ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய மம்தா மந்திரிகள்! கொடநாடு கொலையாளிகள் சிக்குவார்களா?-ஒரு பத்திரிகையாளரின் தொடர் போராட்டம்!

n

ரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் புலனாய்வு முயற்சி, ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ளது. அவர்தான் மேத்யூ சாமுவேல். நாரதா ஸ்டிங் ஆபரேஷன் (ரகசிய ஒளிப்பதிவு) என்கிற பெயரில் மேற்குவங்கத்தில் மேத்யூ சாமுவேல் 2014-ஆம் ஆண்டு நடத்திய ஆபரேஷன் அடிப்படையில் கடந்த திங்களன்று திரிணாமுல் காங்கிரஸின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ., ஒரு முன்னாள் மேயர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே மேத்யூ சாமுவேல், தமிழகத்தில் வெளிக்கொணர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு கொலை வழக்கு, இதனால் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

m

2014-ஆம் ஆண்டு மேத்யூ சாமுவேல், "இம்பெக்ஸ் கன்சல்டன்ஸி சர்வீஸ்' என்கிற கம்பெனியை போலியாக உருவாக்கினார். தமிழக அரசியல்வாதி ஒருவரின் ஊழல் பணத்தை மேற்குவங்கத்தில் முதலீடு செய்யப்போவதாகக் கூறி, மேற்கு வங்க வி.ஐ.பி.க்கள் அனைவரையும் அவர் சந்திக்கிறார். அப்பொழுது அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதன் முக்கிய தலைவர்கள் என அனைவரிடமும் இந்தக் கம்பெனிக்கு உதவி கேட்டு அவர் அணுகுகிறார். அவர்கள் அனைவரும் மேத்யூவிடம் அதற்காகப் பணம் பெற்றுக்கொள்கிறார்கள். அதை அவர் தனது உதவியாளர் ஆப்ரகாம் முலம் ரகசிய கேமரா உதவியுடன் படம் பிடிக்கிறார்.

m

மொத்தம் 52 மணி நேரம் நீளும் இந்தக் காட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களாக இருந்த முகுல்ராய், சௌகாத்தராய், கக்கோலி கோஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்தவரும், தற்பொழுது பா.ஜ.வில் சேர்ந்து மம்தாவைவை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்து மேற்குவங்க சட்டமன்றத்தில் பா.ஜ.

ரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் புலனாய்வு முயற்சி, ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ளது. அவர்தான் மேத்யூ சாமுவேல். நாரதா ஸ்டிங் ஆபரேஷன் (ரகசிய ஒளிப்பதிவு) என்கிற பெயரில் மேற்குவங்கத்தில் மேத்யூ சாமுவேல் 2014-ஆம் ஆண்டு நடத்திய ஆபரேஷன் அடிப்படையில் கடந்த திங்களன்று திரிணாமுல் காங்கிரஸின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ., ஒரு முன்னாள் மேயர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே மேத்யூ சாமுவேல், தமிழகத்தில் வெளிக்கொணர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு கொலை வழக்கு, இதனால் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

m

2014-ஆம் ஆண்டு மேத்யூ சாமுவேல், "இம்பெக்ஸ் கன்சல்டன்ஸி சர்வீஸ்' என்கிற கம்பெனியை போலியாக உருவாக்கினார். தமிழக அரசியல்வாதி ஒருவரின் ஊழல் பணத்தை மேற்குவங்கத்தில் முதலீடு செய்யப்போவதாகக் கூறி, மேற்கு வங்க வி.ஐ.பி.க்கள் அனைவரையும் அவர் சந்திக்கிறார். அப்பொழுது அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதன் முக்கிய தலைவர்கள் என அனைவரிடமும் இந்தக் கம்பெனிக்கு உதவி கேட்டு அவர் அணுகுகிறார். அவர்கள் அனைவரும் மேத்யூவிடம் அதற்காகப் பணம் பெற்றுக்கொள்கிறார்கள். அதை அவர் தனது உதவியாளர் ஆப்ரகாம் முலம் ரகசிய கேமரா உதவியுடன் படம் பிடிக்கிறார்.

