தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான வேலூர், திருப் பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்படும் என ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திரதின விழாவில் அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு வர வேற்புகள் பலமாக இருந்தாலும் அரக்கோணம், ஆற்காடு பகுதிகளில் வேறு மாதிரியான குரல் கள் ஒலிக்கின்றன. மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. நிர்வாக ரீதியாக மாவட்டம் பிரித்து நடைமுறைக்கு வர ஓராண்டுக்கு மேலாகும் நிலையில்... ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., கட்சி தொடங்கும் எதிர்பார்ப்பில் உள்ள ரஜினி மக்கள் மன்றம்வரை மாவட்டத்தின் முதல் மா.செ. பதவியைப் பிடிக்க இப்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளார்கள் என்கிற விபரம் கிடைக்க விசாரணையில் இறங்கினோம்.
அ.தி.மு.க.
மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது அ.தி.மு.க. தலைமை. அதன்படி கிழக்கு மாவட்ட செயலாளராக அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவியும், மேற்கு மா.செ.வாக அமைச்சர் வீரமணியும் உள்ளனர். தி.மு.க.வைப் போல் மத்திய மாவட்டம், மாநகரம் என பிரித்து நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டுமென கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர் ஜெ. உயிருடன் இருந்த போதிலிருந்தே கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. இந்நிலையில் தற்போது "மாவட்டம் பிரிக்கப்படும்' என அறிவித்துள்ளதால் பலரும் மா.செ. பதவியை பிடிக்க எடப்பாடி, ஓ.பி.எஸ்., தங்கமணி, வேலுமணி என வலம்வரத் துவங்கியுள்ளார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டமாக முறைப் படி அறிவிக்கப்பட்டதும் மா.செ.வாக தானே இருக்க வேண்டுமென தற்போதைய மா.செ. ரவி, எடப்பாடியிடம் நெருக்கமாகவுள்ளார். அதேநேரத்தில் அந்த பதவியை எப்படியும், தான் வாங்கிவிட வேண்டுமென அமைச்சர் வீரமணி ஆதரவில் முன்னாள் மா.செ. பூட்டுதாக்கு ஏழுமலை, ஓ.பி.எஸ். ஆதரவில் சோளிங்கர் பெல்.கார்த்திகேயன், முன்னாள் சோளிங்கர் சேர்மன் விஜயன் போன்றவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டமானாலும் கட்சியின் மா.செ. பதவியை தன்னைத் தவிர வேறு யாருக்கும் தரமாட்டார்கள், தரவும் விடமாட்டேன் என்கிற நினைப்பில் உள்ளார் வீரமணி. ஒரு வேளை மா.செ. மாற்றும் நிலை வந்தால் திருப் பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷ், திருப்பத் தூர் ந.செ. டி.டி. குமார் இருவரில் ஒருவரை அந்த பதவியில் அமர்த்த முடிவு செய்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
வேலூர் மாவட்டம் அமைந்ததும் அந்த மா.செ. பதவியை பிடிக்க குடியாத்தம் ந.செ. பழனி, அமைச்சர் தங்கமணி ஆதரவில் வாங்கிவிடலாம் என இப்போதே வலம் வருகிறார். வேலூர் எம்.பி. தேர்தலில் ஏ.சி.எஸ்சின் வலதுகரமாக தேர்தல் வேலை செய்த வேலூர் மேற்கு மாவட்ட ஐ.டி. விங் மாவட்டச் செயலாளராகவுள்ள ஜனனி சதீஷ்குமார், அந்த பதவியை வாங்கிவிட வேண்டுமென எடப்பாடியை வலம்வருகிறார். துணைமுதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் நண்பரும், காட்பாடி தொகுதியில் துரைமுருகனை இரண்டுமுறை எதிர்த்து தோல்வியை சந்தித்தவருமான முன்னாள் மா.செ. அப்பு பெரும் முயற்சி எடுத்துவருகிறார். வேலூர் -திருவண்ணாமலை பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அணைக்கட்டு வேலழகன் அமைச்சர் வீரமணியை சுற்றிச் சுற்றி வருகிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் விஜய்யும் இப்போதே காய் நகர்த்துகிறார்.
தி.மு.க.
