தொடங்கி, 1987-ஆம் ஆண்டு முடிகின்ற வரை... ஏன் அதற்குப் பின்னும், நான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தோள் கொடுத்து நின்றேன். என் சக்திக்கு ஏற்ற வகையில் என்னால் எது எது எல்லாம் இயலுமோ... அதையெல்லாம் அவர்களுக்குச் செய்தேன்.

Advertisment

அந்த விஷயத்தில் நான் மன்னன் வரகுணபாண்டியன் போன்றவன். அப்படியென்ன அந்த மன்னனின் விசேஷம்?

வரகுணபாண்டியன் தமிழ்நாட்டு வரலாற்றில் வரும் ஒரு மன்னன். அவன் சிவபக்தன். அதிலும் கண்மூடித்தனமான சிவபக்தன். ஒரு சலவைத் தொழி லாளி துணி துவைத்துவிட்டு, உடம்பெல்லாம் வெள்ளை பூத்து... வெளிறிப்போய் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்த வரகுணபாண்டியன் “இவர் ஒரு சிவனடியார், உடம்பெல்லாம் திருநீறு பூசி வருகிறார்’என்று நினைத்து, அந்தச் சலவைத் தொழிலாளின் காலில் விழுந்து வணங்கினான்.

அது நல்ல மழைக்காலம். ஏரி குளங்களில் நீர் நிறைந்திருந்ததால்... அந்த நீர் நிலைகளில் தவளைகள் ‘கர கர’வென்று சத்தம் போட்டன. அதை கேட்ட வரகுணபாண்டியன் “சிவபிரானை "அர கர' என்று வாழ்த்தி வழிபடுகின்றன இந்தத் தவளைகள்’என எண்ணி... காசும், பொன்னும் கலந்து தூவினானாம் நீர் நிலைகளில்.

ஒருவகையில் நான் அந்த வரகுணபாண்டியன் போன்ற வன்தான்!

ddd

ஈழப் போராளிகள் என்று பேர் சொன்னால் போதும்... நான் அவர்களை வணங்கி வரவேற்றேன். அவர் யார்? எவர்? என்று கூட ஆராய்ந்து பார்க்கவில்லை.

அப்படி வந்தவர்களில் முதலில் வந்தவர் உமா மகேஸ்வரன் (முகுந்தன்). என் வீடு தேடி அவர் வந்ததை நான் பெரிய பேறாகக் கூடக் கருதிக் கொண்டேன். உமா மகேஸ்வரன் தன் குழுவைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், சிவநேசன் ஆகியோரோடு வருவார்.

வருகிற அனைவரையும் வரவேற்றேன். எந்தநேரமும் அவர்கள் என் வீட்டிற்கு வரலாம். வந்தவர்களை என் மனைவி தமிழரசி இன்முகத்தோடு வரவேற்று உணவளிப்பார்.

பொதுவாழ்வில் ஈடுபடுகின்றவருக்கு ஒரு நல்ல மனைவி வாய்க்க வேண்டும். எனக்கு வாய்த்த மனைவி தமிழரசி, நான் ஈழ விடுதலைப் போராளிகளோடு பழகிய காலங்களில் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார். எந்த நேரம் யார் வந்தாலும், அவரவருக்குப் பிடித்த உணவை என் மனைவி அன்போடு பரிமாறி, பசியாற்றி அனுப்பினார். யார் யாருக்கு என்ன உணவு பிடிக்கும் என்பது அவ்வளவு அத்துபடி.

என் வீட்டிற்கு விருந்தாளிகளாய்... உறவினர்களாய் வந்த போராளிகள் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவு என்ன என்பதைச் சொன்னாலே... மிகவும் ருசியாக இருக்கும். அதைப்பற்றிச்....

(சொல்கிறேன்)

_____________

சிவன் பாட்டும் சினிமா பாட்டும்

திருவெம்பாவை- திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாடல்.

கூவின பூங்குயில் / கூவின கோழி / குருகுகள் இயம்பின / இயம்பின சங்கம் / ஓவின தாரகை / ஒளி, ஒளி உதயத்(து) / ஒருப்படு கின்றது / விருப்பொடு நமக்குத் / தேவ! நற் செறிகழற் /றாளிணை காட்டாய்! / திருப்பெருங் துறையுறை / சிவபெரு மானே! / யாவரும் அறிவரி / யாய்! எமக் கெளியாய்! / எம்பெரு மான்!பள்ளி / எழுந்தருளாயே!

ppp

இந்தப் பாடலின் பொருள்...

திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானே... பூங்குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. தேவனே, வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் எமக்கு விருப்பமுடன் காட்டுவாயாக. எம்பெருமான்... பள்ளி எழுந்தருள்வாயாக...’’

