மிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், தற்போது தேர்தல் கமிஷன் செய்துவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, விபுல்பான் சோலி அடங்கிய அமர்வில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, செவ்வாய்கிழமை விசா ரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மம்தா பானர்ஜியே வழக்கறிஞராக வாதாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

தலைமை நீதிபதி சூரியகாந்த் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வின் முன் வாதாட மம்தா கேட்டது ஐந்து நிமிடம், நீதிபதிகள் 15 நிமிடங்கள் வழங்கினார்கள்.

Advertisment

"ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்! தேர்தல் கமிஷன் ஆட்சியாளர்களின் அடியாட்களாக மாறியுள்ளார்கள். நம் வழக்கறிஞர்கள் நீதிக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். அது கிடைக்கவில்லையென்றால், நீதி பின்புறமாக அழுதுகொண்டிருக்கும்'' என்று கர்ஜனையுடன்  வாதத்தை துவங்கினார். "கடந்த மூன்று மாதங்களாக, ஆறுமுறை கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் எஸ்.ஐ.ஆரின் சிக்கல்களை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளேன். நான் ஒரு முதல்வராக இருந்தபோதும் ஒரு கடிதத்திற்கு கூட பதிலளிக்கவில்லை. 

அமலாக்கத்துறையை அனுப்பி எங்கள் தேர்தல் அலுவலகத்திலிருந்து கோப்புகள் திருடப்படுகிறது, தேர்தல் கேண்டிடேட்களின் பட்டியல்களை தூக்கிச் செல்கிறார்கள், அவர்களுடன் நான் போராடவேண்டி யுள்ளது. தேர்தல் ஆணையம் என்ற பெயரில் அங்குள்ள பி.எல்.ஓ.க்களை வைத்து, எங்களுக்கு காலங்காலமாக ஓட்டு போட்டவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குகின்றார்கள். ஆதார் அடையாள அட்டையை ஏற்க மறுப்பதன் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் மீறுகிறது. மேற்கு வங்கம் மட்டும் குறிவைக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறது'' என வாதிட்டார்.  

Advertisment

அதோடு, "மேற்கு வங்கத்தில் 57 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. எல்.கே. அத்வானி பாகிஸ்தானில் பிறந்தவர்தானே? அவருடைய குடும்பத்திற்கு எப்படி வாக்குரிமை இருக்கிறது? பிரதமர் மோடிக்கு சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக இருக் கிறதா? அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் இல்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் நடைமுறைப்படுத்துவது ஏன்?'' என்று பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டு அசரடித்தார்.

மம்தா பானர்ஜி அரசியலுக்கு வரும் முன் கொல்கத்தாவில் உள்ள யோகேஷ் சந்திரா சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட் டத்தை பயின்றவர். அங்கு வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து, ஒரு முதல்வரே நேரடியாக ஆஜராகி வாதாடி யிருப்பது இந்திய ஜனநாயகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.