வேலூர் மாவட்டத்தை கிழக்கு, மேற்கு, மத்தி, மாநகரம் என நான்காகப் பிரித்து மா.செ.க்களை தி.மு.க. தலைமை நிய மித்துள்ளது. மேற்கு மா.செ. முத்தமிழ்செல்வி மேற்கு மாவட்டத் துக்குள் வருவதால் அவரே திருப்பத்தூர் மாவட்ட செயலாள ராகிவிடுவார். மத்திய மாவட்டம் வேலூர் மாவட்டமாகிவிடுவதால் தற்போதைய மா.செ. அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் மா.செ.வாகிவிடுவார். ராணிப்பேட்டை மாவட்டமாகும்போது கிழக்கு மா.செ.வாக வுள்ள ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி மா.செ.வாகிவிடுவார். தற்போது வேலூர் மாநகர செயலாளராகவுள்ள கார்த்தி எம்.எல்.ஏ. அப்படியே நியமிக்கப்படுவார் என கட்சியின் ஒரு தரப்பினர் சொல்லிவருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரச்சினை வராது. வேலூர் மாவட்டத்துக்கும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் ஏகப்பட்ட போட்டியுள்ளது' என்கிறார்கள்.
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வியை மாற்ற வேண்டும் என பல தரப்பு முயற்சி செய்துவருகிறது. அதில் முக்கியமானவர்கள் முன்னாள் மா.செ. தேவராஜ், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, அவரது அண்ணனும் மாவட்ட பொரு ளாளருமான அண்ணா அருணகிரி, திருப்பத் தூர் ந.செ. ராஜேந்திரன், நாட்றாம்பள்ளி முன்னாள் எம். எல்.ஏ. சூரிய குமார் போன்ற வர்கள் முயல் கின்றனர். திருப் பத்தூர் மாவட் டம் என்கிற மாவட்டம் அதி காரப்பூர்வமாக உருவாகும்போது தான்தான் அதன் முதல் மா.செ. வாக இருக்கவேண்டும் என இவர்கள் கழகப் பொருளாளர் துரைமுருகனையும், முன்னாள் அமைச்சரும், திருவண்ணா மலை மா.செ.வுமான வேலு வையும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். துரைமுருகன் ஆதரவில் தேவராஜ் கடுமையாக முயற்சி செய்துவருகிறார்.
வேலூர் மத்திய மா.செ.வாகவுள்ள அணைக் கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், இந்த பதவியை தக்க வைத்துக்கொள்வார் என்றாலும், மாநகர மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான கார்த்தியை பல வகையிலும் அமுக்கியே வைத்திருப்பதாக குற்றம்சாட்டும் அந்தத் தரப்பு, அதனால் மத்திய மா.செ. பதவியை குறிவைக்கிறார் என்கிறது. அதேபோல், "மாவட்டத்தில் கட்சியினரிடம் உங்களுக்கு ஒரு பிடிமானம் இருக்கவேண்டும்; அதனால் மா.செ. பதவியை கேளுங்கள்' என வேலூர் எம்.பி.யும், துரைமுருகன் மகனுமான கதிர்ஆனந்த்திடம் இப்போதே தூபம் போடத் துவங்கியுள்ளார்கள் அவரது ஆதர வாளர்கள்.
தற்போது இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என நியமித்து கட்சியை வளர்த்துவருகிறது பா.ம.க. அதனால் பெரும்பாலும் இங்கு போட்டியில்லை. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மா.செ.வாக சோளிங்கர் ரவி உள்ளார். மாவட்டம் பிரிக்கப்பட்டதும் ராணிப்பேட்டை மா.செ.வாக ரவி நியமிக்கப்படுவார். அதேபோல் வேலூர் மாவட்ட செயலாளர் பதவியை நீதி என்கிற அருணாச்சலம் பிடிக்க முயல்கிறார். அவருடன் மாநகர செயலாளர் சுதாகர், குடியாத்தம் ஒன்றிய நிர்வாகி பாஸ்கர், திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக திருப்பத்தூர் நகர நிர்வாகி யாகவுள்ள ஆதேஷ்குமார் ஆகியோர் பதவியை பிடிக்க இப்போதே தலைமையை சுற்றிச் சுற்றி வருகின்றனர்.
-து. ராஜா