Advertisment

எல்லா கட்சிகளுக்கும் மாமூல்! -கிறிஸ்டி குமாரசாமி வாக்குமூலம்!

christy

த்திய பிரதேசத்திலிருந்து பெங்களூரு கொண்டு வரப்பட்டு, வருமானவரித்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் குமாரசாமி கிறிஸ்டி கொடுத்த வாக்குமூலம் பற்றி பகிர்ந்து கொண்டனர் வருமானவரித்துறையினர்.

Advertisment

""தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் என 5 நாட்கள் நடந்த சோதனை ஆவணங்களை ஆராய்ந்தபோது கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் குமாரசாமி. அவரோ, "நீங்கள்

த்திய பிரதேசத்திலிருந்து பெங்களூரு கொண்டு வரப்பட்டு, வருமானவரித்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் குமாரசாமி கிறிஸ்டி கொடுத்த வாக்குமூலம் பற்றி பகிர்ந்து கொண்டனர் வருமானவரித்துறையினர்.

Advertisment

""தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் என 5 நாட்கள் நடந்த சோதனை ஆவணங்களை ஆராய்ந்தபோது கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் குமாரசாமி. அவரோ, "நீங்கள் காட்டும் சொத்து ஆவணங்களுக்கு என்னால் கணக்கு காட்ட முடியாது. ஒப்புக்கொள்கிறேன். உங்கள் பாணியில் சொல்லணும்னா, வரி ஏய்ப்பு செய்திருக்கிறேன். எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதுன்னு நீங்க சொல்றீங்களோ, அதற்கு எவ்வளவு ஃபைன் கட்டச்சொன்னாலும் கட்டுகிறேன். சிங்கிள் பேமண்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கட்டிவிடுகிறேன்' என கம்மிய குரலில் சொல்ல அதிகாரிகளுக்கே மிரட்சி.

Advertisment

christy

குமாரசாமியின் நேரடி-பினாமி நிறுவனங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.. வங்கிக் கணக்குகளும் லாக்கர்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க, "சிங்கிள் பேமண்டில் எப்படி கட்டமுடியும்? எங்களுக்கே தெரியாத எந்தெந்த பெயர்களில் நிறுவனங்களை நடத்தியிருக்கிறீர்கள்?' என மிரட்சியுடன் கேள்வி எழுப்பினோம்..

அதற்கு அவர், "தொழில் துவங்கிய வருடங்களில் ஆளும் கட்சியை மட்டுமே கவனித்து வந்த நான், கடந்த 15 வருடங்களாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலுமுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மட்டுமல்ல பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாமூல் தவணை கணக்கிட்டு வருடத்துக்கு 4 முறை கப்பம் கொடுத்து வருகிறேன். அதனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஃபோன் பண்ணி னால் போதும். 24 மணி நேரத்தில் தேவையான பணத்தைப் புரட்டிவிட முடியும்' என்றார்.

தன்னிடம் பணம் வாங்கிய அரசியல்வாதிகளின் பெயர்களையும் தயக்கமே இல்லாமல் ஒப்புவித்த குமாரசாமி, "நீங்கள் நீட்டும் பேப்பர்களில் கையெழுத்துப்போடுகிறேன். என்னிடமிருந்து என்ன வாக்குமூலம் வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளுங்கள். ஆனா, ஒரே ஒரு ரெக்யூஸ்ட்! வெளிநாட்டில் இருக்கும் முதலீடுகளை மட்டும் விட்டுவிடுங்கள். அவை அனைத்தும் என் குழந்தைகளுக்காக முறையாக வரி கட்டி சேமித்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள்' என்றவரிடம் நாங்கள் பேசப் பேச எங்களுக்கே தெரியாத ஏகப்பட்ட ரகசியங்கள் அம்பலமாகிறது'' என்று விவரிக்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.

-இளையர்

nkn17.07.2018
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe