மல்லை தமிழ்ச் சங்கத்தின் 15ஆம் ஆண்டு விழா, கடந்த புதன்கிழமை மாமல்லபுரம் மரகப் பூங்கா திட-ல் நடைபெற்றது. விழாவில் பெருந்தமிழன் விருதினை வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனர் விசுவநாதனுக்கும், பெருந்தச்சன் விருதினை மரபுக் கட்டடக் கலைஞர் பா.குமரேசனுக்கும், மரமல்லன் விருதினை கோபூகான் ஷிட்டோரியோ கராத்தே தற்காப்புக்கலை தலைவர் ஷிகான் கனகராஜுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில், பேராசிரியர் அப்துல்காதர் தலைமையில் பட்டிமன்றம் கலகலப்பாக நடந்தது. விருது விழாவில் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா பேசியபோது, ""இதே இடத்தில் 1945ஆம் ஆண்டு கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மாமல்லபுரத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக கவிஞர்களோடு கடற்கரையில் அமருகிறார். அப்போது கோபாலகிருஷ்ணன் பாரதி, ""விதியின் எழுத்தை கிழிச்சாச்சு. விட்ட குறை வந்து தொட்டாச்சு'' என்ற கவிதையை வாசித்தபோது, கிருஷ்ணமூர்த்தி உட-ல் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டது. அந்த வரிகள் ஒரு மந்திரச் சொல்போல் மின்னல் பாய்ந்ததைப்போன்று இயங்கிக்கொண்டிருந்தது. நான் போன பிறவியில் இந்த பகுதியில் ஏதோ செய்யத் தவறிய பணிகளைச் செய்துமுடிக்க வந்திருப்பதாகத் தன்னுடைய சிவகாமி சபதத்தை எழுதத் தொடங்குவார். ஐயா கிருஷ்ணமூர்த்தி சொன்னதைப்போன்று போன ஜென்மத்தில் நாம் தவறவிட்ட சில பணிகளை நிறைவு செய்தவற்காக மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக நான் இருந்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வருகை தந்து, வேந்தர் கோ.விஸ்வநாதனுக்கே விருது வழங்கும் நிகழ்வாக இது அமைந்திருக்கிறது'' என்றார்.
சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ""பிரிட்டிஷ்காரர்கள் இந்து எனப் பெயர் வைத்தார்கள். ஆனால் எல்லோரையும் இந்துக்களாக ஏற்றுக்கொண்டார்களா? இல்லை. ஒடிசா, உத்திரப்பிரதேசத்தில் தமிழ்நாட்டைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் எடுத்த முயற்சி சமூகநீதி. தமிழ்நாட்டில் மொத்த பட்டதாரிகள் எண்ணிக்கை 53 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. 70 சதவீதத்திற்கு மேல் பெண் பட்டதாரிகள் எண்ணிக்கை இருக்கிறது. இதனால்தான் தமிழ்நாட்டின் மீது கோபம் கொள்கிறார்கள். சங்கராச்சாரியாரிடம் ஆசி வாங்கச் சென்ற பொன்னாரை தரையில் உட்கார வைத்து, திருநீறைப் போட்டு ஓடு என்றார். கவர்னராக இருந்த தமிழிசை சென்றபோது சால்வையைத் தூக்கிப்போடுகிறார். ஆனால் எச்.ராஜா சென்றபோது சமமாக நாற்கா- போட்டு உட்கார வைத்தார். அண்ணா அறிவாலயம் வந்தால், தான் உட்காரும் அதே அளவு நாற்கா- போட்டு பொன்னாரையும், தமிழிசையையும் உட்கார வைப்பார் மு.க.ஸ்டா-ன். சாதி, மதம், கட்சியைப் பார்ப்பதில்லை. திராவிடக் கொள்கை என்றால் இதுதான்'' என்றார்.
வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனர் கோ.விசுவநாதன் பேசுகையில், ""என்றைக்கு நாம் வளர்ந்த நாட்டோடு போட்டிபோட முடியும்? நமக்கு மேலே சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாலே நாடுகள்தான் இருக்கின்றன. இன்னும் மேலே போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் தனிநபர் வருமானம் என்று பார்த்தால் நாம் 140வது இடத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம் அடிப்படைக் கல்வி இல்லாததுதான். பள்ளிக்கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் கிடைக்க வேண்டும். உயர்கல்வியில் நாம் பின்தங்கிய நாடாக இருக்கிறோம். உயர்கல்வியில் நாம் 27 சதவீதம்தான், அமெரிக்காவில் 90 சதவிகிதம், ஐரோப்பிய நாடுகளில் 65ல் இருந்து 75 சதவிகிதம் வரை இருக்கிறது. ஆஸ்திரே-யா, தென்கொரியா இரண்டு நாடுகளும் 100 சதவிகிதம் இருப்பதாக சொல்கிறார்கள். நாம் அந்த நிலைமைக்கு வரமுடியுமா என்றால் முடியும். அரசுகள் மனது வைக்க வேண்டும்'' என்றார்.
விழாவில் செந்தமிழின் சிகரச் சிறப்பை பந்தி வைப்பதில் முந்தி வருபவை "கருத்துக்களால் இமயல் தொடும் இலக்கியங்களே! கவித்துவத்தால் இமயம் தொடும் இலக்கியங்களே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. பேராசிரியர் அப்துல்காதர் நடுவராக இருக்க, பேராசிரியர் விசயகுமார், பேராசிரியை ரேவதி, கவிஞர் இனியவன், புதுகை ச.பாரதி ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் கலகலப்பாக சென்றது.
விருது விழாவினை மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். தமிழறிஞர்கள், இளைஞர்கள், பெண்கள் என திரளாக வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.