m

மொத்தம் 52 மணி நேரம் நீளும் இந்தக் காட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களாக இருந்த முகுல்ராய், சௌகாத்தராய், கக்கோலி கோஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்தவரும், தற்பொழுது பா.ஜ.வில் சேர்ந்து மம்தாவைவை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்து மேற்குவங்க சட்டமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவராகியிருப்பவருமான சுவேந்து அதிகாரி மற்றும் அமைச்சர்களாக இருந்த மதன்மித்ரா, சுப்ரதா முகர்ஜி, பிர்காத்ஹக்கீம், இக்பால் முகமது ஆகியோரும், ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த எச்.எம்.எஸ்.மிஸ்ரா, திரிணாமுல் காங்கிரஸின் தலைவராக இருந்த சங்குதேப் பண்டா ஆகியோர் உட்பட 12 பேர் அந்த ரகசிய வீடியோ வில் இடம்பெற்றனர். அவர்கள் அனைவரும் மேத்யூ சாமுவேலிடம் லட்சக்கணக்கான பணம் லஞ்சமாகப் பெற்றனர். அதை ரகசியமாக மேத்யூ சாமுவேல் பதிவு செய்திருந்தார்.

mm

அதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சங்குதேப் பண்டா, மேத்யூ சாமுவேலின் போலி கம்பெனியில் பங்குதாரராக விரும்பினார். இப்பொழுது பா.ஜ.க.வின் தேசிய துணைத்தலைவராக இருக்கும் முகுல்ராய், மேத்யூ சாமுவேலை பணத்துடன் கட்சி அலுவலகத்துக்கே வருமாறு அழைத்தார். இப்படி பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ ஆதாரங்களை மேத்யூ சாமுவேல் வேலை செய்திருந்த டெகல்கா நிறுவனம் வெளியிட மறுத்தது. உடனே மாத்யு சாமுவேல், "நாரதா' என்கிற இணையதளத்தை துவக்கி, அதில் வெளியிட்டார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த டேப்புகள் போலியானவை என மம்தா பானர்ஜி, மேத்யூ சாமுவேல் மீது வழக்கு தொடுத்தார். அதை கோர்ட்டில் எதிர்கொண்ட அவர், அந்த டேப்புகள் அனைத்தும் உண்மை என்றார். அந்த டேப்புகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. சாமுவேலை கைது செய்வதற்கும் தடைவிதித்தது. அந்த டேப்புகளை ஆராய்ந்த சி.பி.ஐ., அவை அனைத்தும் உண்மை என கண்டுபிடித்தது. அதை வைத்து மிரட்டி பா.ஜ.க. முகுல்ராய் மற்றும் சுவேந்து அதிகாரியை பா.ஜ.க. பக்கம் கொண்டுவந்தது. அதன் அடிப்படையில்தான் தற்பொழுது சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறார்கள் சி.பி.ஐ. வட்டாரத்தில் உள்ளவர்கள்.

இதுபற்றி நாம் மேத்யூ சாமுவேலிடம் கேட்டோம். “"இந்த வழக்கில் நான் பல வருடங்கள் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அலைந்து திரிந்திருக்கிறேன். முதலில் நான் படம் பிடித்த ரகசிய ஒளிப்பதிவுகள் பொய் என மம்தா சொன்னார். என்மீது 4 பிரிவுகளில் வழக்கு போட்டு என்னை கைது செய்யவும் முயற்சி செய்தார். அப்பொழுது தலைமறைவாக இருந்த நான், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடமும் எனக்கு உதவியாக செயல்பட்ட ஆபிரகாமிடமும் விசாரணை நடத்தினார்கள்.

n

அதில் முதலில் "ஸ்டிங் ஆபரேஷன்' என்றால் என்ன என நான் விளக்கினேன். இந்த ஆபரேஷன் ஒரே நாளில் செய்துமுடிக்கக் கூடியது அல்ல.… பல நாட்கள் திட்டமிட்டு, ரகசியமாக செய்யப்படும் ஆபரேஷன். இதில் நாங்கள் சந்தித்த நபர்களிடம் லஞ்சமாகக் கொடுத்த தொகையே இரண்டரை கோடி ரூபாயாகும். தற்பொழுது பா.ஜ.க.வில் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சுவேந்து அதிகாரி அப்போது திரிணாமுல் காங்கிரஸில் இருந்தார். அவர், என்னிடம் 5 லட்ச ரூபாய் லஞ்சமாகப் பெற்றார். இந்த வழக்கில் உள்ள விபரங்கள் உண்மையென கண்டறிந்த சி.பி.ஐ., ஒரே ஆண்டிலேயே குற்றபத்திரிகையை தயார் செய்துவிட்டது.