பக்தி என்கிற காதலுடன் சொல்லப்பட்ட திருப்பள்ளி யெழுச்சியை, காதல் தலைவி, தன் காதல் தலைவனை எழுப்ப இப்பள்ளியெழுச்சியைப் பாடுவதான கற்பனையும்... கூடவே தங்களின் வாழ்க்கை குறித்த ஆசையைப் பாடுவதாகவும் நான் எழுதிய பாடல் ஒன்று... எல்லோருக்குமே பிடித்த பாடலாக இருந்தது... இருக்கும்.

முன்பு இரட்டை இயக்குநர்களாக பணியாற்றிய பாரதி-வாசு (சந்தான பாரதி- பி.வாசு) இயக்கத்தில், வசந்த்- பானுப்ரியா ஆகியோர் அறிமுகமான "மெல்லப் பேசுங்கள்' படத்தில், இளையராஜா இசையில், உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி குரல்களில் அமைந்த அந்தப் பாடலைக் கேளுங்கள். மனம் சுகமாக இருக்கும்.

தொகையறா: பெண்:

கூவின பூங்குயில் / கூவின கோழி

குருகுகள் இயம்பின / இயம்பின சங்கம்

யாவரும் அறிவரியார் / எமக்கெளியாய்

எம்பெருமான் பள்ளி / எழுந்தருளாயே

பல்லவி:

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி

கொஞ்சும் கொஞ்சும்

நித்தம் நித்தம் தித்திப்பு

முத்தம் முத்தம்

சரணம்-1: ஆண் :

வானவில்லில் அமைப்போம் தோரணம்

வண்டு வந்து இசைக்கும் நாயணம்

பெண்:

தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து

தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து

ஆண்:

காதல் மனம் காண்போம்

எண்ணம்போல் இன்பத்தின்

வண்ணங்கள்…ஆஅ….

சரணம்-2:

பெண்:

அந்தி வந்து மலரும் தாமரை

அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை

ஆண்:

கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி

ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

பெண்:

நாளை வரும் காலம்

என்றென்றும் எங்களின் கைகளில்...

(பாட்டுக்கச்சேரி தொடரும்)

____________

நடந்தது இதுதான்! விவரிக்கும் பால்ராஜ்!

"சாதிக்கொடுமை! காலில் விழுந்து கும்பிடு!' என்ற தலைப்பில் கடந்த அக் 17-20 நாளிட்ட நக்கீரனில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பக்கமுள்ள ஓலைக்குளத்தில் நடந்தவை பற்றி வெளிப்படுத்தியிருந்தோம்.

பாதிக்கப்பட்ட ஓலைக்குளம் பால்ராஜ் தனது வழக்கறிஞர் அதிசயகுமார் மூலம் நம்மிடம் பேசினார். ""நான் அவர்களின் ஆடு ஒன்றைத் திருடியதால்தான் தண்டனையாக என்னை அப்படி காலில் விழுந்து கும்பிடச் சொன்னார்கள் என்று செய்தி வந்தது என்னைப் பாதித்ததோடு மன உளைச்சலை உண்டாக்கிடிச்சி. சிவசங்கு ஆடு களோடு மேஞ்ச என் ஆட்டுக்குட்டி ஒன்னு அவுக ஆடுகளுக்குள்ள போயிறுச்சி. அப்ப நா போயி குட்டியப் புடிக்க ஆட்டக் கலைச்சப்ப.. ஓடி வந்த சிவசங்கு சத்தம் போட்டாரு... என்னயக் கம்பால அடிச்சாரு. வலி பொறுக்கமுடிய மாட்டாம நா கம்பப் புடிச்சிட்டேன். பக்கத்தில் செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டிருந்த இன்னொரு ஆளு ஓடியாந்து, வெலக்கிவிட்டாரு. பக்கத்துல வேலை பாத்திட்டிருந்த சிவசங்கோட மக அங்கே வந்ததோட, அவங்க ஆளுங்க 7 பேரை வரவச்சி, என்னைய அடிச்சி, கால்ல விழுந்து கும்பிடுலன்னு அரட்டுனாக. அடி தாங்க முடியாமத்தான் நான் கால்ல விழுந்தேன். ஸ்டேஷன்ல சொல்லக் கூடாதுன்னும் மெரட்டுனாக. நான் 95 ஆடுக வச்சிறுக்கேன். நான் எதுக்கு ஆடு களவாங்கணும். அப்படிப்பட்ட குடும்பத்தில நான் பொறக்கல'' என்றார் பால்ராஜ்.

-பரமசிவன்

nkn041120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe