ஆணா? பெண்ணா? வரிந்துகட்டும் கட்சிகள்! -திண்டுக்கல் மேயர் ரேஸ்!

d

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிபோட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை வாங்கிக் குவித்திருக்கின்றன. இருந்தாலும் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதால் பண பலம் உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருந்துவருகிறார்கள்.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக ஜெ. அறிவித்தார். அப்படி இருந்தும்கூட மாநகராட்சிக்கான வரைமுறையை விரிவுபடுத்த ஜெ. அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே 60 வார்டுகளில் செயல்படக்கூடிய மாநகராட்சி, 48 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதிலும் திண்டுக்கல் மாநகராட்சி தற்போதுவரை பெண் மேயருக்கு ஒதுக்கியிருக்கிறது. இருந்தாலும், பொதுப் போட்டிக்கு மாற்றும் வ

கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிபோட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை வாங்கிக் குவித்திருக்கின்றன. இருந்தாலும் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதால் பண பலம் உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருந்துவருகிறார்கள்.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக ஜெ. அறிவித்தார். அப்படி இருந்தும்கூட மாநகராட்சிக்கான வரைமுறையை விரிவுபடுத்த ஜெ. அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே 60 வார்டுகளில் செயல்படக்கூடிய மாநகராட்சி, 48 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் மேயர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதிலும் திண்டுக்கல் மாநகராட்சி தற்போதுவரை பெண் மேயருக்கு ஒதுக்கியிருக்கிறது. இருந்தாலும், பொதுப் போட்டிக்கு மாற்றும் வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சும் அடிபட்டுவருவதால், ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளிலுள்ள ஆண், பெண் இருவருமே மேயருக்கான ரேஸில் குதித்துவருகிறார்கள்.

dd

ஆளும்கட்சியான தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த முறை 48 வார்டுகளில் 35 வார்டுகளையாவது கைப்பற்றி, தனி மெஜாரிட்டியுடன் முதன்முதலில் மேயர் சீட்டில் உட்கார வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரடியாகவே களம் இறங்கி உ.பி.க்களிடமும், மகளிர் அணியினரிடமும் விருப்ப மனுக்களை வாங்கி இருக்கிறார். இதில் பெண்களுக்கு மேயர் பதவியை ஒதுக்கும் பட்சத்தில், பெண் மேயர் வேட்பாளராக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், ஐ.பி.யின் தீவிர ஆதரவாளருமான ஜெயனின் மனைவி சித்ரா, 31-வது வார்டில் களமிறங்கத் தயாராகிவருகிறார். அந்த அளவுக்கு வார்டு மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக்கொடுத்து கொரோனா காலத்தில் நிவாரண உதவிகளையும் வீடு தேடிக்கொடுத்து, மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்திருப்பதால் மேயர் ரேஸில் சித்ரா நம்பிக்கையுடன் வலம்வருகிறார். அதுபோல் முன்னாள் ஒன்றியச் செயலாளர் பெருமாள்சாமி மனைவி சாந்தி, 9-வது வார்டில் போட்டிபோட மனு கொடுத்து மேயர் ரேஸிலும் இருந்துவருகிறார்.

அதோடு முன்னாள் கவுன்சிலர்களான அருள்வாணி, சகாயமேரி என, சில மகளிர் அணியினரும் விருப்ப மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆண் மேயராக இருந்தால் கடந்த 20 வருடமாகக் கட்சிப் பணியாற்றிக்கொண்டு ஐ.பி.யிடம் விசுவாசமாக இருந்துவரும் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஜெயன், மேயர் ரேஸில் இருந்துவருகிறார். அதுபோல் மாநகராட்சி வார்டுகளில் கட்சிப் பணியில் தீவிரம் காட்டி கட்சியை வளர்த்துவரும் நகரச் செயலாளர் ddராஜப்பாவும் மேயர் ரேஸில் உள்ளார். முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது கட்சிக்காரர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடராஜனும் மேயர் ரேஸில் இருக்கிறார். ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சந்திரசேகர் உட்பட சில உ.பி.க்களும் மேயர் ரேஸில் இருந்துவருகிறார்கள். இருந்தாலும் அமைச்சர் ஐ.பி.யின் கண் பார்வை யார் பக்கம் திரும்புமோ, அவங்கதான் மேயர் வேட்பாளராக வர முடியும். அதிலேயும்கூட யாரும் எதிர்பார்க்காத ஒரு புதுஆளைக் கொண்டுவரப் போவதாகவும் உ.பி.க்கள் மத்தியிலும் பேசப்பட்டுவருகிறது.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கட்சிப் பொறுப்பாளர்களிடமும், மகளிரணியினரிடமும் விருப்ப மனு வாங்கியிருக்கிறார். இதில் முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்து 9-வது வார்டில் விருப்ப மனு கொடுத்து மேயர் ரேஸில் இருந்துவருகிறார்.

முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் தீவிர ஆதரவாளரான அபிராமி, கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிமுருகனின் மனைவி உமாதேவி, 31-வது வார்டில் களமிறங்கி மேயர் ரேசுக்கு வர இருக்கிறார். முன்னாள் கவுன்சிலர் சுருளிவேல் மனைவியும், மகளிர் அணி இணைச்செயலாளருமான ஆலயம் 5-வது வார்டில் விருப்ப மனு கொடுத்து மேயர் ரேஸில் உள்ளார். மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலர் நாகராஜனின் மனைவியுமான ஜெயலட்சுமியும் மேயர் ரேஸில் இருந்துவருகிறார்.

அதுபோல், ஆண் மேயராக இருக்கும் பட்சத்தில், முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகனும், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான ராஜ்மோகன், மாநகரில் கட்சியை வளர்த்து வந்ததன் மூலம் 4-வது வார்டில் விருப்ப மனு கொடுத்து மேயர் ரேஸில் இருந்துவருகிறார்.

முன்னாள் மேயர் மருதராஜ், அவருடைய மகன் பிரேம் மற்றும் அபிராமி, கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிமுருகன், முன்னாள் கவுன்சிலர் சோனா சுருளிவேல் ஆகியோரும் மேயர் ரேஸில் இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாநகர மேயர் பதவியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் போட்டி சூடுபிடித்து வருகிறது. மற்ற எதிர்க்கட்சிகள் கவுன்சிலர் சீட்டுகள் கூடக் கிடைத்தால் போதுமே என்று நினைக்கிறார்கள்.

nkn181221
இதையும் படியுங்கள்
Subscribe