2017-ல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சி.பி.ஐ. 2018-லேயே இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றபத்திரிகையை தயார் செய் துள்ளது. ஆனால் நடவடிக்கை மட்டும் எடுக்கப்படவில்லை. நான் பல முறை சி.பி.ஐ. அதிகாரி களிடம் நடவடிக்கை எடுங்கள் என கேட்டபோதும், சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதை அப்படியே ஊறு காய் பானை போல விட்டுவிட் டார்கள்.

இதற்கிடையே இந்த வழக் கில் சம்பந்தப்பட்ட முகுல்ராய், பா.ஜ.க.வில் சேர்ந்து அதன் தேசிய துணைத்தலைவ ராகிவிட்டார். சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியின் அரசின் எதிரியாக பா.ஜ.க.வில் மேற்குவங்காள முகமாகவே மாறிவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த ஆபரேஷனில் தொடர்புடைய சிலர், பா.ஜ.க.வுக்கு மாறிவிட்டார்கள். அவர்களில் ஒருசிலர் மறுபடியும் திரிணாமுல் காங்கிரஸுக்கே திரும்பிவிட்டனர். ஆனால் நான் எனது முயற்சிகளைக் கைவிட வில்லை. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 3 வருடங்களாக சி.பி.ஐ. தொடர்ந்து தாமதம் செய்துவந்தது. இப்பொழுது மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் கவர்னர் ஜெகதீப் தனகரிடம் அனுமதி பெற்று பிர்காத் கக்கீம் சுப்ரதா முகர்ஜி ஆகிய அமைச்சர்களும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன்மித்ரா மற்றும் கொல்கத்தா மாநகர முன்னாள் மேயர் சொவான் சட்டோபாத்யாயா ஆகியோரையும் கைது செய்துள்ளது.

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் நான் கேட்டபோது, இந்த வழக்கில் தொடர்புடைய இந்த அமைச்சர்களை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி கேட்டு 20 கடிதங்களை நாங்கள் கொடுத்தோம். அதை அவர் மதிக்கவில்லை. அதனால்தான் வழக்கு தாமதமானது. அதற்குப் பிறகு கவர்னரிடம் அனுமதி கேட்டோம். அவர், தேர்தல் முடிந்த பிறகுதான் அனுமதி தந்தார். இப்பொழுது நாங்கள் கைது நடவடிக்கைகளில் இறங்கினோம் என்கிறார்கள் இந்த வழக்கில் முகுல்ராய் சாட்சியமாக காண்பிக்கப்பட்டுள்ளார். சுவேந்து அதிகாரி கைது செய்யப்படாதது தவறான செயல். அவர் என் கையிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாகப் பெற்றார். அதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளது என்கிறார் மேத்யூ சாமுவேல்.

எல்லாமே அரசியல்ரீதியாக நடக்கிறது. இதே மேத்யூ சாமுவேல்தான் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் ஓம்பகதூர் என்கிற காவல்காரர் மற்றும் ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த கனகராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், அவர் கட்டளையிட்ட பிறகுதான் கொடநாடு கொள்ளை நடந்தது. பிறகு அந்தக் கொள்ளைக்கு சாட்சியாக இருந்த கனகராஜ் கொல்லப்பட்டார் என குற்றம்சாட்டினார். அதை நக்கீரன் வெளியிட்டது. மேத்யூ சாமுவேலை எதிர்த்து இதைப்பற்றி இனி பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் தடை வாங்கினார். அதன்பிறகு அந்த கொள்ளை தொடர்பான வழக்கை வெகுவேகமாக நடத்தி, முடிக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்.

இதைப்பற்றி சொல்லும் மேத்யூ சாமுவேல், "இந்த கொள்ளை வழக்கிற்கும் டிரைவர் கனகராஜ் கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது, அதை எடப்பாடி மூடி மறைத்து அந்த வழக்கை முடிக்க திட்டமிட்டு செயலாற்றினார். இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது. இதே கொடநாடு வழக்கில் உண்மைகள் வெளியே வரவேண்டும் என மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பலமுறை பேசியுள்ளார். இப்பொழுது கொடநாடு கொலை வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டுவர ஒரு விசாரணைக் கமிஷனை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்'' என்றார்.

nkn220521
இதையும் படியுங்கள்
Subscribe